தொகுப்பு

Archive for the ‘குழந்தையானந்தசாம’ Category

யாரையும் துன்புறுத்தாதீர்கள்

ஏப்ரல் 18, 2008 vayal மறுமொழியவும்

யாரையும் துன்புறுத்தாதீர்கள்

திருப்தி அடையாதவன் ஒருவரையும் திருப்தி செய்ய
மாட்டான். எவன் எப் பொழுதும் சந்தோஷத்துடனும், திருப்
தியுடனும் இருக்கிறானோ, அவனே எல்லாரையும் சந்தோஷத்துடன்
இருக் கச் செய்வான்.

நாக்கு பாவ காரியங்களைப் பேசுவதில் மிகவும் தயாராக
உள்ளது. அதனால் அதனைக் கட்டுப்படுத்துவது மிகவும்
அவசியமாகும்.

சோம்பல் எல்லா விபரீதங்களுக்கும் மூலகாரணமாகிறது.
அதனால் அதனை எப்பாடுபட்டாவது விட்டுவிட வேண்டும்.

உலகமாவது தர்ம, அதர்ம காரியங்களில் பரிட்சை ஸ்தலமாகும்.
அதனால் மிகுந்த கவனத்துடன் தர்ம, அதர்மங்களைப்
பரிட்சித்துப் பார்த்து காரியங்களை செய்ய வேண்டும்.

எந்த தர்மத்திலும் அசிரத்தை வைக்கக்கூடாது. எல்லாமே
தர்மத்தின் சாரங்கள். அதில் சத்யம் அவசியம்
இருக்கிறது.

தரித்திரர்களுக்குத் தானம் செய்ய வேண்டும்.
பணக்காரர்களுக்கு தானம் செய்வது வீண்.

ஆத்ம ஞானம், நல்லவர்களுக்கு தானம் செய்தல், எப்பொழுதும்
சந்தோஷத்தை உடையவராக இருத்தல் ஆகியவற்றை அடைவதால் மோட்சம்
கிடைக்கிறது.

எவனொருவன் சாஸ்திரங்களைப் படித்து அதன் ரகசியங்களை
அறிந்தும்கூட, அதைக் கடைப்பிடிக்காமல் இருக்கிறானோ அவன்
பாவியைக் காட்டிலும் கீழானவன்.

எந்தக் காரியத்தை கடைப்பிடிப்பதன் ஆதாரத்திலும் தர்மம்
இருக்க வேண்டும். இல்லாவிடில் அது சித்தியாகாது.

எப்போதும் எவரையும் துன்புறுத்தலாகாது.
நல்லெண்ணத்துடனோ, கெட்ட எண்ணத்துடனோ ஒரு பிராணியையும் வதை
செய்யக்கூடாது.

பிறரை அழ வைக்காதே

ஏப்ரல் 18, 2008 vayal மறுமொழியவும்


பிறரை அழ வைக்காதே

* சில மனிதர்கள் தான் சம்சாரத்தின் அக்கரையை
அடைகிறார்கள். அதிகமான மனிதர்கள் தர்மத்தை கேலி செய்து
இக்கரையிலேயே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

* ஒருவன் யுத்தத்தில் லட்சக்கணக்கான மனிதர்களை
ஜெயித்தாலும், உண்மையில் வீரனில்லை. எவன் தன்னைத் தானே
ஜெயித்துக் கொள்கிறானோ அவன்தான் உண்மையான வீரன்.

* பாபம் நம்மை அடைவதில்லை என்று கவலையில்லாமல் இருக்கக்
கூடாது. எப்படி சொட்டு சொட்டாக நீர் விழுந்து பானை
நிரம்பிவிடுகிறதோ, அப்படியே மனிதனும் படிப்படியாக
பாவியாகிறான்.

* யாரையும் கடினமான சொற்களால் பேசக்கூடாது. கடினமான
வார்த்தைகளைப் பேசுவதனால் கடினமான சொற்களைக் கேட்க
வேண்டியதிருக்கும். பிறரை துன்புறுத்துவதால் நீயும்
துன்பத்தை அனுபவிக்க வேண்டி இருக்கும். பிறரை அழ வைப்பதால்
நீயும் அழ வேண்டியிருக்கும்.

* யார் ஒருவரால் ஆசைகளை ஜெயிக்க முடியவில்லையோ, அவன்
விபூதி பூசியும், உபவாசம் இருந்தும் சாதனைகள் செய்தாலும்
மனதை பவித்ரமாக்கிக் கொள்ள முடியாது.

* பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன், தான் முதலில்
அதன்படி நடக்க வேண்டும். தன்னையே வசியப்படுத்துபவனால் தான்
பிறரை வசியப்படுத்த முடியும். தன்னை வசியப்படுத்துதல்
என்பது கடினமான காரியம்.

* பாபம், புண்ணியம் எல்லாம் நம்முடைய செயல்கள் தான்.
ஒருவன் மற்றொருவனைப் பவித்ரமாக்க முடியாது.

* இந்த உலகமாவது நீர்க்குமிழி போல், கானல் நீர் போல்
ஆனது. அதனால் இந்த ஜெகத்தைச் துச்சமாக மதிப்பவனை மரணம்
வந்து அடைவதில்லை.