தொகுப்பு

Archive for அக்டோபர், 2008

யு-ட்யூப் மூவிகளை பிரசன்டேஷன் ஸ்லைடில் காட்ட

அக்டோபர் 29, 2008 vayal மறுமொழியவும்

யு-ட்யூப் மூவிகளை பிரசன்டேஷன் ஸ்லைடில் காட்ட
யு–ட்யூப் தளத்தினைப் பார்த்துக் கொண் டிருக்கையில் நல்லதொரு படம் ஒன்று உங்கள் கவனத்தை ஈர்க்கிறது. அதனை நீங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் பிரசன்டேஷன் பேக்கேஜுக்கு சரியான ஒரு இணைப்பாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள். இதனை எப்படி உங்கள் பேக்கேஜில் இணைக்கலாம் என்று பார்ப்போமா?

முதலில் உங்கள் கவனத்தைக் கவர்ந்த யு–ட்யூப் மூவியை டவுண்லோட் செய்திடவும். இதனை உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவில் பதிந்து சேவ் செய்திடவும். பெரும்பாலான மூவி பைல்கள் பிளாஷ் வீடியோ பார்மட்டில் இருக்கும். டவுண்லோட் செய்த மூவியை வேறு எந்த பொதுவான பார்மட்டுக்கு மாற்றவும். எடுத்துக் காட்டாக ..wmv (windows media video file), avi (windows video file)  அல்லது .mpeg (movie file)  என எந்த பார்மட்டாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதன் பின் எந்த பிரசன்டேஷன் பேக்கேஜில் இதனை இணைக்க வேண்டுமோ அதனைத் திறந்து கொள்ளவும். Read more…

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பாதுகாப்பான வழிகள்

அக்டோபர் 29, 2008 vayal 2 பின்னூட்டங்கள்

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பாதுகாப்பான வழிகள்
உலகத்திலேயே மிகவும் ஆபத்தான இடம் எது? என்று என் மாணவர்களை சென்ற வாரம் கேட்டபோது ஒவ்வொருவரும் ஒன்றைச் சொன்னார்கள். ஒரு மாணவி புத்திசாலித்தனமாக ஒன்றைச் சொன்னவுடன் எல்லாரும் அதனை ஒத்துக் கொண்டார்கள். அது – இன்டர்நெட் எனும் இணைய வெளி.

ஆம், இன்றைக்கு வருகின்ற வைரஸ் செய்திகள், இமெயில் ஏமாற்று வேலைகள், ஸ்பைவேர் மூலம் தகவல் திருட்டு, கிரெடிட் கார்ட் தகவலெடுத்து பண மோசடி, ஆபாச படங்களை ஒட்டி வெட்டி பயமுறுத்தல் என்றெல்லாம் செய்தி வருகையில் உலகிலேயே இணைய வெளி தான் ஆபத்தானது என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதன் ஆபத்தை உணர்ந்து ஒரு சிலர் நமக்கு எதற்கு வம்பு? இப்படி ஓர் ஆபத்தின் மூலம் வரும் அறிவுத் தேடல்கள் எல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கவும் செய்கின்றனர். இவர்களை மன்னிக்கலாமா? வேண்டாமா? என்ற கேள்விக்குள் இறங்குமுன் இந்த துன்பங்களில் இருந்து ஏன் விடுதலை கிடைக்காது? என்ற கேள்விக்கான விடையைப் பார்க்கலாமே. Read more…

ஜஸ்ட் தெரிந்து கொள்ளலாமே!

அக்டோபர் 29, 2008 vayal மறுமொழியவும்

ஜஸ்ட் தெரிந்து கொள்ளலாமே!
உங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்து இமெயில் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படுகையில் பல கம்ப்யூட்டர்களை, சர்வர்களை அது தங்கி தாண்டிச் செல்கிறது. இந்த பயணத்தை இந்த MTA  தான் கவனித்துக் கொள்கிறது.

கம்ப்யூட்டரைச் சிறந்த முறையில் பயன்படுத்த முழுமையாகக் கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் இமெயில் அனுப்புவதில் மட்டும் பலருக்கு ஒரு தணியாத ஆசை. இமெயிலை எழுதி பட்டனை அழுத்துகிறோம். எப்படி நாம் குறிப்பிட்ட முகவரிக்கு இது எடுத்துச் செல்லப்பட்டு அனுப்பப்படுகிறது என்று தெரிந்து கொள்ள ஆவல். அப்படி அதனைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கையில் பல சொல் தொடர்கள் நம் கவனத்திற்கு வந்தன. அப்படி ஒரு சொல் தொகுதி தான் Mail Transfer Agent   என்பது. இதைச் சுருக்கமாக MTA   என்றும் அழைப்பார்கள். Read more…

கம்ப்யூட்டருக்குப் புதியவரா நீங்கள்

அக்டோபர் 29, 2008 vayal மறுமொழியவும்

கம்ப்யூட்டருக்குப் புதியவரா நீங்கள்
வேர்ட்

வேர்டில் சொல் கண்டுபிடித்து மாற்று

வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் தயாரித்த பின்னர் எடிட் செய்கையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சொல் ஒன்றுக்குப் பதிலாக இன்னொரு சொல் ஒன்றினைப் போட விரும்புகிறீர்கள். அப்போது கர்சரை ஒவ்வொரு லைனாக இழுத்துச் சென்று அந்த சொல்லைத் தேடி அதை அழித்துவிட்டு மீண்டும் புதிய சொல்லை டைப் செய்வது நம் நேரத்தை வீணடிக்கும் செயலாக இருக்கும்.

இதற்கெனவே வேர்ட் தொகுப்பில் Find and Replace  என்றொரு வசதி உள்ளது. முதலில் அந்த சொல்லைத் தேட வேண்டிக் கொடுக்கும் கட்டளையைப் பார்க்கலாம். இதற்கு Edit  மெனு சென்று அதில் Find  கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதற்கென உள்ள  Ctrl+F      என்ற ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தவும். இப்போது எந்த சொல்லைத் தேட என்று கேட்டு அதற்கென ஒரு நீள் கட்டம் இருக்கும். அதில் கர்சர் துடித்துக் கொண்டிருக்கும்.  அதில் தேடி அறிய வேண்டிய Read more…

போய்ச் சேர்ந்ததா இமெயில்?

அக்டோபர் 29, 2008 vayal மறுமொழியவும்

போய்ச் சேர்ந்ததா இமெயில்?
நாம் அனுப்பிய இமெயில் சேர்ந்ததா? பெற்றவர் படித்தாரா என்பது கூட வேண்டாம். மெயில் அவருக்கு போய்ச் சேர்ந்ததா என்று பலருக்குக் கவலை இருக்கும். பொதுவாக  அனுப்பப்படும் இமெயில்கள் நிச்சயம்யாருக்கு அனுப்புகிறோமோ அவருக்குப் போய் சேர்ந்து விடும். தொழில் நுட்ப கோளாறின் காரணமாக அவ்வாறு அனுப்பப் பட முடியவில்லை என்றால் நமக்கு இந்த மெயில் இன்ன காரணங்களுக்காக அனுப்ப இயலவில்லை என்றோ அல்லது இரண்டு நாட்களாக இந்த மெயிலை அனுப்ப முயற்சித்தோம், முடியவில்லை என்றோ செய்தி வரும்.

ஆனால் போய்ச் சேர்ந்தது என்பதற்கான உறுதி செய்தி நமக்கு வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? இதற்காகவே Read Receipt   என்ற வசதியினை இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் வைத்துள்ளன. இந்த வசதியை ஒவ்வொரு இமெயிலுக்கும் செட் செய்து விட்டால் இமெயில் போய்ச் சேர்ந்தவுடன் அதனைப் பெறுபவருக்கு இதுபோல பெற்றுக் கொண்டதற்கான ரசீதினை அவர் கேட்கிறார். அனுப்பவா? என்று ஒரு செய்தி தரப்படும். அவர் ஓகே டிக் செய்தால் தானாக ரசீது நமக்குத் தயாராகி அனுப்பப்படும். இதனை எப்படி அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் செட் செய்வது என்று பார்ப்போம். Read more…

GMX இலவச இமெயில்கீ

அக்டோபர் 29, 2008 vayal மறுமொழியவும்

GMX  இலவச இமெயில்கீ
வாசகர்கள் தங்களின் பெரும்பாலான கடிதங்களில் இலவசமாக இமெயில் வசதி தரும் தளங்கள் குறித்து கேட்டு வருகின்றனர். அண்மையில் அத்தகைய ஒரு நல்ல இலவச இமெயில் தளம் ஒன்றைக் காண நேர்ந்தது. அதன் விபரங்களைப் பார்ப்போம்.

GMX Mail  என அழைக்கப்படும் இந்த இமெயில் தளம் மிகவும் பாதுகாப்பானது. ஸ்பேம் மெயில்கள் நன்றாக வடி கட்டப்படுவதாக இந்த தளம் தெரிவிக்கிறது. இணையதளம் வழியாக மட்டுமின்றி பி.ஓ.பி. அல்லது ஐ மேப் வழியாகவும் உங்கள் இமெயில்களைக் கையாளலாம். ஆன்லைனில் நமக்கு வந்த கடிதங்கள் மற்றும் அதனுடன் இணைந்து வந்த பைல்களைக் காத்து வைத்திட 5 ஜிபி இடம் தரப்படுகிறது. மெசேஜ்கள் 50 எம் பி வரை அனுமதிக்கப்படுகின்றன. ஜி.எம்.எக்ஸ் மெயில் மூலமாக உங்கள் பிற இமெயில் அக்கவுண்ட்களிலிருந்தும் (யாஹூ, லைவ் ஹாட்மெயில் உட்பட) இமெயில்களைப் பெறலாம். அனைத்து மெயில்களும் ஸ்பாம் மெயில்களுக்கான பில்டர்கள் மூலமே வருவதால் அத்தகைய மெயில் கள் தவிர்க்கப்படுகின்றன. இதனால் இன் பாக்ஸ்கள் சுத்தமாக இருக்கின்றன. நம்மால் இமெயில்களைப் பார்வையிட முடியாத நிலையில் தானாக வெகேஷன் ரிப்ளை அனுப்பும் வசதி இதில் உண்டு. அட்ரஸ்புக்குடன் காலண்டர் ஒன்றும் ஜி.எம்.எக்ஸ் மெயில் பாக்ஸில் உண்டு. மெயில்களைப் பிரித்து வைக்க Read more…

இணையத்தில் கிடைக்கும் பிழைச் செய்திகள்

அக்டோபர் 29, 2008 vayal மறுமொழியவும்

இணையத்தில் கிடைக்கும் பிழைச் செய்திகள்
இன்டர்நெட்டில் வேக வேகமாக நாம் தேடும் தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென வெப்சைட் லோடு ஆகும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் ஏதோ ஒரு எண்ணுடன் பிழைச் செய்தி காட்டப்படும்.

இது இன்டர்நெட் சமாச்சாரம் என்பதால் நாம் அதனைப் புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் மீண்டும் அந்த தளத்தினைப் பெறும் முயற்சியிலேயே இருப்போம். முதலில் வந்த அந்த பிழைச் செய்தி நீங்கள் முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் காட்டப்படும். ஆனால் நாம் முதலில் காட்டப்பட்டது மாற்றப்படாமல் இருப்பதாக எண்ணிக்கொண்டு என்டர் தட்டி வெப்சைட் லோட் ஆகிறதா என்று பார்ப்போம். இத்தகைய பிழைச் செய்திகள் என்ன சொல்கின்றன என்று புரிந்து கொண்டு அதன்பின் தொடர்ந்து முயற்சி செய்வது குறித்து யோசித்து தொடர்வதே நல்லது.

400 Bad Request:  நீங்கள் தேடவிரும்பிய தளத்தின் முகவரியைத் தவறாக டைப் Read more…

இமெயில் முகவரி திருட்டு

அக்டோபர் 29, 2008 vayal 1 comment

இமெயில் முகவரி திருட்டு
திடீரென வழக்கத்திற்கு மாறாக சிலருக்கு அதிகமான எண்ணிக்கையில் ஸ்பேம் மெயில்கள் வரத் தொடங்கும். ஒரு சிலர் கவலைப் படுவார்கள். ஒரு சிலர் காரணத்தை ஆய்வு செய்வார்கள்.நம் வாசகர்கள் பலர் தங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளதாகவும் தங்களுடைய இமெயில் முகவரிகளை தேவையில்லாமல் பல வெப் சைட்டுகள் பயன்படுத்துகின்றனவோ என கவலைப்பட்டு எழுதி, இதனைக் கண்டு பிடிக்க முடியுமா எனக் கேட்டுள்ளனர். உங்கள் இமெயில் முகவரிகளைப் பயன் படுத்தும் வெப்சைட்டுகள் சிலவற்றை நீங்கள்நிச்சயமாய்க் கண்டறியலாம். ஆனால் அனைத்து ஸ்பேம் மெயில்களும் எங்கிருந்து வந்தன என்று கண்டறிவது சற்று கஷ்டமான செயல். Read more…

லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கையாள்வது எப்படி?

அக்டோபர் 29, 2008 vayal மறுமொழியவும்

லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கையாள்வது எப்படி?
நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று, வர்த்தகம் மேற்கொள்பவர்களும் அலுவல் ரீதியாகப் பணியாற்றுபவர்களும் லேப்டாப்கம்ப்யூட்டரைத் தங்கள் மொபைல் அலுவலகமாகவே தூக்கிச் செல்கின்றனர். Read more…

இந்திய மொழிகளில் புதிய பரிமாணங்களுடன் ஆப்பரா பிரவுசர் தொகுப்பு

அக்டோபர் 29, 2008 vayal மறுமொழியவும்

இந்திய மொழிகளில் புதிய பரிமாணங்களுடன் ஆப்பரா பிரவுசர் தொகுப்பு
கூகுளின் குரோம் பிரவுசர் வெளியானபின் பிரவுசர் சந்தையில் பலமான சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலி தான் அண்மையில் வெளியான ஆப்பரா பிரவுசர் பதிப்பு 9.6. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்குப் பதிலாக முதன் முதலாகப் பலர் நாடிய தொகுப்பு ஆப்பரா பிரவுசராகும். இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கு ஆப்பரா பிரவுசரைப் பயன் படுத்தும் அனைவரும் அதுதான் மிகச் சிறந்த பிரவுசர் என அதற்கான பல அம்சங்களை எடுத்துச் சொல்வார்கள். Read more…