எங்கு பார்த்தாலும் சின்ன சிகப்பு எக்ஸ்

எங்கு பார்த்தாலும் சின்ன சிகப்பு எக்ஸ்

நீங்கள் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் பயன்படுத்துபவராக இருந்தால் அதனைத் திறந்து அல்லது சிகப்பு எக்ஸ் தென்படும் ஒரு இ–மெயிலைத் திறந்து பின் Tools, Options சென்று Security என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு “Block images and other external content in HTML email” என்ற இடத்தில் உள்ள சிறு பெட்டியில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து நீங்கள் அனுப்பும் இமெயிலுக்கு வருவோம். உங்கள் நண்பர்களில் பலர் நீங்கள் அனுப்பும் இமெயிலுடன் படங்கள் இல்லை, தெரிவதே இல்லை என்று குற்றச் சாட்டினைக் கொண்டு வந்தால் கீழ்க்கண்டவாறு செட் செய்திடுங்கள்.

முதலில் Tools, Options சென்று பின் Send டேப்பினைத் தேர்ந்தெடுங்கள். Mail Sending Format பிரிவில் HTML என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் பின் HTML Settings என்னும் பட்டனில் கிளிக் செய்திடுங்கள். அங்கு “Send pictures with messages” என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். இது உங்களுடைய அனைத்து இமெயில் பிரச்னைகளையும் தீர்த்துவிடும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் படம் தெரிவதில் இருக் கின்ற பிரச்னைக்கு அடுத்து வருவோம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பைத் திறந்து Tools, Internet Options சென்று Advanced என்னும் டேபில் கிளிக் செய்திடவும். அங்கு Multimedia என்னும் பிரிவைப் பார்க்கவும். அங்கு “Show Pictures” என்று சொல்லும் இடம் அருகே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால் Tools, Options சென்று Web Features என்னும் ஐகானில் கிளிக் செய்திடவும். “Load Images” என்னும் பெட்டியிலும் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

சில வேளைகளில் உங்கள் பிரவுசர் செட்டிங்ஸ் அமைக்கும் போது பாதுகாப்பு கருதி செக்யூரிட்டி சம்பந்தமாக பலவற்றைத் தேவை என அமைத்திருப்பீர்கள். இதனால் உங்கள் வெப் பிரவுசர் மிகவும் பாதுகாப்பாக செயல்படும் முறையில் படங்களை அனுமதிக்காமல் இருக்கலாம். அப்படி செட் செய்திருந்தால் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options, சென்று Security டேபில் கிளிக் செய்து அங்கே Default Level பட்டனில் கிளிக் செய்திடவும். இத்தகைய பாதுகாப்பு செட்டிங்ஸ் அனைத்தையும் மீடியம் லெவலிலேயே வைத்திடவும்.

படங்கள் கிடைக்காமல் சிகப்பு எக்ஸ் வர இன்னொரு காரணம் உங்களுடைய பயர் வால் அல்லது ஆண்டி வைரஸ் புரோகிராமாக இருக்கும். அங்கு “Disable Web Bugs” என்று இருப்பதைக் கண்டு பிடியுங்கள். இதனை ஆப் செய்துவிடுங்கள். அப்படிச் செய்தால் அனைத்து வெப் படங்களும் அனுமதிக்கப்படும்.

ஒரு சில வேளைகளில் நீங்கள் பார்க்கின்ற இணைய தளத்தை பராமரித்து வருபவர்கள் சில புணரமைப்பு வேலைகளை மேற்கொள்ள சற்று நேரத்திற்கு படங்கள் உங் கள் கம்ப்யூட்டருக்குச் செல்வதைத் தற்காலிகமாக தடுத்து வைத்திருக்கலாம். இவை எல்லாவற்றிற்கும் மே லாக உங்கள் இமெயில் அல்லது வெப் சைட்டைப் பார்வையிடுகையில் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் உள்ளதா என்பதனைச் சோதித்து இல்லை எனில் தொடர்பு கொடுங்கள்.
மேலே சொன்ன அனைத்தையும் வரிசையாகப் பார்த்துவிட் டால் நிச்சயமாய் நீங்கள் விரும் பும் படங்கள் உங்கள் இமெயில் மற்றும் இணைய தளப் பக்கங்களில் கிடைக்கும்.

ஒரு மறுமொழி

  1. […] எங்கு பார்த்தாலும் சின்ன சிகப்பு எக்… […]