தொகுப்பு

Archive for the ‘அமிர்தானந்தமயி’ Category

மந்திரத்தின் பலன்

ஏப்ரல் 18, 2008 vayal மறுமொழியவும்


ஒருவர் தனது கையில் கிடைத்த மாத்திரையை தூக்கமாத்திரை
என தெரியாமல் விழுங்கி வைக்கிறார். அடித்துப்போட்டாற்போல்
தூங்கிவிடுகிறார். மந்திரத்தின் அர்த்தத்தை அறியாமல்
நீங்கள் உச்சரித்தாலும், அதற்குரிய பலன் இருக்கவே
செய்யும். மந்திரத்தை சிரத்தையோடும், அன்போடும் உச்சரிக்க
வேண்டும். தீவிர கவனம் இருப்பதும் அவசியம்.

நீங்கள் ரயிலிலோ, பஸ்சிலோ பயணம் செய்கிறீர்கள். வண்டியை
யார் ஓட்டிச்செல்கிறார் என்று தெரியாவிட்டாலும்,
சேரவேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்துவிடுகிறீர்கள். ரயில்
கட்டும் தொழிற்சாலை எங்கிருக்கிறது, பஸ்சுக்கான
உதிரிபாகங்கள் எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் உங்களுக்கு
தெரிந்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் இறங்கிச்செல்லும்
ரயில்நிலையம் அல்லது பஸ் நிலையத்திலிருந்து சிறிது
தொலைவில் உங்கள் வீடு இருக்கிறது. மந்திரம் உண்மையை
அறியும் முயற்சியில் உங்களை இட்டுச்செல்லும். அங்கிருந்து
முடிவான குறிக்கோளை நீங்கள் அடைவது எளிது.

தயிரை உற்பத்தி செய்ய இயற்கையில் ஒரு வழி இருக்கிறது.
புளிப்பான ஒரு பொருளை பாலில் சேர்த்தால் போதும். 24 மணி
நேரத்தில் பால் சுத்த தயிராகிவிடும். சீடனுக்கு உபதேசம்
செய்விக்கிறபோது, குருவானவர் அவனுள் உறங்கிக்கிடக்கும்
ஆற்றலை எழுப்பிவிடுகிறார். அதற்கு தன்னுடைய ஆற்றலில்
சிறிதளவே அவனுக்கு வழங்குகிறார். உறைமோரைப் போல அவர்
செயல்படுகிறார். ஒரு செடியைப் பிடுங்கி இன்னொரு இடத்தில்
நடுவதுபோல, அவர் இகலோக சுகத்தில் திளைக்கிற மனதைப் பறித்து
ஆன்மிக உலகில் இடம்பெறச் செய்கிறார்.

இறைவனின் வடிவங்கள

ஏப்ரல் 18, 2008 vayal மறுமொழியவும்


* நாம் விரும்பி நினைக்கிற வடிவில் கடவுள் நமக்குக்
காட்சியளிப்பார். அவரை வணங்கும் போது, ”படைப்பும் நீயே,
படைப்பாளியும் நீயே. சக்தியாகவும், சத்தியமாகவும்
நீதானிருக்கிறாய். நீயே தொடக்கம். நீயே முடிவு. தாயே!
ஆன்மாவின் சாரமாகவும், ஐம்பூதங்களின் ரூபமாகவும்
நீதானிருக்கிறாய்” என சொல்ல வேண்டும்.<BR>

* நாம் நினைக்கிற வடிவில் கடவுள் காட்சியளிப்பார்
என்றாலும், அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு
முன்பாகவே, அவரைக் காண்கிற விருப்பத்தோடு நாம்
தயாராயிருக்க வேண்டும்.

* இறைவன் தனக்கென்று குணங்களேதும் இல்லாதவனாயினும்,
தன்னுடைய பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க எந்த வடிவையும்
எடுப்பான். பனிக்கட்டி தண்ணீராகவோ, வெண்ணெய் நெய்யாகவோ
மாறுவது போலத்தான் அதுவும். தனது பக்தனின்
பற்றின்மையையும், பக்தியையும் சோதிப்பதற்காக இறைவன் எந்த
வடிவத்தையும் எடுப்பான்.

* நம்முடைய வாழ்வில் எத்தனையோ தடைகள் வரலாம். நாம்
நம்பிக்கையோடும், எச்சரிக்கையோடும் இருந்தால் எளிதில்
கடக்க முடியும். இந்த ஜென்மத்தில் நாம் செய்கிறதெல்லாம்
போன ஜென்மக் காரியத்தின் விளைவாகும்.

* திருமணம் செய்துகொண்ட ஐந்தாறு ஆண்டுகளிலேயே ஆண்கள்
வெளிநாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள். தங்கள் மனைவியை
மட்டும் இங்கேயே விட்டுச் செல்கிறார்கள். பணம்
சம்பாதிப்பதன் பொருட்டு குடும்ப வாழ்க்கையில்
கிடைக்கக்கூடிய சுகங்களைக் கைவிடுகிறார்கள். மனதைக்
கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். தேவைக்கேற்ப வாழ்க்கை
முறையை மாற்றிக்கொள்ளவோ, மாறுதல்களில் பொருந்திக் கொள்ளவோ
ஆணுக்கு முடிகிறது.

எந்தப்பணியும் நல்ல பணியே!

ஏப்ரல் 18, 2008 vayal மறுமொழியவும்


மனதைஒருமுகப்படுத்தி கண்களை மூடி, அம்பிகையின் திருநாமத்தை
உச்சரியுங்கள். அப்போது அவளது உருவம் உங்களுக்கு தெரியும்.
அவ்வாறு உருவம் தெரியாவிட்டால் அவள் எதிரே நிற்பதாக
எண்ணிக்கொண்டு அம்மா!’ என்று ஆசையுடனும்,
மனதில் பக்தியுடனும் அழையுங்கள். உங்களது குரலுக்கு
அம்பிகை நிச்சயம் காட்சி தருவாள்.
நிலையான அன்பே, நிலையான கருணையே, நீ என்னை வழி
நடத்துவாயாக!’ என்று பொருள்.

இறைவன் உள்ளத்தில் இருக்கும்போது, எதற்காக சத்தமிட்டு
வணங்க வேண்டும் என்பர் சிலர். இறைவன் உள்ளத்தில் இருப்பது
உண்மைதான். ஆனால், உங்களது உள்ளமோ உங்களிடம் இல்லாமல்
வெளியில் வேறு பொருளை அல்லவா தேடிக்கொண்டிருக்கிறது.
அவ்வாறு அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை உங்களிடமே
திருப்பி கொண்டு வருவதே பிரார்த்தனை.

படித்துவிட்டு வேலையில்லாத பலர், போதைப்பொருளுக்கு
அடிமையாகி உடலையும், மனதையும் புண்படுத்திக்
கொண்டிருக்கிறார்கள். இதனால், குடும்பச்சுமை அதிகரிக்குமே
தவிர, வேலை கிடைக்காது. ஆகவே, கிடைக்கும் வேலையை
சுயகவுரவம் பார்க்காமல் செய்யுங்கள். தீய வழியில்
செல்லாமல், சுயமாக உழைத்து செய்யும் எந்த வேலையும் நல்ல
வேலையே.

பறவைகளுக்கு சாலைகள் இல்லை

ஏப்ரல் 18, 2008 vayal மறுமொழியவும்



கண்ணுக்குத் தெரியாத அஸ்திவாரத்தின் மீதுதான் கட்டடம்
நிற்கிறது. வேர்கள்தாம் மரத்தை விழுந்துவிடாமல் தாங்கி
நிறுத்துகிறது. உயர்வின் பின்னணியில் பணிவு இருக்கும்.
இருக்க வேண்டும்.

நீரில் மிதக்கும் கட்டை இழுபடுமே தவிர, அதற்கென்று
சுயேச்சையான போக்கு இல்லை. அகந்தையின் போக்கில் மனிதர்கள்
இழுபடுகிறர்கள். அவர்கள் ஞானம் பெறவேண்டுமென்றால் அகந்தையை
விடவேண்டும்.

‘நான் யார்’ என்ற விசாரத்தில் ‘எல்லாம் என்னுள்
இருக்கிறது’ என்கிற எண்ணந்தான் முதற்படி. அனைத்தும்
பரமாத்மாவின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன என்பதைப்
புரிந்துகொண்டு விட்டால் அவனிடம் நம்மை
ஒப்புவித்துக்கொள்வது எளிது.

உடல், மன ஆற்றலைவிட ஆன்மிக ஆற்றல் உயர்ந்தது. ஆன்மவலிமை
உள்ளவரால் தான் துயருற்றோருக்கு உதவி அவர்களை அமைதிபெறச்
செய்ய முடியும்.

எதுவெல்லாம் எனதென்று, யாரெல்லாம் என்னுடைய உறவென்று
மனிதன் நினைக்கிறானோ அந்த உடைமைகளும் உறவுகளும் அவனுடைய
மரணத்திலே கூட வருவதில்லை. எல்லாம் அவனுடையவை (இறைவன்)
என்று எண்ணும்போது பற்று வராது. பற்றினால் உண்டாகும்
துன்பமும் வராது. மனிதனும் அவனது விருப்பத்துக்கான
பொருள்களும், மக்களும் அழிந்துபோக, இறைவன் மட்டுமே
நித்தியமாயிருக்கிறான்.

வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு சாலைகளில்லை. இந்த
மனிதர்களுக்கும், அவர்கள் செல்லும் வாகனங்களுக்குத்தான்
தெருக்களும், வீதிகளும் தேவை. தொடக்கநிலை சாதகனுக்கு
திட்டமிட்ட சாதனை முறை அவசியம்.

பெண்களே கவனம் கவனம்

ஏப்ரல் 18, 2008 vayal மறுமொழியவும்



ருசியான மாங்காய் ஊறுகாயைப் பார்த்ததும் வாயில் நீர்
சுரக்கும். மாற்றினத்தவரைக் காணும்போது நம்மையறியாமலே
அப்படியொரு உணர்வு ஏற்படும். அது இயல்பான விஷயம்தான். மழை
லேசாய் பெய்தால் தரை ஈரமாகிறது. அதே மழை பலமாகப்
பெய்துவிட்டால் தரை சகதியாகி விடுகிறது.

சாதனையை தொடங்கிய காலத்தில் மாற்றினத்தவருடன் அதிகம்
நெருங்கிப் பழகாமல் இருப்பது சாதகருக்கு நல்லது. எப்போதுமே
ஒரு இடைவெளி இருக்க வேண்டும். பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ
கொள்ள வேண்டும். ஆணை தந்தையாகவோ, சகோதரனாகவோ பாவித்துப்
பழக வேண்டும்.

பாலுணர்வைக் கடந்த பெண்கள் இருக்கிறார்கள். ஆனால்,
அவர்களுடைய எண்ணிக்கை லட்சத்துக்கு ஒன்றிரண்டாக மட்டுமே
இருக்கிறது. லட்சத்தில் ஒரு பெண் மட்டுமே தன்னை காம
விகாரத்துடன் ஒரு ஆண் நெருங்கினாலும் அவனுக்கு ஆன்மிகக்
கொள்கைகளைப் போதிக்கக் கூடியவளாய் இருக்கிறாள்.

தொடக்கத்தில் சாதகன் ஒரு பெண்ணின் சமீபத்தில் போகக்
கூடாதுதான். ஆனால், மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு விடும்
பட்சத்தில் எந்த கெடுதலும் நேராது.

பெண்கள் இயல்பாகவே மென்மையானவர்கள், இரக்கமுடையவர்கள்.
அவற்றை மறைக்க எத்தனை முயன்றாலும் அவர்களால் முடியாது. ஒரு
ஆண் கொஞ்சமே தங்களிடம் அன்பு காட்டினாலும் அவர்கள்
அப்படியே உருகி விடுவார்கள். ஆடவன் நேசம் கலந்த ஒரு
பார்வையை தங்கள் மீது வீசினாலே போதும் அவர்களுக்கு.
அவளுடைய ஒப்புவித்துக் கொள்ளும் சுபாவம் மேலெழ,
மற்றெல்லாவற்றையும் அவள் மறந்து விடுகிறாள். தன்னிடமுள்ள
சகலத்தையும் இழக்க அவள் தயாராகி விடுகிறாள்.

பெண்ணைத் தாயாகப் பாருங்கள

ஏப்ரல் 18, 2008 vayal மறுமொழியவும்



ருசியான மாங்காய் ஊறுகாயைப் பார்த்ததும் வாயில் நீர்
சுரக்கும். மாற்றினத்தவரைக் காணும்போது (அதாவது ஆண்
பெண்ணையும், பெண் ஆணையும்) நம்மையறியாமலே அப்படியொரு
உணர்வு ஏற்படும். அது இயல்பான விஷயம் தான். மழை இலேசாய்
பெய்தால் தரை ஈரமாகிறது, அதே மழை பலமாக பெய்துவிட்டால் தரை
சகதியாகி விடுகிறதில்லையா?
சாதனையை தொடங்கிய காலத்தில் மாற்றினத்தவருடன் அதிகம்
நெருங்கிப் பழகாமல் இருப்பது சாதகருக்கு நல்லது. எப்போதுமே
ஒரு இடைவெளி இருக்க வேண்டும். பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ
கொள்ள வேண்டும். ஆணை தந்தையாகவோ, சகோதரனாகவோ பாவித்துப்
பழக வேண்டும்.

எவ்வளவுதான், எச்சரிக்கையாக இருந்தாலும், இடறி விழுகிற
சந்தர்ப்பங்கள் இருக்கவே செய்யும். அவரவரின்
புறத்தோற்றங்களில் ஈடுபடாமல், உன்னதமான அம்சத்துக்கு
முக்கியத்துவம் தர வேண்டும். அந்நிலையில் ஒவ்வொரு
பெண்ணையும் இறைவியின் வடிவமாகவே பார்க்க வேண்டும். பெண்ணை
வெறும் பெண்ணாக மட்டுமே பார்க்கிறபோது நீங்கள் தவறான
பாதையில் கால் வைத்து விடுகிறீர்கள்.

ஒரு ஆண் சாதகருக்கு பரம எதிரி பெண், ஒரு பெண்
சாதகருக்கு பயங்கர எதிரி ஆண். அதுமட்டுமல்ல, பெண்
இயற்கையில் பலவீனமானவள். ஆனால், பல நற்பண்புகளை வளர்த்துக்
கொண்டு ஆணை விடத் திடமானவளாகி விடுவாள்.

பாலுணர்வைக் கடந்து பெண்கள் இருக்கிறார்கள். ஆனால்,
அவர்களுடைய எண்ணிக்கை லட்சத்துக்கு ஒன்றிரண்டாக மட்டுமே
இருக்கிறது. லட்சியத்தில் ஒரு பெண் தன்னை காம
விவகாரத்துடன் ஒரு ஆண் நெருங்கினாலும் அவனுக்கு ஆன்மிகக்
கொள்கைகளைப் போதிக்கக் கூடியவளாய் இருக்கிறாள்.