தொகுப்பு

Archive for the ‘காந்திஜி’ Category

உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள்

உலகைத் தாங்குவது அன்பு

* அணுக்களிடையே இணைக்கும் சக்தி இருப்பதால்தான், உலகம்
பொடிப்பொடியாக உதிர்ந்துவிடாமல் இருப்பதாக விஞ்ஞானிகள்
கூறுகிறார்கள். அது போலவே, உயிர்களிடத்தும் அன்பு என்னும்
இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். அன்பு உள்ள இடத்திலேயே,
உயிர் இருக்கிறது. பகைமை அழிவையே தருகிறது. மனித ஜாதி
அழியாமல் ஜீவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், இணைக்கும்
சக்தியே. இது பிரிக்கும் சக்தியை விடப் பெரியது.

* உண்மை இன்றேல் அன்பும் இல்லை. உண்மை இல்லாமல் பாசம்
இருக்கலாம். உதாரணம், பிறர் கெடத் தான் வாழும் தேசபக்தி.
உண்மை இல்லாமல் மோகம் இருக்கலாம். எடுத்துக்காட்டு, ஓர்
இளம் பெண்ணிடம் ஒரு வாலிபன் கொள்ளும் காதல். உண்மை
இல்லாமல் வாஞ்சை இருக்கலாம். உதாரணமாக, பெற்றோர்
பிள்ளைகளிடம் காட்டும் அன்பு மிருகத்தன்மைக்கு
அப்பாற்பட்டது. அது ஒரு போதும் பாரபட்சமாய் இருக்காது.
உலகத்தை தாங்கி நிற்பது அன்பு ஒன்றே என்பது என் திடமான
நம்பிக்கை. அன்புள்ள இடமே வாழ்வுள்ள இடம். அன்பில்லா
வாழ்வு மரணமே. Read more…

கீதையை படியுங்கள் மாணவர்களே!–காந்தியின் பொன்மொழிகள்

கீதையை படியுங்கள் மாணவர்களே!

கீதையின் 18 அத்தியாயங்களையும் படித்து ஆராய்ச்சி
செய்வது உங்களுக்கு கடினமாக இருந்தால், முதல் மூன்று
அத்தியாயங்களையாவது கவனமாக படியுங்கள். இந்த மூன்று
அத்தியாயங்களிலிருந்து சில ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்துக்
கொள்வதின் மூலம் அந்த அத்தியாயங்களின் சாரத்தை தெரிந்து
கொள்ளலாம். கீதையின் மூன்று இடங்களில், எல்லா
கொள்கைகளையும் விட்டுவிட்டு இறைவனையே சரணம் அடைந்துவிட
வேண்டும் என்று உபதேசிக்கப்பட்டிருக்கிறது.

கீதை எல்லோருக்கும் அன்னை. அவள் யாரையும் பிடித்து
வெளியே தள்ளுவதில்லை. கதவைத் தட்டுவோருக்கு அவள் அன்புடன்
கதவை திறந்து அடைக்கலம் அளிக்கிறாள். கீதையை உண்மையாக
படிப்பவன் ஏமாற்றம் என்பதை அறியான். அறிவுக்கே எட்டாத
ஆனந்தமும், சாந்தியும் அந்த பக்தனுக்கு ஏற்படுகிறது.
எனினும் அத்தகைய சாந்தியும், ஆனந்தமும் சந்தேகவாதிக்கோ
அல்லது அறிவையும் புலமையையும் குறித்து இறுமாப்பு
அடைபவனுக்கோ ஏற்படுவதில்லை. பணிவுள்ளவனுக்கும், மனதை
சிதறவிடாமல் முழு நம்பிக்கையுடன் கீதை அன்னையை
வணங்குபவனுக்கும்தான் அத்தகைய அமைதியும், ஆனந்தமும்
உண்டாகின்றன. Read more…

சோர்வை அகற்றும் பிரார்த்தனை–காந்தியின் பொன்மொழிகள்

சோர்வை அகற்றும் பிரார்த்தனை

* என் உயிரையே காப்பாற்றி வந்திருப்பது
பிரார்த்தனைதான். பிரார்த்தனையின்றேல், நீண்டகாலத்திற்கு
முன்பே எனக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டுமென பொது
வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகக் கசப்பான
அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன என்பதை என் சுயசரிதையிலிருந்து
நீங்கள் அறிந்து கொள்ளலாம். அவை எனக்குத் தற்காலிகமாக மனச்
சோர்வை உண்டாக்கின. எனினும் நான் அந்தச் சோர்வை அகற்றும்
ஆற்றல் பெற்றிருந்தேனெனில் அதற்குக் காரணம் பிரார்த்தனை
தான்.

* சத்தியம், எனது வாழ்க்கையின் ஓர் அம்சமாகவே இருந்து
வந்திருக்கிறது. ஆனால், பிரார்த்தனை அவ்விதம் இல்லை.
அவசியம் காரணமாகவே என் வாழ்க்கையில் பிரார்த்தனைக்கு இடம்
ஏற்பட்டது. பிரார்த்தனை இன்றேல், நான் மன நிறைவுடன் இருக்க
முடியாது என்ற நிலை ஏற்பட்டதே அதற்குக் காரணமாகும். Read more…

தன்னடக்கம் நிச்சயம் வேண்டும்–காந்தியின் பொன்மொழிகள்


தன்னடக்கம் நிச்சயம் வேண்டும்

தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான
அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப்
போகிறது என்பதை விட உள்ளம் எப்படி சமாளிக்கப்போகிறது
என்பதை வெளிக்காட்டுவது தான் தற்காப்புக்கலை. இதைத்தான்
அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.

தற்காலத்தில் தங்களை, எல்லாம் தெரிந்துவிட்ட
பெரியவர்களாகக் கருதிக் கொள்கிற வழக்கம் நம்
வாலிபர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. உண்மையான
தன்னடக்கமுள்ளவனுக்கு நாளுக்கு நாள் பலம் அதிகரித்துக்
கொண்டே போகும். அமைதியிலிருந்து அதிகமான அமைதிக்கு அவன்
வளர்ந்து கொண்டே போகிறான். Read more…