முகப்பு > ஆன்மீகம் > உயிர்வாழும் ஆசை எதற்கு

உயிர்வாழும் ஆசை எதற்கு

உயிர்வாழும் ஆசை எதற்கு* ஒரு மடையன் வாழ்நாள் முழுவதும் அறிஞன் ஒருவனோடு
சேர்ந்தபோதிலும் அவன் சத்தியத்தை அறியமாட்டான். எப்படி
குழம்பின் ருசியை கரண்டி அறியாதோ அப்படித்தான்.* யார் ஒருவர் முட்டாள்களின் நட்பில் வாழ்கிறாரோ அவர்
அதிகக் காலம் துன்பப்படுவார். மடையர்கள் நட்பு
எதிராளிகளின் நட்பைவிட மிகவும் வேதனை தரும்.

* விழித்திருப்பவனுக்கு இரவு நெடியதாகும். களைத்து
இருப்பவனுக்கு வழி நெடுந்தூரமாகும். அதுபோல நல்லறத்தை
அறியாத மூடனுக்கு பிறப்பு இறப்பாகிய வாழ்க்கை
எல்லையற்றதாகும்.

* செல்வமானது மூடனை அழித்துவிடும். ஆனால் வீடு பேற்றில்
நாட்டம் உள்ளவனை அது அழிப்பதில்ல. சுக போகங்களில்
மேன்மேலும் விருப்பமுள்ள மூடன் மற்றவர்களை அழிப்பதோடு கூட
தன்னையும் அழித்துக் கொள்கிறான்.

* மெய்யை பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் காணும் மருள்
உணர்வு உள்ளவர்கள் ஒரு போதும் மெய்ப்பொருளை அடைவதில்லை.
அவர்கள் வீண் எண்ணங்களில் உழல்வார்கள்.

* கருத்துடன் தியானத்தில் ஆழ்ந்தவராயும், பற்றற்ற
விடுதலையில் திளைப்பவராயும் உள்ள மெய்யறிவு பெற்றவரைக்
கண்டு தேவர்களும் பொறாமைப்படுகிறார்கள்.

* பிறவி, மூப்பு, பிணி, சாவு போன்ற மனித வாழ்க்கையில்
ஏற்படும் யாவையும் துக்கம் நிறைந்தவை. துக்கத்தின்
காரணத்தைக் கண்டுபிடித்து அதை நீக்கினால் துக்கம் விலகும்.
துக்கத்திற்குக் காரணம் உயிர்வாழ வேண்டுமென்னும் ஆசையே.
இந்த ஆசை உலகத்திலிருந்து தனித்தன்மை உள்ளனவாக எண்ணும்
அறியாமையின் விளைவே. ஆதலால் மெய்யுணர்வு பெற்றால் அறியாமை
ஒழியும். ஒழுக்க நெறியில் நின்றால் ஆசை ஒழியும். துன்பம்
நீங்கும.

  1. இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
  1. No trackbacks yet.