Category Archives: தொடர்கள்

தோற்றவர்களின் கதை -ஜி.டி.நாயுடு

‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட மகத்தான கண்டுபிடிப்பாளர் ஜி.டி.நாயுடு. கோவை மாநகரம் இன்றும் தொழில்​முனைப்புக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என்றால், அதற்கான விதைகளைப் போட்டவர்களில் முக்கியமானவர் ஜி.டி.நாயுடு. மோட்டார் வாகன மேம்பாடு, கேமரா, வானொலி, விவசாயம் எனப் பல துறைகளில் பிரமிக்கத்தக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர் அவர். 

Continue reading →

தோற்றவர்களின் கதை – 9

சுசி திருஞானம்

சில்வஸ்டர் ஸ்டாலோன்!
1976-ல் தொடங்கி, கால் நூற்றாண்டு காலம் ஹாலிவுட்டைக் கலக்கிய சூப்பர் டூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன். ராக்கி, ராம்போ போன்ற கதாபாத்திரங்கள் மூலமாகக் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் அவர். கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி அவரைவைத்துப் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டனர்.
அந்த இடத்தைப் பிடிக்க அவர் நடத்திய போராட்டம் வலி நிறைந்தது. அடுக்கடுக்கான தோல்விகள் தன்னைப் புரட்டி எடுத்தபோதும், அசாத்தியமான தன்னம்பிக்கையோடு போராடித் தோல்விகளைத் தோற்கடித்த முன்னுதாரண மனிதர் அவர்.

Continue reading →

தோற்றவர்களின் கதை – 8

சுசி திருஞானம்

இன்று பல நாடுகளையும் சுற்றிவரும் ஒரு பெரும் தொழிலதிபர், பேச்சாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகங்கள் கொண்ட வீ.கே.டி.பாலனின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடம். எவ்வளவு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த மனிதனும் வாய்ப்புகளைப்

Continue reading →

தோற்றவர்களின் கதை – 7

சுசி திருஞானம்

சார்லி சாப்ளின்!

லகிலேயே மிக அதிகமான மக்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைத்த மாபெரும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரது நகைச்சுவைப் படங்களைப் பார்த்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் குதூகலிக்கிறார்கள். சிரிப்போடு கூடவே,  மனிதநேயச் சிந்தனையையும் பரிசளிப்பதே சார்லி சாப்ளினின் தனித்துவம். 

Continue reading →

தோற்றவர்களின் கதை – 6

சுசி திருஞானம்

‘ஊடக உலகின் ராணி’ என்று போற்றப்படுபவர் அவர். 25 ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தியவர் அவர். அமெரிக்க கறுப்பினத்தவர்களிலேயே சுயமாக முன்னேறிய நம்பர் ஒன் கோடீஸ்வரர் அவர். அமெரிக்காவை, வாசிக்கும் தேசமாக மாற்றியதில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. சுருங்கச் சொன்னால் தன்னம்பிக்கையின் மறுபெயர் ஓப்ரா வின்ஃப்ரே. வறுமை, வன்கொடுமை, இழிச்சொல் அனைத்தையும் தன்னம்பிக்கையால் வென்றவர் ஓப்ரா வின்ஃப்ரே.

Continue reading →

தோற்றவர்களின் கதை – 4

தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள்!
வால்ட் டிஸ்னியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.  மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற அற்புதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கிய மகத்தான கலைஞர். டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காக்களின் ஸ்தாபகர். வால்ட் டிஸ்னி கம்பெனியின் நிறுவனர்.

Continue reading →

தோற்றவர்களின் கதை – 3

 

பல தொழில் முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி கண்டு, விரக்தியின் விளிம்புக்குப் பலமுறை சென்றவர் அவர். தொடர் தோல்விகளில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் எழுந்துவந்த கதை இது…
ஐ போன், ஐ பேட், ஐ புக், ஐ மாக் கம்ப்யூட்டர் போன்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் இன்று உலகெங்கும் அதிகம் விரும்பி வாங்கப்படும் உயர்தர எலெக்ட்ரானிக் பொருட்கள் என்பது உங்களுக்குத்

Continue reading →

நம்பர் 1 – பியர் கிரில்ஸ்

நான் சாப்பிட்டு இதோடு முப்பத்தாறு மணி நேரம் ஆகுது. இப்ப நான் ஏதாவது சாப்பிட்டே ஆகணும். அதோ அங்க ஒரு ஒட்டகம் செத்துக்கிடக்குது. செத்து பல நாட்கள் ஆயிருக்கும்னு நினைக்கிறேன். துர்நாற்றம் வீசுது. பரவாயில்லை. நான் அதை வெட்டி சாப்பிடப் போறேன் (மூச்சு வாங்க கறியை வெட்டி, ஒரு துண்டை உண்கிறார்). த்தூ… த்தூ… ரொம்பக் கேவலமா இருக்கு. டயரை அப்படியே கடிச்சுச் சாப்பிடுற மாதிரி இருக்கு. வேற வழியில்லை. நான் நெருப்பு மூட்டி, இதைச் சமைச்சுச் சாப்பிடப்போறேன்.’

Continue reading →

நம்பர் 1 – ராஜேந்திர சிங், மதுர்பாய் சவானி

மிழ்நாட்டில் பொழியும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் வீணாக்காமல், நமக்கு எப்போதும் பயன்படும்படி சேமித்துவைக்க முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்? நினைத்துப்பார்க்கவே குளுகுளுவென இருக்கிறதுதானே!

அது  மட்டும் நிகழ்ந்துவிட்டால் காலம்தோறும் கர்நாடகாவின் கருணையையும், ஆந்திராவின் அன்பையும், கேரளாவின் அனுசரணையையும் எதிர்பார்த்துக்கிடக்க வேண்டாம். `என் தண்ணீர் என் உரிமை’ என தலை நிமிரலாம். சொல்வதற்குச் சரி. இதெல்லாம் சாத்தியமா? ‘சத்தியமாகச் சாத்தியமே’ என நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள் இருவர். ஒருவர், ராஜேந்திர சிங் – இன்னொருவர், மதுர்பாய். இவர்கள் வெறும் வாயால் குளம் வெட்டவில்லை. தங்களது செயற்கரிய செயல்களால் ராஜஸ்தானையும் குஜராத்தையும் ‘தண்ணி’றைவு பெற்ற பசுமை மாநிலங்களாக மாற்றிக்காட்டியிருக்கிறார்கள்.

யார் இந்த நீர் மனிதர்கள்?

Continue reading →

நம்பர் 1 – லஷ்மி அகர்வால்

”ப்ளீஸ்… கண்ணாடி குடுங்க.”

”இல்ல… வேணாம் லஷ்மி.”

”ஒரே ஒருதடவை முகம்

பார்த்துக்கிறேம்மா.”

     ”சொன்னா கேளு… வேணாம்மா.”

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, லஷ்மி தன் முகத்தை  கண்ணாடியில் பார்த்து 10 வாரங்கள் ஆகியிருந்தன. மருத்துவமனையில் எங்கும் அவள் கண்ணாடி பார்த்துவிடாதவாறு கவனித்துக்கொண்டார்கள். பாவம், தாங்க மாட்டாள். முதல்கட்ட சிகிச்சை முடிந்து, வீட்டுக்குத் திரும்பியதும் அவள் கண்ணாடியைத்தான் தேடினாள், கிடைக்கவில்லை. அவளது பழைய புகைப்படங்களைக்கூட கழற்றி, மறைத்துவைத்துவிட்டார்கள். இருந்தாலும் எப்படியோ அவள் கையில் ஒரு கண்ணாடி கிடைத்தது. அவசர அவசரமாக அவள் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்த அந்த நொடியில்…

Continue reading →