தொகுப்பு

Archive for the ‘கம்ப்யூட்டர் செய்தி’ Category

முதல் ஆப்டிகல் ட்ராக்பால் கீ போர்ட்

ஆம்கெட் (Amkette) நிறுவனம், புதிய வயர்லெஸ் ஆப்டிகல் ட்ராக் பால் கொண்ட கீ போர்டு ஒன்றை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ.2,995 என விலை குறிக்கப்பட்டிருக்கும் இந்த கீ போர்டு, இவ்வகையில் தயாரிக்கப்பட்ட முதல் கீ போர்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடனும், மேக் மற்றும் லினக்ஸ் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.
இதில் உள்ள 800 டி.பி.ஐ. ஆப்டிகல் ட்ராக் பால் 360 டிகிரி சுற்றி இயங்கக் கூடியது. இது ஒரு வழக்கமான மவுஸ் போலவே செயல்படுகிறது. இந்த கீ போர்டு 365 மிமீது 156 மிமீ து 22 மிமீ, என்ற அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை எளிதாக எங்கும் எடுத்துச் செல்லலாம். நான்கு நிமிடங்கள் இதனை இயக்காமல் இருந்தால், உடனே மின் சக்தி நிறுத்தப்படும் வகையில் இதில் வழி செய்யப்பட்டுள்ளது.
இதன் ஆப்டிகல் ட்ரேக் பாலில் ஒரு ஸ்குரோல் வீல் மற்றும் இரண்டு செட் வலது மற்றும் இடது பட்டன்கள் தரப்பட்டுள்ளன. மேற் புறத்தில் பத்து மல்ட்டி மீடியா கீகள் தரப்பட்டு இன்டர்நெட் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற வற்றை இயக்குவதை எளிதாக்கு கின்றன. பெர்சனல் கம்ப்யூட்டர் களில் ஹோம் தியேட்டர் செட் செய்பவர்களுக்கு இந்த கீ போர்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எடுத்துச் செல்லக்கூடிய டிவிடி ரைட்டர்

ட்ரான்ஸெண்ட் நிறுவனம் கையில் எடுத்துச் சென்று இணைத்துப் பயன்படுத்தக் கூடிய சிடி/டிவிடி ரைட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். மிகவும் ஸ்லிம்மான இந்த போர்ட்டபிள் டிவிடி ரைட்டர், 8எக்ஸ் வேகத்தில் டிவிடியையும், 24 எக்ஸ் வேகத்தில் சிடியையும் இயக்குகிறது. இதனை இயக்குவதற்கு தனியே மின் இணைப்பு வழங்க வேண்டியதில்லை. யு.எஸ்.பி. சக்தியிலேயே இயங்குகிறது.
இந்த ரைட்டருடன் பைல்களை எழுத, சைபர் லிங்க் பவர் டுகோ என்ற சாப்ட்வேர் வழங்கப்படுகிறது. சைபர்லிங்க் தரும் மீடியா ஷா என்ற சாப்ட்வேர், 30 நாட்களுக்கு சோதனை செய்து பார்க்கத் தரப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி சிடி/டிவிடிக்களில் டேட்டா எழுதுவது மற்றும் படிப்பதை மேற்கொள்வது மட்டுமின்றி, சிறிய சாப்ட்வேர் இன்டர்பேஸ் ஒன்றின் வழியாக இந்த மீடியா பைல்களை அடுக்கி வைக்கலாம். அண்மையில் பிரபலமான டூயல் லேயர் டிவிடி மீடியா வரையில் அனைத்து பார்மட்களிலும் இது இயங்குகிறது. இரண்டு ஆண்டு வாரண்டியுடன் ரூ.4,300க்குக் கிடைக்கிறது.

இணைய வேகம் சரிதானா?

பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் கண்டிஷன்களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம். உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின் http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.

அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.

ரெவோ அன் இன்ஸ்டாலர்

இந்த வார டவுண்லோட்
கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துப் பயன்படுத்தும் பல புரோகிராம்களை, சில வாரங்கள் அல்லது மாதங்கள், ஏன் நாட்கள் கழித்தும் கூட வேண்டாம் என்று, அன் இன்ஸ்டால் செய்கிறோம். அவ்வாறு அதன் பதிவை நீக்குகையில், ஒரு சில பதிவுகள் அப்படியே அழியாமல் இருந்துவிடுகின்றன. இந்த புரோகிராம்களுடன் வரும் அன் இன்ஸ்டால் பைல் மூலம் நீக்கினாலும் இந்த வரிகள் அப்படியே கம்ப்யூட்டரில் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, ரெஜிஸ்ட்ரியில் சில வரிகள் நீக்கபடுவதில்லை. இது போல இன்னும் சில பதிவுகள் நீக்கப்படுவதில்லை. இவை எந்தவிதமான தொல்லையும் கொடுப்பதில்லை என்றே வைத்துக் கொண்டாலும், இவை ஏன் ஹார்ட் டிஸ்க்கில் இடம் பிடிக்க வேண்டும். எனவே இவற்றை மொத்தமாக, எந்த சுவடும் இல்லாமல் நீக்குவதற்கென ஏற்படுத்தப்பட்டு இலவசமாகக் கிடைக்கும் புரோகிராமின் பெயர் ரெவோ அன் இன்ஸ்டாலர். இதனை இன்ஸ்டால் செய்து, குறிப்பிட்ட சாப்ட்வேர் அல்லது புரோகிராம்களை நீக்குமாறு கட்டளை கொடுத்தால், எந்த விதமான தங்கும் வரிகள் இன்றி அனைத்தையும் நீக்கிவிடுகிறது.
இந்த புரோகிராமுடன் இன்னொரு வசதியும் தரப்பட்டுள்ளது. இதன் பெயர் ஆட்டோ ரன் மேனேஜர் (Autorun Manager) இது என்ன செய்கிறது? உங்களுடைய சிஸ்டம் தொடங்கும் போது, நீங்கள் கட்டளை கொடுக்காமல், தாங்களாக இயங்கிப் பின்னணியில் உள்ள புரோகிராம்களையும் இது பட்டியலிடும். ட்ரேக்ஸ் கிளீனர் (Tracks Cleaner) என்ற ஒரு புரோகிராமும் இதில் தரப்படுகிறது. இந்த புரோகிராம் நீங்கள் மேற்கொண்ட இணைய உலாவில் பார்த்த முகவரி களின் பதிவுகளையும் நீக்குகிறது. அத்துடன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷன் புரோகிராம் விட்டுச் செல்லும் வரிகள், பைல்களையும் நீக்குகிறது.

தவழ்கிறதா விண்டோஸ்!

உங்கள் கம்ப்யூட்டர் தூங்கி வழிகிறதா? பாயும் குதிரையாய் பல மாதங்களுக்கு முன் ஓடிய விண்டோஸ் இப்போது தவழ்கிறதா? ஒவ்வொரு டாகுமெண்ட்டும், ஒர்க்ஷீட்டும் எடிட் செய்து பிரிண்ட் எடுக்கும் முன் போதும் போதும் என்றாகிறதா? கவலைப்படாதீர்கள். சில விஷயங்களைக் கவனித்தால் போதும். வேகமாக ஓடாவிட்டாலும், நமக்கு எரிச்சல் தராத வேகத்தில் விண்டோஸ் இயங்கும். அவற்றை இங்கு காண்போம்.
கம்ப்யூட்டர் வேகமாகவும் அனைத்து திறனுடனும் இயங்க வேண்டும் என்றால், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மட்டும் மீண்டும் மீண்டும் ட்யூன் செய்து பயனில்லை. அதிக வேகம் தரக்கூடிய ஹார்ட்வேர் பாகங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த வகையில் நாம் முன்னுரிமை தர வேண்டியது ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் கார்டு ஆகும். இவற்றை நாமே இணைப்பதாக இருந்தால், நம் உடலில் இருக்கும் ஸ்டேடிக் மின்சாரம் கம்ப்யூட்டரின் நுண்ணிய பாகங்களுக்குக் கடத்தாமல் இருக்கும் வகையில் அதனை வேறு உலோகங்களைத் தொடுவதன் மூலம் டிஸ்சார்ஜ் செய்திடலாம்.
ராம் மெமரி பலவகைகளில் கிடைக்கிறது. டி.டி.ஆர்2, டி.டி.ஆர்.3 மற்றும் பல பழைய வகைகளில் உள்ளது. தற்போது வரும் கம்ப்யூட்டர்களின் மதர்போர்டுகள் குறிப்பிட்ட வகை ராம் சிப்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். எனவே கம்ப்யூட்டருடன் தரப்பட்ட குறிப்பேட்டினைப் பார்த்து, எந்த வகை ராம் சிப்பினை மதர் போர்டு ஏற்றுக் கொள்ளும் எனப் பார்க்கவும். உங்கள் மெமரியினை 4 ஜிபிக்கு மேல் உயர்த்துவதாக இருந்தால் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 64 பிட் சிஸ்டமாக இருக்க வேண்டும். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 64 பிட் வகையில் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் கம்ப்யூட்டரை அடிக்கடி கேம்ஸ் விளையாடப் பயன்படுத்தாமல் இருந்தாலும், அதிக திறன் கொண்ட கிராபிக்ஸ் கார்டு ஒன்றை கம்ப்யூட்டரில் நிறுவுவது நல்லது. குறிப்பாக விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா அவற்றின் யூசர் இன்டர்பேஸ் திரைகளின் காட்சித் தோற்றங்களைச் சிறப்பாக அமைத்திருப்பதால், கிராபிக்ஸ் கார்டு அதிக திறனுடன் இருப்பது இவற்றின் பயனை நன்கு நமக்குத் தரும்.
உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ் பி, விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 என எதுவாக இருந்தாலும், இதனுடன் ஒட்டிக் கொள்ளும் தேவையற்றவைகளை, அவ்வப்போது நீக்குவது, இவற்றின் வேகமான செயல்பாட்டை உறுதி செய்திடும்.
தேவையற்ற செயல்பாடுகள், செயல்படுத்தாத ஸ்டார்ட் அப் புரோகிராம்களை நீக்கவேண்டும். இதனால் விண்டோஸ் தன் சக்தியை இவற்றில் ஈடுபடுத்தாமல், தேவைப்படும் புரோகிராம்களில் மட்டுமே பயன்படுத்த வழி கிடைக்கும்.
விண்டோஸ் எக்ஸ்பியில், சிஸ்டம் கண்ட்ரோல் பேனலைத் திறந்திடவும். அதில் அட்வான்ஸ்டு (Advanced) டேப்பில் கிளிக் செய்திடவும். பின் செட்டிங்ஸ் (Settings) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் அட்ஜஸ்ட் பார் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் என்ற ரேடியோ பட்டனைக் கிளிக் செய்திடவும். இதனால் மெனுவின் கீழாக ட்ராப் ஷேடோ போன்ற அலங்கார வேலைப்பாடுகள் நீக்கப்படும்.
விஸ்டாவில் சைட் பார் செயல் இழக்கச் செய்வதன் மூலம், இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் ஏரோ (Aero) சூழ்நிலையை நிறுத்துவதன் மூலம், கம்ப்யூட்டரின் மெமரியையும், செயல்திறன் சக்தியையும் (Processing Power) மேம்படுத்தலாம். இதற்கு டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, காண்டெக்ஸ்ட் மெனுவில் பெர்சனலைஸ் (Personalize) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். விஸ்டாவில் விண்டோ கலர் அண்ட் அப்பியரன்ஸ் (Window Color and appearance) என்பதை கிளிக் செய்து அதில் எனேபில் ட்ரான்ஸ்பரன்ஸி (Enable Transparency) என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் விண்டோஸ் 7 பேசிக் (Windows 7 Basic) என்ற தீமைத் தேர்ந்தெடுக்கவும்.
நாம் அடிக்கடி இணையத்தில் பார்க்கும் பல புரோகிராம்களை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிடுகிறோம். இவற்றை இன்ஸ்டால் செய்கையில், சிஸ்டம் தொடங்கும்போதே, அவற்றைத் தொடங்கும் வகையிலும் அமைத்துவிடுகிறோம். இதனால் நமக்குத் தேவையான, அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற (எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், போட்டோ ஷாப் போல) புரோகிராம்களின் இயக்க வேகம் பாதிக்கப்படுகிறது. முதலில் சொல்லப்பட்ட பயன்படுத்தாத பல புரோகிராம்கள், இவற்றின் பின்னணியில் இயங்குவதே இதற்குக் காரணம்.
விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில், ஸ்டார்ட் கிளிக் செய்து சர்ச் புரோகிராம்ஸ் அண்ட் பைல்ஸ் (Search Programs and Files) என்ற பீல்டில் msconfig என டைப் செய்து என்டர் தட்டவும். சிஸ்டம் கான்பிகரேஷன் (System Configuration) விண்டோ இப்போது கிடைக்கும். இவற்றில் உள்ள டேப்களில் Startup என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இனி கட்டளை (Command) பிரிவில் உங்களுக்குத் தேவைப்படாத புரோகிராம் உள்ளதா எனப் பார்க்கவும். எடுத்துக் காட்டாக, ஐட்யூன்ஸ் (iTunes) வந்த காலத்தில் அதனைப் பதிந்திருக்கலாம். இதனால் iTuneshelper.exe மற்றும் QTTask.exe என்ற இரு பைல்கள் இயங்கியவாறு இருக்கும். இவற்றினால் எந்த பயனும் தனியாக இல்லை. இது போன்ற தேவையற்ற புரோகிராம்கள் ஸ்டார்ட் அப்பில் இயக்கப்படுவதைத் தடுக்கலாம். இதனால் ராம் மெமரி இடம் காலியாகி, அவசியமான புரோகிராம்கள் வேகமாக இயங்க வழி கிடைக்கும்.

சிஸ்டம் இன்னும் சுறுசுறுப்பாக இயங்க, அடிக்கடி சி டிரைவின் விண்டோஸ் டைரக்டரியில், டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களைக் காலி செய்திட வேண்டும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கியவுடன் இவற்றைக் காலி செய்திட வேண்டும். அல்லது சேப் மோடில் சென்று இவற்றைக் காலி செய்திடலாம். இதனால் பயன்படுத்தாத பைல்கள் பட்டியலில் உள்ள கடைசி பைல் வரை நீக்க முடியும். இதற்கு ஏற்கனவே இந்த பகுதியில் விரிவாகச் சொல்லப்பட்ட சிகிளீனர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம்.
இதில் இன்னும் ஒன்றைக் கவனிக்கலாம். ஏதேனும் ஒரு புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கத்திலிருந்து அறவே நீக்க, அதனுடன் தரப்பட்டிருக்கும் அன் இன்ஸ்டால் பைலைப் பயன்படுத்துகிறோம். விண்டோஸ் 7ல் அன் இன்ஸ்டால் செயல்பாட்டுக்கென ஒரு சிறிய புரோகிராம் பைல் தரப்பட்டுள்ளது. ஆனால் இவற்றைப் பயன்படுத்தினாலும் சில பைல்கள் கம்ப்யூட்டரில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். அறவே அனைத்து பைல்களை நீக்க சில தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller from http://www.pcworld.com/downloads/file/fid,66703order,6page,1/description.html) என்னும் புரோகிராம் சிறப்பானதாகும். இதனை இலவசமாக இறக்கிப் பயன்படுத்தலாம். இந்த புரோகிராம், குறிப்பிட்ட புரோகிராமின் அன் இன்ஸ்டால் பைலைப் பயன்படுத்தியே அனைத்து பைல்களையும் நீக்குகிறது. பின் மேலும் ஒரு படி சென்று சிஸ்டத்தை ஸ்கேன் செய்து, ரெஜிஸ்ட்ரியைத் தேடிப் பார்த்து, நீக்கப்படும் புரோகிராம் சார்பான அனைத்தையும் நீக்குகிறது. (இந்த புரோகிராம் குறித்து மேலும் தகவல்களுக்கு இந்த வார டவுண்லோட் பகுதியினைப் பார்க்கவும்.)
ஆன்லைன் கேம்ஸ், ஸ்ட்ரீமிங் மீடியா புரோகிராம்கள், இன்டர்நெட் போன் சர்வீசஸ், பிட் டாரண்ட் போன்ற டவுண்லோடிங் புரோகிராம்கள் ஆகியவை அதிக அளவில் டேட்டாவினைக் கையாளுவதால், நெட்வொர்க் பேண்ட் அளவில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன. எனவே இவற்றைத் தேவைப்படும்போது மட்டும் இயக்கி, மற்ற நேரத்தில் இயங்கா நிலையில் வைத்திட வேண்டும்.
ஹார்ட் டிரைவ் ஒன்றை, அது உள்ளே இணைப்பதாயினும் அல்லது வெளியே வைத்து இயக்குவதாயினும், தேர்ந்தெடுக்கையில் அதன் இயக்க வேகம் அதிக பட்சம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளவும். உள்ளே வைத்து இயக்கும் இன்டர்னல் டிரைவ் மற்றும் வெளியே வைத்து, இணைத்து இயக்கும் எக்ஸ்டெர்னல் டிரைவ் என இரு வகைகள் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
வெளியில் வைத்து பயன்படுத்தும் டிஸ்க் டிரைவ்களில் பல நன்மைகள் உண்டு. உங்கள் டேட்டாவினை நீங்களே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். டேட்டா பேக்அப் செய்வதற்கு பாதுகாப்பானதாகும். உள்ளிருந்து இயக்கக் கூடிய டிஸ்க்குகளில் சடா (SATA) வகை இணைப்புகள் சிறந்தவை ஆகும். அடுத்ததாக eSATA எனச் சொல்லப்படும் வேகம் கொண்டவை, யு.எஸ்.பி. அல்லது பயர்வேர் டிரைவ்களைக் காட்டிலும் வேகம் கொண்டவையாகும். ஆனால் இவற்றைப் பயன்படுத்த ஒரு ஆட் ஆன் கார்ட் தேவைப்படும். தற்போது 7,200 ஆர்.பி.எம். வேகத்திற்குக் குறைவாக எந்த ஹார்ட் டிஸ்க்கும் இயங்குவதில்லை. 10,000 மற்றும் 15,000 ஆர்.பி.எம். வேக டிரைவ்கள் கிடைக்கின்றன. ஆனால் சற்று கூடுதலாகப் பணம் கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். தற்போது அறிமுகமாகிப் பரவி வரும் சாலிட் ஸ்டேட் டிஸ்க், கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு அதிக வேகம் தரும். ஆனால் இவை இன்னும் குறைவான விலையில் கிடைப்பதில்லை.
கம்ப்யூட்டர் செயல்படும் வேகத்தினை பிரிண்டர்களும் தாமதப்படுத்துகின்றன. அச்சின் தன்மையைச் சற்றுக் குறைவாக வைத்துக் கொண்டால், கம்ப்யூட்டரின் செயல்பாடு வேகம் அதிகரிப்பதோடு, அச்சிடும் மையும் மிச்சப்படும்.
இணைய தளங்களை அச்சிடுகையில், அந்த பக்கத்தில் காணப்படும் விளம்பரங்கள், கிராபிக்ஸ் படங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்தும். எனவே இந்த படங்கள் இல்லாமல் அச்சிடுவதே நல்லது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், அதில் டூல்ஸ், இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் (Tools, Internet Options) தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் அட்வான்ஸ்டு (Advanced) டேப் கிளிக் செய்திடுக. பின் கிடைக்கும் விண்டோவில் மல்ட்டிமீடியா பிரிவிற்குச் செல்லவும். அதில் �ஷா பிக்சர்ஸ் (Show Pictures) என்று இருப்பதன் எதிரே உள்ள பெட்டியில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் டூல்ஸ், ஆப்ஷன்ஸ் (Tools, Options) தேர்ந்தெடுத்து, கிடைக்கும் விண்டோவில் கண்டென்ட் (Content) டேப்பில் கிளிக் செய்திடவும். Load Images Automatically என்று இருப்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். இந்த இரண்டு பிரவுசர்களிலும் ரெப்ரெஷ் பட்டனை அழுத்தி இணையப் பக்கங்களை படங்கள் இல்லாமல் இறங்கும்படி பெற்று, பின் பிரிண்ட் கட்டளை கொடுக்க வேண்டும். அச்சடித்து முடித்த பின் மீண்டும் மேலே காட்டியுள்ள இடங்களுக்குச் சென்று மீண்டும் கிராபிக்ஸ் படங்களைப் பெறுவதற்கான மாற்றங்களை ஏற்படுத்தவும். குறிப்பிட்டுள்ள வழிகள் அனைத்தும் கம்ப்யூட்டரின் செயல்பாட்டின் வேகம் குறைகையில் நாம் எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளாகும். இவற்றை ஓரிரு முறை எடுத்தால் மட்டும் போதாது. தொடர்ந்து அடிக்கடி இந்த செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் வேகம் இழந்த கம்ப்யூட்டர் தொடர்ந்து பழைய கூடுதல் வேகத்தில் இயங்கும்.

கூகள் சீதோஷ்ண நிலை அறிக்கை

ஒரு ஊரில் அப்போதைய சீதோஷ்ண நிலை எப்படி உள்ளது என்று எப்படி அறியலாம்? அங்கே மழை பெய்கிறதா? பனி கொட்டுகிறதா? வெயில் எவ்வளவு? அந்த ஊரில் உள்ள ஒருவருக்கு போன் போட்டுப் பேசி அறியலாம். பாரிஸ், வாஷிங்டன் போன்ற தொலை தூர நகரங்களில் நிலவும் வானிலை குறித்து அறிய என்ன செய்யலாம்? இங்கு கூகுள் நமக்கு உதவுகிறது.
சீதோஷ்ண நிலை குறித்துத் தகவல் தரும் இணைய தளங்களைத் தேடிப் பின் நீங்கள் தேடும் ஊரின் நிலை குறித்து தேடி அறியலாம். இந்த சுற்று வேலை எல்லாம் வேண்டாம். கூகுள் சர்ச் பாக்ஸில் இதனை சற்று விளக்கமாகவே பெறலாம். மதுரை சீதோஷ்ண நிலை தெரிய வேண்டுமா? Madurai weather என்று டைப் செய்து என்டர் தட்டவும். உடன் கிடைக்கும் திரையில் மதுரையின் அப்போதைய சீதோஷ்ண நிலை செல்சியஸில் காட்டப்படும். அப்போதைய மேகக் கூட்டம் எப்படி? காற்று எப்படி வீசுகிறது. அதன் ஈரப்பதம் என்ன? என்றெல்லாம் காட்டப்படும். பின் அடுத்த நான்கு நாட்களுக்கு எந்த அளவில் சீதோஷ்ண நிலை இருக்கும் என்று காட்டப்படும்.

புதிய அடோப் பிளாஷ் பிளேயர்

அடோப் நிறுவனம் தன் பிளாஷ் பிளேயர் 9க்கான அப்டேட் 3, தன் இணைய தளத்தில் இலவசமாக இறக்கிப் பயன்படுத்த தயாராய் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் பைலில் H.264 என்னும் ஸ்டாண்டர்ட் வீடியோ சப்போர்ட் தரப்படுகிறது. இதனைத்தான் புளு ரே மற்றும் எச்.டி – டி.வி.டி. ஸ்டாண்டர்டாகப் பயன்படுத்துகின்றன. HEAAC ஆடியோ தொழில் நுட்பமும் இதனையே பயன்படுத்துகிறது. அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பிரவுசர்களிலும் அதிக ரெசல்யூசன் திறனுடன் காண இந்த அப்டேட் பைல் வழி தருகிறது.
இன்டர்நெட் டிவி காண்பதில் அடோப் பிளாஷ் தொழில் நுட்பம் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடோப் பிளாஷ் பிளேயர் மற்றும் அடோப் கிரியேட்டிவ் சூட் ஆகியவற்றில் H.264தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவது, பல லட்சக்கணக்கான பிளாஷ் டெவலப்பர் களுக்குப் பெரிதும் உதவியாய் இருக்கும். மேலும் இப்போது இன்டர்நெட் வழியாக தங்களுக்குப் பிடித்த படங்களையும் வீடியோ காட்சிகளையும் பார்க்கும் பழக்கம் அனைத்து நாடுகளிலும் மக்களிடையே பரவி வருகிறது. அவர்களுக்கும் இந்த ஸ்டாண்டர்ட் தொழில் நுட்பம் இணைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை த்தரலாம். அடோப் பிளாஷ் பிளேயர் 9 அப்ளிகேஷன் சாப்ட்வேர் விண்டோஸ், மேக் இன்டோஷ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் கிடைக்கிறது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட www.adobe.com /go/getflashplayer என்னும் முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

யு.எஸ்.பி. டிரைவில் குரோம் ஓ.எஸ்.

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை. இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent)தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன. Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது. நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால், http://carbon.hexxeh.net/chromiumos/ என்ற முகவரியில் கிடைக்கும், பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

எந்த தியேட்டரில் என்ன படம் கூகுள் சொல்கிறது

நம் ஊரில் உள்ள தியேட்டர்களில் என்ன சினிமா காட்டப்படுகிறது? எப்படி தெரிந்து கொள்ளலாம்? போன் செய்து, கல்லூரியில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் கேட்டு, சினிமாத் துறையில் வேலை பார்க்கும் நபர்களிடம் கேட்டு, சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் பெரிய அளவிலான விளம்பர போஸ்டர்களைக் கண்டு எனப் பல வழிகள் முன்பும் இப்போதும் உள்ளன. இவற்றுடன் இன்னொரு வழியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இணையம் வழி கூகுள் தரும் வழி. ஆம், http://google.com/movies என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றால் அங்கு இடது புறம் ஊர் தேர்ந்தெடுக்க கட்டம் தரப்பட்டிருக்கும். அதில் நீங்கள் அறிய விரும்பும் ஊரின் பெயரை டைப் செய்து என்டர் தட்டுங்கள். பெரிய, சிறிய நகரங்கள் அனைத்தும் இதில் இடம் பெறுகின்றன. ஊர் டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் அந்த ஊரில் உள்ள தியேட்டர்களின் பெயர், என்ன படம், எத்தனை மணிக்குஷோ என்ற விபரங்கள் எல்லாம் கிடைக்கின்றன. இப்போதெல்லாம் பல தியேட்டர்கள் ஆன்லைனிலேயே டிக்கட் புக் செய்திடும் வசதிகளைத் தந்துவருகின்றன. இருப்பினும் அனைத்து தியேட்டர்களிலும் என்ன படம் ஓடுகிறது என்ற தகவலைத் தரும் திட்டத்தினை கூகுள் தான் வழக்கம்போல தந்துள்ளது.

விண்டோஸ் டிஸ்பிளே சில விளக்கங்கள்

 

கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள்!
கம்ப்யூட்டர் வாங்கியபோது திரை எப்படி தோன்றியதோ, அப்படியே சிலர் வைத்திருப்பார்கள். பலருக்கு வண்ணக் கலவை பிடிக்காமல் இருக்கலாம். சிலருக்கு அதில் உள்ள எழுத்துக்களைப் பார்த்து படிப்பதில் சிரமம் இருக்கலாம். இருந்தாலும் கம்ப்யூட்டர் இப்படித்தான் காட்சி அளிக்கும் என்று எண்ணி அப்படியே பயன்படுத்துவார்கள். அதெல்லாம் வேண்டாம். நம் விருப்பப்படி திரைத் தோற்றத்தினை அமைத்துக் கொள்ளலாம். இதனைத்தான் விண்டோஸ் டிஸ்பிளே என்று கூறுகிறார்கள். இவற்றில் பல அம்சங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் அவை என்ன மற்றும் எதனைக் குறிக்கின்றன என்று அறிந்து கொண்டால், நம் கம்ப்யூட்டர் நம் மனதிற்கேற்றபடியான தோற்றத்தில் இருக்கும். அவை குறித்து இங்கு காணலாம்.
டிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதற்கான விண்டோவினை டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுத்து பெறலாம். இதனையே கண்ட்ரோல் பேனல் (Control Panel) சென்று அங்கு Appearance and Themes பிரிவில் display கிளிக் செய்து பெறலாம். இவ்வாறு செல்கையில் Display Properties என்னும் விண்டோ கிடைக்கும். இதில் செட்டிங்ஸ் அமைக்க Themes, Desktop, Screen Saver, Appearance மற்றும் Settings என்னும் ஐந்து பிரிவுகள் தரப்பட்டிருக்கும். இதில் எந்த பிரிவில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் Apply அல்லது OK என ஏதாவது ஒன்றில் அல்லது இரண்டிலும் கிளிக் செய்து வெளியேற வேண்டும்.
தீம்ஸ் (Themes) : தீம் என்பது ஸ்கிரீன் பின்னணி. அத்துடன் சவுண்ட் அரேன்ஞ்மென்ட் மற்றும் ஐகான் அமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தாகும். இந்த பிரிவில் உங்களுடைய கம்ப்யூட்டரில் தோன்றும் அனைத்து விண்டோவிற்கான வண்ணங்கள், ஐகான்கள் மற்றும் ஒலி வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
டெஸ்க்டாப் (Desktop): இந்த பிரிவினைத் தேர்ந்தெடுத்து டெஸ்க்டாப்பிற்கான பேக்ரவுண்ட் எனப்படும் பின்னணியில் தெரியும் படத்தை அமைக்கலாம். அந்த விண்டோவில் கொடுத்துள்ள படங்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஆன்லைனில் சென்று ஏதேனும் படம் ஒன்றை எடுத்து அமைக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள படங்களையும் பேக்ரவுண்ட் படமாக அமைக்கலாம். அது உங்கள் போட்டோவாகவோ அல்லது கார்ட்டூன் கேலிச் சித்திரமாகவோ இருக்கலாம். இந்த விண்டோ மட்டுமின்றி இத்தகைய பட பைல்கள் அல்லது இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் உங்கள் மனதைக் கவரும் படங்கள் ஆகியவற்றில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும்மெனுவில் Set as Desktop Background என்பதில் கிளிக் செய்தும் பேக்ரவுண்டை அமைக்கலாம். Desktop Items என்ற விண்டோவினைப் பெற இங்கு Customize Desktop என்பதில் கிளிக் செய்திடவும். இதில் General மற்றும் Web என இரண்டு பிரிவுகள் கிடைக்கும். இதில் General பிரிவில் எந்த ஷார்ட் கட் ஐகான்கள் டெஸ்க்டாப்பில் காட்டப்பட வேண்டும் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம். அல்லது Desktop Cleanup என்னும் வசதியைப் பயன்படுத்தி அடிக்கடி பயன்படுத்தாத ஷார்ட்கட் ஐகான்களை எடுத்துவிடலாம். இந்த ஷார்ட் கட் ஐகான்களை எடுப்பதனால் அவை இயக்கிக் கொண்டு வரும் புரோகிராம்களுக்கு எந்த பாதிப்புவராது. புரோகிராம்களுக்கான குறுக்கு வழிகளை எடுக்கிறோம், அவ்வளவுதான்.
அடுத்ததாக Screen Saver என்னும் பிரிவு. இந்த பிரிவில் ஸ்கிரீன் சேவராக எந்த காட்சி வர வேண்டும் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம். அல்லது நீங்களே ஒரு காட்சியை உருவாக்கி பயன்படுத்தலாம். நீங்கள் கம்ப்யூட்டரில் எந்த வேலையையும் குறிப்பிட்ட காலத்தில் (நிமிடங்கள்) இயக்காமல் இருந்தால் ஸ்கிரீன் சேவர் இயக்கப்பட்டு காட்சி அளிக்கும். இணையத்தில் அழகான பல ஸ்கிரீன் சேவர்கள் கிடைக்கின்றன. ஆனால் இவை நம்பகமான தளங்களில் உள்ளனவா என்று பார்த்து இறக்கிப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இப்படிப்பட்ட அழகான ஸ்கிரீன் சேவர்களுடன் வைரஸ் அல்லது உங்கள் பெர்சனல் தகவல்களைத் திருடும் பிஷிங் புரோகிராம்களும் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்கிவிடும். விண்டோஸ் புரோகிராமிலேயே உள்ள ஸ்கிரீன் சேவர்களைப் பயன்படுத்துவதே நல்லது. பட்டியலில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் அது எப்படி தோற்றமளிக்கும் என முன்காட்சியாகக் காட்டப்படும். அதனைப் பார்த்து உங்களுக்குப் பிடித்தால் அதனையே தேர்ந்தெடுத்து அமைக்கலாம். ஸ்கிரீன் சேவரே தேவையில்லை என்றாலும் அதற்கான பிரிவைத் தேர்ந்தெடுத்து அமைத்து வெளியேறலாம்.
இதே விண்டோவில் Power settings என்ற பிரிவில் நீங்கள் கம்ப்யூட்டரை குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தாமல் இருந்தால் மானிட்டருக்கு வரும் மின் சப்ளையை நிறுத்தவும் பின் நீங்கள் இயங்கத் தொடங்கியவுடன் இயக்கவும் செட் செய்திடலாம்.
அப்பியரன்ஸ் (Appearance): இந்த பிரிவுதான் உங்கள் டெஸ்க்டாப்பின் மிடுக்கான தோற்றத்தினை செட் செய்திடும் பிரிவாகும். இதில் விண்டோவின் ஸ்டைல் மற்றும் கலரை செட் செய்திடலாம். விண்டோவில் காட்டப்படும் பட்டன்கள் மற்றும் எழுத்துக்களின் அளவினை செட் செய்திடலாம். இந்த பிரிவில் கிடைக்கும் கீழாகச் செல்லும் அம்புக் குறியினை அழுத்தி பல்வேறு செட்டிங்குகளைப் பார்க்கலாம். அதில் எது உங்களுக்கு விருப்பமாக உள்ளதோ அதனைத் தேர்ந்தெடுத்தால் அது எப்படி தோற்றமளிக்கும் என்பது அருகில் கட்டத்தில் காட்டப்படும். அது பிடித்துப் போனால் அதனைத் தேர்ந்தெடுத்து செட் செய்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எழுத்தின் அளவு (Font size) என்பது பலருக்கும் பயன்படும் ஒரு வசதி. விண்டோவில் காட்டப்படும் எழுத்தின் அளவு சிறியதாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் இன்னும் சற்று பெரியதாக இருக்க வேண்டும் என எண்ணினால் இதனை மாற்றி செட் செய்திடலாம். இன்னும் கூடுதலாக இரண்டு வகைகள் உண்டு. அவை: Large Fonts மற்றும் Extra Large Fonts.. இன்னும் பல மாற்றங்களை இதில் மேற்கொள்ளலாம். Advanced என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து விண்டோ, அதன் பார்டர், ஐகான் அளவு மற்றும் மெனுக்கள் எப்படித் தோன்ற வேண்டும் என்பதனை செட் செய்திடலாம்.
செட்டிங்ஸ் (Settings) : இந்த டேப் தரும் பிரிவில் ஸ்க்ரீன் ரெசல்யூசன் மற்றும் கலரின் தன்மையை செட் செய்திடலாம். ரெசல்யூசன் என்பது திரையில் எத்தனை பிக்ஸெல்களில் வண்ணம் தரப்பட வேண்டும் என்பதாகும். எந்த அளவிற்கு அதிகமாக ரெசல்யூசனில் இதனை செட் செய்கிறோமோ அந்த அளவிற்கு திரையின் தோற்றம் தெளிவாகக் கிடைக்கும். கூடுதலான ரெசல்யூசன் உங்களுக்கு அதிக அளவில் திரை இடத்தைக் கொடுக்கும். ஆனால் இதனால் டெக்ஸ்ட் மற்றும் ஐகான் மிகச் சிறியதாக இருக்கலாம். எனவே எழுத்துவகையினைப் பெரிதாக்கி ஐகான் களையும் பெரியதாக அமைக்கலாம். உங்களுடைய மானிட்டரில் எந்த அளவிற்கு ரெசல்யூசனை கூடுதலாக வைக்க முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே வைக்க முடியும். பல ரெசல்யூசன்களில் வைத்து சோதனை செய்து பார்த்து எது உங்களுக்கு நிறைவாக இருக்கிறதோ அந்த அளவில் வைத்துக் கொள்ளலாம். Color quality ஆப்ஷன் எப்போதும் Highest (32 bit) என்ற அளவில் வைக்கப்பட வேண்டும். உங்களுக்கு டிஸ்பிளே பிரச்னைகள் இருந்தால் Troubleshoot என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அங்கு தீர்வுகள் கிடைக்கும். இதே விண்டோவில் இருக்கும் அஞீதிச்ணஞிஞுஞீ பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது General, Adapter, Monitor, Troubleshoot, Color Management என்ற டேப்களுடன் விண்டோ ஒன்று காட்டப்படும்.
General: கூடுதலான ரெசல்யூசனில் திரைக் காட்சி அளவை செட் செய்திருந்தால் இங்கு உள்ள DPI (dots per inch) செட்டிங்ஸ் மூலம் டெக்ஸ்ட் உட்பட அனைத்து ஸ்கிரீன் சமாச்சாரங்களையும் பெரிதாகக் காட்டலாம்.
Adapter: இந்த பிரிவு உங்களுடைய கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் கார்டு குறித்த தகவல்களைக் கொடுக்கும். இதில் உள்ள Properties என்ற பிரிவில் கிளிக் செய்தால் அப்போது பயன்பட்டுக் கொண்டிருக்கும் டிரைவர் சாப்ட்வேர்கள் அனைத்தும் குறித்த தகவல்கள் கிடைக்கும்.

Monitor: மானிட்டர் திரை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் ரெப்ரெஷ் ரேட்டை இங்கு அதிகப்படுத்தலாம். குறைவான ரெப்ரெஷ் ரேட் இருந்தால் அதனால் கண்களுக்குக் கெடுதல் வருமாதலால் இந்த புதுப்பிக்கும் ரேட்டினை அதிகமாக வைத்தல் நல்லதுதான். இந்த திரையில் Hide modes that this monitor cannot display என்று இருப்பதனை டிக் செய்திட வேண்டும். அதன் பின் ஆரோ அழுத்தி மெனுவினை விரித்து அதிக பட்ச ரெப்ரெஷ் ரேட்டினை அமைக்கவும். எல்.சி.டி. திரைகளுக்கு இந்த பிரச்னை இல்லை.
Troubleshoot: இதில் உள்ள Hardware acceleration slider ஐப் பயன்படுத்தி கிராபிக்ஸ் கார்ட் செயல்பாட்டை மாற்றலாம்.
Color Management: டிசைனர்கள் மற்றும் போட்டோ கிராபர்கள் பலவகையான கலர் திட்டங்களை அமைக்க இந்த பிரிவு உதவுகிறது. கடைசியாக உள்ள டேப் உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ் கார்டிற்கான செட்டிங்ஸ் அமைப்புகளை அமைக்க உதவுகிறது. இதனை ட்யூன் செய்வதற்கான வழிகளை அந்த கிராபிக்ஸ் கார்ட் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பெற வேண்டும். அவ்வப்போது அந்நிறுவனம் இந்த கார்டுக்கென வழங்கும் மேம்படுத்தப்பட்ட டிரைவர் புரோகிராம்களை டவுண்லோட் செய்து சிஸ்டம் பைல்களுடன் சேர்க்க வேண்டும்.