Category Archives: ஆய்வுகளும் முடிவுகளும்

3000 எலக்ட்ரோட்.. இதுதான் எதிர்காலம்.. மனித மூளைக்குள் நானோ சிப் வைக்கும் எலான் மஸ்க்.. என்ன பிளான்?

மனித மூளையில் சிப்களை பொருத்தி, கணினிகள் மூலம் அதை கட்டுப்படுத்தும் திட்டம் ஒன்றை எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மனிதர்களின் நோய்களை குணப்படுத்த இந்த சிப்கள் உதவும் என்று அவர் கூறியுள்ளார். யோசித்து பார்க்கவே திகிலூட்டும் இந்த டெக்னலாஜி குறித்து விசித்திரமான அறிவிப்பு ஒன்றை மஸ்க் இன்று வெளியிட்டார்.

Continue reading →

கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!

பூமியில் தற்போது வரை ஏழு கண்டங்கள் ஒட்டுமொத்த கிரகத்தின் குறுக்கே பரவியுள்ளது என்று கூறிவந்தனர். பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கிறது என்பது முற்றிலுமான ஒரு பெரிய பொய் என்று GNS விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இவர்களின் கணக்குப்படி பூமியில்

Continue reading →

இப்படி தூங்கினால் அப்படி இருப்பீர்கள்!

400x400_IMAGE48736690

நோய்கள், மருந்துகள், சிகிச்சைகள் என தீவிர மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நடுவில் ரிலாக்ஸ் சர்வே இது. இங்கிலாந்தை சேர்ந்த தூக்கவியல் சிறப்பு மருத்துவரான க்ரிஸ் இட்ஸிகோவ்ஸ்கி, ‘ஒருவர் தூங்கும் முறையை வைத்தே அவரது தனிப்பட்ட சுபாவத்தைச் சொல்லிவிட முடியும்’ என்பதைத் தன்னுடைய ஆய்வின் முடிவாகக் கூறியிருக்கிறார்!”ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான

Continue reading →

அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறையும்: ஆய்வில் தகவல்

புதுடில்லி : அதிகமாக டி.வி., பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறந்து விடுவார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டிவி மட்டும் விதிவிலக்கல்ல. பொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் டிவி, உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. டிவி மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் டிவி பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Continue reading →

ஊறுகாய் ஓர் ஒப்பிடு–By Concert

Page 1 Continue reading →

`பின்புறத்தை’ப் பாதிக்கும் இருக்கைப் பணி!

 

அலுவலகத்தில் நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து பணிபுரிவது நமது ஆசனப் பகுதியைப் பாதிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
`டெஸ்க் டெர்ரீர்’ எனப்படும் இந்தப் பாதிப்பு, சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். அவர்கள், அதிக நேரம் இருக்கையில் அசையாமல் அமர்ந்து வேலைபார்ப்பவர்களின் `பின்புறத்தை’ ஸ்கேன் செய்தார்கள். அப்போது, அவர்களின் ஆசனப் பகுதி தசைகள் சுருங்கியும், சேதமடைந்தும் இருப்பது தெரியவந்தது.
அதிக நேரம் அமர்ந்து, அலட்டிக்கொள்ளாமல் வேலை பார்ப்பவர்களின் பின்புறத்தில் கொழுப்பு சேர்கிறது, அது தசை திசுக்களுக்குள்ளும் ஊடுருவுகிறது.
இதுதொடர்பாக நுபீல்டு ஆரோக்கிய மையத்தின் பிசியாலஜி துறைத் தலைவர் கிறிஸ் ஜோன்ஸ் கூறுகையில், “ஒருவர் நாள் முழுவதும் இருக்கையில் உட்கார்ந்திருந்தால், அவரது இடுப்பின் முன்புறத் தசைகள் அளவுக்கு அதிகமாகச் செயல்படுபவையாகவும், இறுக்கமாகவும் ஆகின்றன. அதன் விளைவாக, குறிப்பிட்ட நபர்களின் பின்புறத்தில் அந்த வடிவத்தைக் கொடுக்கும் மூன்று முக்கியத் தசைகளான குளூட்டியஸ் மாக்சிமஸ், குளூட்டியஸ் மீடியஸ், குளூட்டியஸ் மினிமஸ் ஆகியவை பாதிக்கப்படுகின்றன” என்கிறார்.
ஆண்களுக்குப் பெரும்பாலும் இடுப்பைச் சுற்றி கொழுப்புச் சேர்கிறது என்றால், பெண்களுக்குப் பெரும்பாலும் பின்புறத்தில் கொழுப்பு திரள்கிறது என்றும் கூறுகிறார் ஜோன்ஸ்.

பாராட்டாலும் தீமை ஏற்படும்!

குழந்தைகளை உற்சாகப்படுத்த `சும்மாகாச்சும்’ பாராட்டுவது சில பெற்றோர், ஆசிரியர்களின் வழக்கம். ஆனால் இந்த `வெற்றுப் பாராட்டால்’ நன்மையை விடத் தீமையே அதிகம் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.

நாம் நல்ல எண்ணத்தில் குழந்தைகளைப் பாராட்டினாலும், தகுதியில்லாத நேரத்தில் பாராட்டுவது அவர்களின் சுயமரியாதையைப் பாதிக்கும், ஒருகட்டத்தில் மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது, நல்லவிதமான பாராட்டுகள், ஒருவர் விரக்தி அடையாமல் தடுக்கும் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால் ஒருவரைப் பாராட்டிக்கொண்டே இருப்பது, எங்கே தனது வேலையில் பிறர் குறை கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற படபடப்பை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்கிறார்கள். அத்துடன் அது முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டை போட்டுவிடுமாம்.

இதுதொடர்பாக, 295 அமெரிக்க மாணவர்களும், 2 ஆயிரத்து 780 ஆங்காங் மாணவர்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தங்கள் செயல்பாடுகளுக்கு ஏற்பப் பொருத்தமான பாராட்டைப் பெற்ற மாணவர்களை விட, மிகையான பாராட்டுப் பெற்ற மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாவது தெரியவந்தது.

`எங்களின் இந்தக் கண்டுபிடிப்பு, தகுதியில்லாவிட்டாலும் நன்றாகப் பாராட்டுவது நன்மை புரியும் என்ற பொதுவான கருத்துக்கு எதிராக உள்ளது’ என்று வியப்புத் தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

`பெண்களே ஒழுக்கமானவர்கள்!’

`ஆண்களை விடத் தாங்களே ஒழுக்கமானவர்கள்’ என்பது பெண்கள் எப்போதும் பெருமைப்பட்டுக்கொள்ளும் விஷயம். அது உண்மைதான் என்பது தற்போது ஆய்வுரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நேர்மை, ஒழுக்கம் தொடர்பான கேள்விகளுக்குப் பெறப்பட்ட பதில்கள் அடிப்படையில் இந்த ஆய்வு அமைந்தது. இதில்தான், ஒழுக்கத்துக்கு ஆண்களை விடப் பெண்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பலர், கண்டிப்பான நேர்மைக் கொள்கை உடையவர்களாக இருப்பது தெரியவந்தது.

ரோஜர் ஸ்டீயர் என்ற முன்னணி தத்துவியலாளர் இந்த ஆய்வை மேற்கொண்டார். இதில், பெண்கள் தங்களின் ஒரு முடிவு பிறர் மீது எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யோசித்து முடிவெடுக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு நபரின் ஒழுக்கம், ஓர் அலுவலகத்தில் நுழையும்போது அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நான்காண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்து தொகுத்திருக்கிறார் ரோஜர்.

இவர் தனது ஆய்வுக்காக 200 நாடுகளைச் சேர்ந்த 60 ஆயிரம் தன்னார்வப் பங்கேற்பாளர்களிடம் கேள்விகள் கேட்டுப் பதில்களைப் பெற்றார். அந்த 60 ஆயிரம் பேரில் தலைமை நிர்வாகிகள் முதல் அடிப்படைத் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் வரை அடங்குவர்.

ஒவ்வொருவரிடமும், அவர்களைப் பற்றிய பல்வேறு கருத்துகளை மதிப்பிடும்படி கோரப்பட்டது. உதாரணமாக, `உங்களின் சக ஊழியர்கள் அல்லது குடும்பத்தினர் உங்களை நேர்மையானவர் என்று எப்போதாவது கூறியிருக்கிறார்களா?’ என்பது போன்ற கேள்விகள்.

`நான் எப்போதும் என் மீது பிறர் வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடப்பேன்’, `நான் சுய கட்டுப்பாடு மிக்க நபர்’ போன்ற கருத்துகளை தங்களுடன் பொருத்தி மதிப்பிடும்படியும் பங்கேற்பாளர்களிடம் கேட்கப்பட்டது.

மொத்தத்தில் இந்த ஆய்வு முடிவு, பெண்களைத் தலைநிமிரச் செய்வதாகவும், ஆண்கள் தலையில் குட்டுவதாகவும் அமைந்துவிட்டது!

சாக்லேட் ஆசையா? வேலையில் `அலுப்பு’!

அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது, கொஞ்சம் சாக்லேட் சாப்பிடலாம் அல்லது ஒரு கோப்பை சூடான காபி அருந்தலாம் என்று தோன்றுகிறதா? நீங்கள் நிச்சயம் `போரடித்து’ போயிருக்கிறீர்கள்.

இங்கிலாந்தின் மத்திய லங்காஷயர் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் இதுதொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அலுவலகப் பணி புரியும் சுமார் 100 பேரை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களுக்குப் பணியின்போது போரடித்தால் நொறுக்குத் தீனிகளைக் கொறிப்பதாகவும், காபி போன்ற பானங்களைப் பருகுவதாகவும் தெரிவித்தனர்.

“வேலையில் ஒருவருக்கு போரடிக்கிறதா, இல்லையா என்பது, வேலை எந்தளவு நெருக்கடியானது, ஒருவரின் ஆளுமை எப்படிப்பட்டது என்பன போன்றவற்றைப் பொறுத்தது” என்கிறார், தலைமை ஆய்வாளரான சாண்டி மான்.

இந்த ஆய்வாளர்கள் தாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பணியாளர்களிடம், அவர் களின் வேலை நேரப் பழக்கம் குறித்த கேள்வித்தாளை நிரப்பித் தரும்படி கேட்டனர். அதிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு ஓர் அறிக்கையைத் தயார் செய்தனர். அதை, பிரிட்டீஷ் மனோதத்துவவியல் கழகத்தின் பணி உளவியல் பிரிவின் வருடாந்திர மாநாட்டில் சமீபத்தில் தாக்கல் செய்தனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பணியாளர்களிடம் `போரடிப்பது’ எந்த அளவுக்கு இருக்கிறது என்றும் கேட்கப்பட்டது. அதில், `போரடிப்பதே இல்லை’ என்பது முதல், `பெரும்பாலான நேரங்களில் `போர்’தான்’ என்பது வரை பதிலாக வந்தன.

பணியாளர்களில் 25 சதவீதம் பேர், தாங்கள் பெரும்பாலான வேளைகளில் உற்சாகம் குன்றிப் போவதாகக் கூறினர். அதிகமாக போரடிப்பதாக கூறியவர்கள், அதிகமாக விடுப்பு எடுக்கவும், வேலையை விடவும் விருப்பம் உள்ளவர்களாக இருந்தனர்.

வேலை அலுப்பில் இருந்து தப்பித்து, தங்களைத் தாங்களே தூண்டிக்கொள்ளவே பணியாளர்கள் பலரும் சாக்லேட், பானம் போன்றவற்றை நாடுவதாக ஆய்வாளர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

`வாசம்’ பிடித்தால் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்!


ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அறிய வேண்டுமா? அவரது வாசத்தைக் கொஞ்சம் மோப்பம் பிடித்தாலே போதும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதுதொடர்பான ஆய்வை போலந்து நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் ஆய்வுக்கு உதவிய தன்னார்வலர்களிடம், சிலரின் ஆடை மணத்தை மோப்பம் பிடிக்கச் செய்து, அதன் மூலம் அவர்களைப் பற்றிக் கணிக்கச் செய்தனர்.

அப்போது அவர்களின் கணிப்பு முழுக்க முழுக்கச் சரியாக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் பொருந்துவதாக இருந்தது. நமக்கு ஒருவரைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில், காணும், கேட்கும் விஷயங்களுடன், அவரது `வாசமும்’ முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறார்கள் போலந்து ஆய்வாளர்கள்.

“நாம் ஒவ்வொருவரும் நமது தோற்றத்தின் மூலம் மட்டுமின்றி, வாசத்தின் மூலமாகவும் நம்மை வெளிப்படுத்துகிறோம்” என்று இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான, வுரோகிளாவ் பல்கலைக்கழகத்தின் அக்னீஷ்கா சொரோகோவ்ஸ்கா கூறுகிறார்.

இந்த ஆய்வுக்காக ஆய்வாளர்கள் 30 ஆண்களையும், 30 பெண்களையும் தொடர்ந்து 3 நாள் இரவு வெள்ளை காட்டன் டீ-ஷர்ட்களை அணியும்படி கேட்டுக்கொண்டனர். அவர்கள் எந்த வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்தக் கூடாது, சோப் கூட உபயோகிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த `வாசனை தானக்காரர்களிடம்’ இருந்து பெறப்பட்ட டீ-ஷர்ட்களை 100 ஆண்களும், 100 பெண்களும் மோப்பம் பிடித்துக் கருத்துக் கூறுமாறு கேட்கப்பட்டது. பின்னர் அந்தக் கருத்துகளை, டீ-ஷர்ட்களை அணிந்தவர்களிடம் தெரிவித்து, எதெல்லாம் சரி என்று கேட்கப்பட்டது. அப்போது, சில கணிப்புகள் பொருந்தவில்லை என்றபோதும், சில கணிப்புகள் மிகப் பொருத்தமாக இருந்தன. வாசத்தைக் கொண்டே ஒருவரின் ஆளுமையைக் குறிப்பிடத்தக்க அளவு கண்டுபிடித்துவிடலாம் என்பது புதுமையான விஷயமாகக் கருதப்படுகிறது.