உங்களுக்காக

ஹார்ட் டிஸ்க்கில் சேரும் குப்பை பைல்களை அகற்றிடுக

ஏப்ரல் 19, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

ஹார்ட் டிஸ்க்கில் சேரும் குப்பை பைல்களை அகற்றிடுக

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பைல்களை ஆசை ஆசையாய் உருவாக்குவது மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் செயல் தான். ஆனால் அந்த பைல்கள் தேவைப்படாத போது அவற்றை ஹார்ட் டிஸ்க்கில் இருந்து அழித்து விட வேண்டும். 60 வயது வந்த பின்னும் 25 வயதில் போட்ட சட்டையை தூக்கி எறியாமல் சென்டிமென்ட்டாக சிலர் வைத்திருப்பார்கள். அதே போல இந்த பைல் எல்லாம் நான் கம்ப்யூட்டர் வாங்கிய போது உருவாக்கியது என ஹார்ட் டிஸ்க்கிலேயே வைத்திருக்கக் கூடாது. ஒரு சிலர் அவ்வப்போது இன்டர்நெட் பிரவுசிங்கில் ஏற்படும் தற்காலிக பைல்களைக் கூட வைத்திருப்பார்கள். இறுதியில் ஒரு நாளில் ஹார்ட் டிஸ்க் குறித்த எச்சரிக்கை கிடைக்கும். இடம் காலியாகிக் கொண்டிருக்கிறது. பைல்களை நீ எடுக்கிறாயா அல்லது நான் காலி செய்திடவா என்றெல்லாம் எச்சரிக்கை கிடைக்கும். இதை எல்லாம் அவ்வப்போது எப்படி காலி செய்திட வேண்டும்; ஹார்ட் டிஸ்க்கை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதனை இங்கு பார்க்கலாம்.

ரீசைக்கிள் பின்: நாம் அழிக்கும் பைல்கள் எல்லாம் ரீ சைக்கிள் பின்னில் சென்று தங்குகின்றன. இதனை அவ்வப்போது காலி செய்திடாவிட்டால் அவை ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடத்தைக் கைப்பற்றிவிடும். எனவே திரையில் தெரியும் ரீசைக்கிள் பின் ஐகானில் இரு முறை கிளிக் செய்திடுங்கள். அதில் அழித்த பைல்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். இதில் ஏதாவது தேவை என்றால் உடனே ரெஸ்டோர் பிரிவில் கிளிக் செய்தால் அந்த பைல் எந்த டைரக்டரியிலிருந்து எடுக்கப்பட்டதோ அதில் மீண்டும் வைக்கப்படும். ரீசைக்கிள் பின்னில் உள்ள பைலை அங்கிருந்தவாறே படித்தறிய முடியாது. மற்ற பைல்களை டெலீட் பட்டன் அழுத்தி நீக்கிவிட வேண்டும். இதனை வாரம் ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும்.

டெம்பரரி பைல் நீக்கம்: தற்காலிகமாகப் பல பைல்கள் கம்ப்யூட்டர் இயக்கத்தில் புரோகிராம்களால் உருவாக்கப்படும். இவை அந்த புரோகிராம் இயங்கும்போது மட்டுமே தேவைப்படும். பொதுவாக இந்த டெம்பரரி பைல்களுக்கென ஒவ்வொரு டிரைவிலும் தனி டைரக்டரி இருக்கும். அதனைக் கண்டறிந்து இந்த பைல்களை நீக்கிவிடலாம். இவற்றை மீண்டும் வேண்டுமா என்றெல்லாம் எண்ணாமல் நீக்கிவிடலாம். இதே போல இன்டர்நெட் பிரவுசிங் போது பல டெம்பரரி பைல்கள் டிஸ்க்கில் சேரும். இவற்றையும் நீக்குவது நல்லது.

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 பயன்படுத்துபவராக இருந்தால் Tools கிளிக் செய்து அதில் Internet Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் Browsing History என்ற பிரிவை நோக்கவும். அதில் கீழாக உள்ள Delete என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அதன் பின் Delete Files என்ற பட்டனில் கிளிக் செய்தால் அனைத்து டெம்பரரி இன்டர்நெட் பைல்களும் அழிந்துவிடும்.

சிஸ்டம் ரெஸ்டோர்: சில வேளைகளில் கம்ப்யூட்டர் சிஸ்டம் கிராஷ் ஆகிவிட்டது என்றால் இதற்கு முன்னர் கம்ப்யூட்டர் இருந்த நிலைக்குக் கொண்டு செல்லும் வசதியே சிஸ்டம் ரெஸ்டோர் என்பதாகும். ஆனால் ஒவ்வொரு முறை ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்கப்படுகையிலும் ஹார்ட் டிஸ்க்கில் நிறைய இடத்தை இந்த வசதி எடுத்துக் கொள்கிறது. நமக்கு கடைசியாக இருந்த ரெஸ்டோர் பாய்ண்ட்டே போதுமானது என்பதால் அதற்கு முந்தைய ரெஸ்டோர் பாய்ண்ட்களை நீக்கிவிடலாம். இதனால் கணிசமான ஹார்ட் டிஸ்க் இடம் மீட்கப்படும். இதற்கு Control Panel சென்று அதில் System என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் டேப்களில் System Restore என்ற டேப்பில் கிளிக் செய்திடுங்கள். இதில் Turn off system restore on all drives என்ற இடத்தில் டிக் அடித்து அப்ளை என்பதில் கிளிக் செய்தால் அனைத்து ரெஸ்டோர் பாய்ண்ட்களும் காலியாகிவிடும். இதன்பின் ஸ்லைடரைப் பயன்படுத்தி சிஸ்டம் ரெஸ்டோர் வசதிக்கு எவ்வளவு ஸ்பேஸ் வேண்டும் என்பதனை முடிவு செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டிஸ்க் கிளீன் அப்: விண்டோஸ் தரும் இந்த வசதியைப் பயன்படுத்தி உங்களுக்கு இனிமேல் தேவையற்ற விண்டோஸ் பைல்களையும் புரோகிராம்களையும் நீக்கலாம். இதனைச் செயல்படுத்த Start மெனு சென்று அதில் Programs> Accessories> System Tools> Disk Cleanup என வரிசையாகச் செல்லவும். டிஸ்க் கிளீன் அப் விண்டோவில் இரண்டு டேப்களைக் காணலாம் –– Disk Cleanup இவற்றில் டிஸ்க் கிளீன் அப் டேப்பில் கிடைக்கும் விண்டோவில் கீழேயுள்ள பிரிவுகளின் எதிரே டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

Downloaded program files
Temporary internet files
Recycle bin
Temporary files

இதன் பின் டேப் அழுத்தி அதில் கிடைக்கும் விண்டோவில் தேவையற்ற விண்டோஸ் பைல்களை நீக்கலாம்.
மேலும் இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தாத புரோகிராம் பைல்களையும் நீக்கலாம். அனைத்தையும் தேர்ந்தெடுத்த பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். அதன்பின் டிஸ்க் கிளீன் அப் செயல்பாட்டினை மேற்கொள்ளவா என்று கம்ப்யூட்டர் கேட்கும் போது பட்டனில் அழுத்தினால் நீங்கள் தேர்ந்தெடுத்தது போல் பைல்கள் நீக்கப்படும்.

டிஸ்க் டிபிராக்மென்டர்: இதன் மூலம் ஹார்ட் டிஸ்க்கில் பதியப் பட்ட பைல்களை முறையாக அடுக்கிப் பதிந்து வைத்திட முடியும். இதனால் சிதறிய நிலையில் உள்ள பைல்கள் ஒன்று சேரும். ஹார்ட் டிஸ்க்கில் இடம் மிச்சமாகும். இதற்கு Start மெனுசென்று பின் Programs> Accessories> SystemTools> Disk Defragmenter எனத் தேர்ந்தெடுக்கவும். டிபிராக் பணியினைத் தொடங்கும் முன் அது குறித்த ஹெல்ப் பைல்களை ஒரு முறை படித்துவிடவும். ஒரு டிஸ்க்கில் டிபிராக் செய்வதாக இருந்தால் அதன் கொள்ளளவு திறனில் 15% இடம் காலியாக இருக்க வேண்டும். இல்லை எனில் டிபிராக் செய்வதில் பிரச்னை இருக்கும். டிபிராக் செய்கையில் வேறு எந்த புரோகிராமும் இயங்கக் கூடாது. பின்னணியில் திறக்கப்பட்டுள்ள அனைத்து புரோகிராம்களையும் நிறுத்த வேண்டும். டிபிராக் முடிந்தவுடன் டிஸ்க்கில் காலி இடம் அதிகரித்திருப்பதனை நீங்கள் காணலாம். கம்ப்யூட்டர் இயக்கத்தின் வேகமும் கூடுதலாக இருப்பதை உணரலாம்

பகுப்புகள்: கம்ப்யூட்டர் செய்தி

0 மறுவினைகள் இது வரை ↓

  • இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்.

கருத்துத் தெரிவிக்கவும்