வெயில் படாமல் வாழும் வசதியானவர்களின் ,எந்தெந்த பாகம் சீக்கிரம் பழுதாகும் தெரியுமா ?

வெயிலில் கிடைக்கும் வைட்டமின் டி பல முக்கியமான செயல்பாடுகளைக் கொண்ட ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.

உலகளவில் 1 பேரில் 8 பேருக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளது
வைட்டமின் டி நல்ல ஆதாரங்கள்
வைட்டமின் டி இன் சிறந்த ஆதாரம் சூரிய ஒளி. இருப்பினும்,

ஆரோக்கியமான சீரான உணவின் ஒரு பகுதியாக இயற்கையாகவே வைட்டமின் டி கொண்டிருக்கும் முட்டை போன்ற உணவுகளை அனுபவிப்பது உங்கள் அன்றாட வைட்டமின் டி தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.

வைட்டமின் டி உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையிலான உணவுகளில் மட்டுமே காணப்படுகிறது:

முட்டையின் மஞ்சள் கருக்கள்
எண்ணெய் மீன்
சிவப்பு இறைச்சி
கல்லீரல்
காளான்

இதயம் தொடர்பான ஆய்வுகள் பலவற்றினை மேற்கொண்டிருந்த பிரித்தானிய ‘லீட்ஸ்’ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இதயத்தொழிற்பாட்டில் ஊட்டச்சத்து ‘டி’ செலுத்தும் செல்வாக்குத் தொடர்பில் நேரடிப் பரீட்சிப்புக்களை மேற்கொண்டிருந்தனர்

ஊட்டச்சத்து ‘டி’ ஆனது இதயத்தின் ஒழுங்கற்ற தன்மைகளை மாற்றியமைப்பதில் செல்வாக்குச் செலுத்தும் என்பதைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.

ஊட்டச்சத்து ‘டி’ அல்லாவிடின், ஆங்கிலத்தில் விட்டமின் ‘டி’ என்ற சொல்லினைக் கேட்டதும் சூரியஒளி நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது. சூரியனிலிருந்து வரும் குறிப்பிட்ட அலைவீச்சிலான கதிர்கள் தோலில் படுகையில், ஊட்டச்சத்து ‘டி’ உருவாகும் எனச் சிறுவயதில் படித்திருப்பீர்கள். இந்த வழிமுறையில் மட்டுமல்லாது, பாற்கட்டி, முட்டை, சில வகைத் தானியங்கள் என்பவற்றினை உணவாக நுகர்கையிலும் இந்த ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுகின்றது.

எனவே, இதய நோயாளிகள் வெளியிடங்களில் நடமாடுவது, அவர்களின் உடலில் சூரிய ஒளி படுவதற்கு வழியேற்படுத்தி, உடலில் ஊட்டச்சத்து ‘டி’ உருவாகுவதற்கு வழிவகுக்கும். ஆனால் அந்நபர்களின் முதுமையும், இதயநோயின் அபாய சாத்தியமும் வெளிப்புறத்திலான நடமாட்டத்திற்கு அனுமதிக்காவிட்டால், இந்த ஊட்டச்சத்துக் கொண்ட உணவுகளை உட்கொள்வது சிறந்தது. அல்லாவிடின், ஊட்டச்சத்து ‘டி’ கொண்ட மருந்துகளை உரிய பரிந்துரையளவில் உள்ளெடுத்தேனும் இதயம் சிறந்த முறையில் தொழிற்பட வழிவகுக்கலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்