தொகுப்பு

Archive for the ‘உபயோகமான தகவல்கள்’ Category

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீமின் நன்மைகள் என்னென்ன?

30/04/2013 பின்னூட்டம் நிறுத்து

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம் (ஆர்ஜிஇஎஸ்எஸ்), முதன் முறையாக செக்யூரிட்டிஸ் சந்தைகளில் ரூ. 50,000 வரை
முதலீடு செய்ய விரும்பும், ரூ. 12 லட்சமோ அல்லது அதற்கும் குறைவான மொத்த ஆண்டு வருமானத்தையோ உடைய, சில்லறை வணிகம் செய்து வரும், தனி முதலீட்டாளர்களுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும்.

(Rajiv Gandhi Equity Scheme: Few FAQs on RGESS)

ஆர்ஜிஇஎஸ்எஸ்-இன் ஆதாயங்கள் பின் வருமாறு:

• அனுமதிக்கப்பட்ட வரி விலக்கு யூ/எஸ் 80 சிசிஜி வரையறை, வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள, 1 லட்சம் ரூபாய் வரையறைக்கு மேற்பட்டு இருப்பதால் இது நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கக் கூடியதாக உள்ளது.

• டிவிடென்ட் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு கிடைக்கும்.
• முதலீட்டாளர், முதலாமாண்டைத் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த ஆண்டுகளில் லாக்-இன் காலகட்டத்திற்குப் பின், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தன் போர்ட்ஃபோலியோவை விற்பனைக்கு உட்படுத்தவோ அல்லது அடுத்தவருக்கு மாற்றிக் கொடுக்கவோ முடியும்.

• அதிக சந்தை மதிப்பீடு கொண்ட ஆர்ஜிஇஎஸ்எஸ் தகுதி கொண்ட செக்யூரிட்டிக்களிலிருந்து, லாபம் கிடைப்பதை, ஒரு வருட காலத்திற்கு பின், தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். சந்தையில் இருக்கக்கூடிய சில பொதுவான சரிவுகளிலிருந்து, முதலீட்டாளரை ஓரளவுக்கு காக்கக்கூடிய, சில ஏற்பாடுகளும் இதில் உள்ளன. இது வரியை சேமிக்கும் பிற திட்டங்களில் இருந்து மாறுபட்டது.

• உங்கள் அவசரத் தேவைகளுக்கு, உங்கள் பங்குகள் சிலவற்றை லாக்-இன் காலத்திற்குப் பின் அடமானம் வைத்தோ அல்லது விற்றோ பணம் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் தனிப்பட்ட ஆர்ஜிஇஎஸ்எஸ் டீமாட் கணக்கில், நீங்கள் அடிப்படை சேவை டீமாட் கணக்கைத் தேர்ந்தெடுத்திருப்பின், ரூ. 50,000 வரையிலான முதலீடுகளுக்கு, டீமாட் கணக்குக்கு பராமரிப்புத் தொகை எதுவும் கிடையாது; ஆனால் ரூ. 2 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு பராமரிப்புத் தொகையாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

• வரி பிடித்தம் செய்யப்படும் முதல் நிதியாண்டில் தவணை முறையில் முதலீடுகள் செய்யலாம்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,847 other followers