தொகுப்பு

Archive for the ‘அறிவியல் நிகழ்வுகள்’ Category

செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்!

நவம்பர் 8, 2009 vayal மறுமொழியவும்


சிவப்பு கிரகமான செவ்வாய் பூமியில் இருந்து 3.5 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் செல்ல வேண்டுமானால் 6 மாத காலம் பயணம் செய்ய வேண்டி வரும். தற்போது புதிய தொழில்ட்பத்தில் ஒரு ராக்கெட் வடிவமைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் 39 நாட்களில் செவ்வாய்க்குச் சென்றுவிடலாம்.

இந்த புதிய தொழில்ட்பம் பிளாஸ்மா ராக்கெட் டெக்னாலஜி எனப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆட் ஆஸ்ட்ரா என்ற தொழில்ட்ப நிறுவனம் இந்த தொழில்ட்பத்தில் வி.எக்ஸ்.200 என்ற என்ஜினை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த என்ஜினைக் கொண்டு ராக்கெட்டை இயக்கினால் 39 நாட்களில் செவ்வாய்க்கு சென்றுவிடலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள ராக்கெட்டுகளைவிட பலமடங்கு சக்தி வாய்ந்தது இந்த ராக்கெட்.

இந்த நிறுவனம் நாசாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி க்ஷிகிஷிமிவிஸி என்ற ராக்கெட்டை 2013-ல் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி சோதனை செய்ய உள்ளது.

தற்போது விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் ராக்கெட்டுகளை இயக்க ஆண்டு தோறும் 7.5 டன்கள் எரிபொருள் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் புதிய ராக்கெட்டுகளை பயன்படுத்தினால் 0.3 டன்கள் எரிபொருள் மட்டுமே செலவாகும். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணமும், எரிபொருளும் மிச்சமாகும்.

மற்ற ராக்கெட்டுகளின் ஆரம்பகட்ட உந்து வேகத்திலும் பிளாஸ்மா ராக்கெட் சிறப்புத் தன்மை உடையது. ஒரே உந்துதலுக்குப் பிறகு ஆண்டுக்கணக்கில் இயங்கும் திறன் பெற்றது. நீராவி மூலம் இயங்கும் இதன் என்ஜின் தண்ணீரை கொதிக்கவைத்து நீராவியை உருவாக்கிக் கொள்ளும். இதன் வேகமும் சாதாரண ராக்கெட்டுகளைவிட 100 மடங்கு அதிகமாக இருக்கும். இந்த என்ஜினின் வெப்பநிலை சூரியனின் உட்புற வெப்பநிலைக்கு நிகராக இருக்கும். இதனால் மற்ற பாகங்கள் உருகாமல் இருக்கும் அளவுக்கு பாதுகாப்பாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ராக்கெட்டை வடிவமைத்துள்ள ஆட் ஆஸ்ட்ரா நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சி நிலையம், செயற்கை கோள்கள், எரிபொருள் மையங்கள் ஆகியவற்றின் தொழில்ட்பம் மற்றும் பராமரிப்பு செலவுகளை குறைக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

பாசியில் இருந்து எரிபொருள்

ஏப்ரல் 14, 2008 vayal மறுமொழியவும்

   
  
பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு மாற்றாக புதிய எரிபொருளை உருவாக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி வாகனங்களை இயக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் வாகனத்துக்கு தேவையான ஹைட்ரஜனை உருவாக்க `பாசி’கள் பயனுள்ளதாக இருக்கும் என்று இப்போது அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அமெரிக்க எரிசக்தி துறை விஞ்ஞானி டேவிட் டைடி கூறி இருப்பதாவது:-

ஒரு செல் தாவரமான பச்சை நிற பாசிகள் ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் பெருமளவு காணப்படுகின்றன. இவற்றில் ஹைட்ரோஜெனசிஸ் என்ற பொருள் அதிக அளவு உள்ளது. இதன் மூலம் ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்ய முடியும். எனவே வருங்காலத்தில் பாசியை பயன்படுத்தி ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்து அதன் மூலம் வாகனங்களை இயக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உலோக ரப்பர்

ஏப்ரல் 14, 2008 vayal மறுமொழியவும்

    
 
இரும்பின் உறுதி, ரப்பரின் நெகிழ்வு தன்மை- இவை இரண்டும் இணைந்த கலவையாக உருவாக்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பு தான் உலோக ரப்பர். உலோகம்-ரப்பர் இவை இரண்டின் குணாதிசயத்துடன் குறைந்த எடையில் அமைந்துள்ள இந்த நவீன கலவை வருங்காலத்தில் பல்வேறு நவீன தயாரிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது. அது பற்றிய அறிவியல் தகவல்களை இங்கு காண்போம்.

விண்வெளி பயணம் மற்றும் விமானப்பயணத்தின் போது எடை குறைந்த, அதே நேரத்தில் உறுதியான பொருட்களைக்கொண்டு விண்வெளிக்கலம் மற்றும் விமானங்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்து ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வந்தது. அப்போது தான் எரிபொருள் செலவுகளை குறைக்க முடியும் என்பது முக்கிய காரணமாகும். இது தொடர்பாக நடந்த ஆய்வின் முடிவில் உருவானது தான் `உலோக ரப்பர்’.

அமெரிக்காவின் தென்மேற்கு விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள விர்ஜீனியா பல்கலைக் கழகத்தின் பாலிமர் ரசாயன ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வுகள் நடத்தி வந்தனர். அப்போது அவர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த உலோக ரப்பர் ஆகும். நேர்மின்னோட்டம் மற்றும் எதிர்மின்னோட்டம் உள்ள கலவையை தனித்தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையில் ரப்பர் துண்டுகளை மாறி மாறி அமிழ்த்தி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த ரப்பர் துண்டு மின்னோட்டம் பெற்று உறுதியான தன்மை பெற்று விடும். இந்த ரப்பர், உலோகம் போன்ற உறுதியுடன் இருக்கும். அதே நேரத்தில் இது மின்சாரத்தை கடத்தும் திறனும் பெற்றுவிடும். இந்த ரப்பர் நெகிழும் தன்மை கொண்டதாகவும், அதே நேரத்தில் என்ன தான் கசக்கி பிழிந்தாலும் மாறாத தன்மை கொண்டதாகவும் இருக்கும். இந்த உலோக ரப்பரை சூடு படுத்தலாம், உறை நிலையில் குளிர வைக்கலாம், அடித்து துவைக்கலாம், அல்லது பெட்ரோலில் மூழ்க வைக்கலாம்… இப்படி என்ன செய்தாலும் இந்த ரப்பர் நிறம் மாறாமல், தனது உருவம் மாறாமல் அப்படியே இருக்கும்.

இந்த உலோக ரப்பரை பயன்படுத்தி கம்ப்ட்டர்கள், லேப்-டாப்கள், மொபைல் போன்கள், உடை போல அணிந்து கொள்ளும் கம்ப்ட்டர்கள், விமான இறக்கைகள் மற்றும் விண்கலங்கள் போன்றவற்றை தயாரிக்கலாம். இதன் மூலம் தயாரிக்கப்படும் லேப்-டாப் அல்லது செல்போன்கள் எவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் உடையாது என்பது தான் இதன் சிறப்பு ஆகும். மேலும் இந்த உலோக ரப்பர் மூலம் தயாரிக்கப்பட்ட இறக்கை பயன்படுத்தும் விமானத்தில் எரிபொருள் செலவு மிகவும் குறைவாக இருக்கும் என்பது மற்றொரு சிறப்பு ஆகும்.