விண்டோஸ் சிஸ்டம் டிப்ஸ்
விண்டோஸ் கீ:
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் என்ன அதிவேகத்தில் இயங்கினாலும், சில கீகளைப் பயன்படுத்தி, இன்னும் அதனைக் கூடுதல் வேகத்தில் இயக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களைப் பயன் படுத்தி, செயல்பாடுகளை மேற்கொண்டு பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.
சிஸ்டம் தகவல்கள் அறிய: உங்களுடைய சிஸ்டம் குறித்த தகவல்களை உடனே அறிய, Windows மற்றும் Pause கீகளை அழுத்துங்கள். உடன் சிஸ்டம் குறித்த சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும்.
டாஸ்க்பார் அப்ளிகேஷன்ஸ்: நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் தொகுப்புகளை, டாஸ்க்பாரில் போட்டு வைக்கவும். இதனால் ஒரு மவுஸ் கிளிக்கிலேயே, அப்ளிகேஷன்களை இயக்க நிலையில் பெறலாம். இதனால் பல மவுஸ் கிளிக்குகள் மிச்சமாகும். டாஸ்க் பாரில் போட்டு வைத்த பின், விண்டோஸ் கீயுடன் ஏதேனும் ஒரு எண்ணுக்கான கீயினை இணைத்து அழுத்தவும். இப்போது, டாஸ்க் பாரில் அந்த எண்ணுக்குரிய இடத்தில் எந்த அப்ளிகேஷன் உள்ளதோ, அந்த புரோகிராம் இயக்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.
ஒரு புரஜக்டரை இணைக்கும் போதோ, அல்லது உங்களுடைய லேப்டாப் கம்ப்யூட்டரை, வெளியே உள்ள ஒரு டிஸ்பிளே சாதனத்துடன் இணைத்துக்காட்ட விரும்பும்போதோ, விண்டோஸ் கீயுடன் ப்பி (Windows+P) கீகளை அழுத்தவும். ஏதேனும் ஒரு அப்ளிகேஷனை இயக்க நிலைக்குக் கொண்டு வர, விண்டோஸ் கீ அழுத்தி, அதில் உள்ள ரன் பாக்ஸில், அதற்கான கட்டளைப் (பெரும்பாலும் அதன் சுருக்கப்பெயர்) பெயரைத் தந்தால் போதும்.
ரன் டயலாக் பாக்ஸைப் பெற விண்டோஸ் + ஆர் கீயினை அழுத்தவும்.
தானாக அப்டேட்: விண்டோஸ் அப்டேட் வசதியைப் பயன்படுத்துகையில், அது உங்கள் கம்ப்யூட்டரை உடனடியாக ரீஸ்டார்ட் செய்திடக் கட்டாயப்படுத்தும். அப்போது தான், அப்டேட் செய்யப்பட்ட வசதிகள், உங்களுக்குக் கிடைக்கும். அப்போது, நீங்கள் சேவ் செய்யப்படாத வேலை ஏதேனும் மேற்கொண்டிருந்தால், அது வீணாகும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, கண்ட்ரோல் பேனலில், Windows Update திறக்கவும். இதில் Change Settings என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில் Download updates but let me choose whether to install them என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டருக்குச் செல்ல, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, பின் அந்த போல்டர் இருக்கும் டைரக்டரி சென்று, அந்த போல்டரை மவுஸால் தேடி, கிளிக் செய்து பெறுகிறீர்களா? அதற்குப் பதிலாக, விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக அந்த போல்டரைத் திறந்த நிலையில் இருந்தால், நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? அப்படியும் செட் செய்திடலாம். உங்களுடைய டாஸ்க் பாரில் எக்ஸ்புளோரர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் என்பதில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் என்பதனத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள டார்கெட் பீல்டில், ‘%windir%\explorer.exe’ என்ற இடத்தில் ஒரு ஸ்பேஸ் விட்டு பைலுக்கான பாத் அமைக்கவும். அது ‘%windir%\explorer.exe C:\Users\yourusername\yourfolder’ என அமையலாம். இவ்வாறு அமைத்த பின்னர், விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக நீங்கள் விரும்பும் போல்டரைத் திறந்து,நீங்கள் வேலை செய்திடத் தயாராகக் காட்டும்.
போல்டர் வியூ: எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர் களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப்படுவார்கள். அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின் Folder and search options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (Default) போல்டராக அமைந்துவிடும்.