Category Archives: சமையல் குறிப்புகள்

தேங்காய் இல்லாமல் கூட இப்படியொரு சூப்பரான சட்னி செய்யலாம்.. உங்களுக்கு தெரியுமா?

தலைப்பை பார்த்த பலரும் ஷாக் ஆகி இருப்பீர்கள். அது எப்படி தேங்காய் இல்லாமல் தேங்காய் சட்னி போலவே ருசி இருக்கும் சட்னியை செய்ய முடியும்?
இந்த சட்னியை பிரபல குக்கிங் யூடியூப் சேனலான ‘அபூர்வாஸ் நளபாகத்தில்’ செய்து

Continue reading →

இது தங்க மசாலா! – ஆரோக்கியம் காக்கும் மஞ்சள் உணவுகள்

தங்கப்பால்

தேவை: தேங்காய்ப்பால் – 2 கப், சர்க்கரை – 4 டீஸ்பூன், மஞ்சள்கிழங்கு – சிறிதளவு,  மிளகு – கால் டீஸ்பூன், ஏலக்காய் – 2,  பட்டை –  ஒரு சிறிய துண்டு,  தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு.

செய்முறை:

Continue reading →

சுவையான மக்ரூன் செய்வது எப்படி?

தூத்துக்குடி என்றாலே உப்புதான் முதலில் நம் நினைக்கு வரும். ஆனால் தூத்துக்குடி மற்றும் ஒரு சிறப்பை கொண்டுள்ளது அதுதான் மக்ரூன். இந்த இனிப்பு பண்டம் இங்கு தயாரிக்கபடுகிறது. ஆம். மிகவும் சுவையான மற்றும் தரமான மக்ரூன் தூத்துக்குடியில் மட்டும் தான் கிடைக்கும். 
Continue reading →

சுரைக்காயை ஒதுக்கும் குழந்தைகளையும் விரும்பிச் சாப்பிட வைக்கும் ரெசிப்பிகள்!

குழந்தைகளுக்குச் சுரைக்காய் என்றாலே முகம் சுளித்து சாப்பிட மறுத்துவிடுவார்கள். குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் எளிமையாகவும், சுவையாகவும் சுரைக்காய் ரெசிப்பிகளை செய்வதற்கு கற்றுக் கொடுக்கிறார், சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.

1. சுரைக்காய் கபாப்

தேவையானவை:

Continue reading →

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் : வெடிக்காமல் சீடை செய்ய ஒரு எளிய முறை!

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது சீடை. எவ்வளவு திண்பண்டங்கள் இருந்தாலும் கண்கள் சீடையையே தேடும். அப்படிப்பட்ட சீடையை வெடிக்காமல் எப்படி செய்வது?
Continue reading →

ஆப்பிள் ரோல், பிஸ்தா இட்லி, பனங்கற்கண்டு சப்பாத்தி… குட்டீஸூக்கான 10 குவிக் லன்ச் ரெசிபிகள்!

து ஸ்கூல் ரீஓபன் காலம். குழந்தைகள் சப்புக்கொட்டி சாப்பிட, ருசியான லன்ச் பாக்ஸ் பேக்  செய்ய வேண்டும் அல்லவா? இதோ, சத்துகள் நிறைந்த 10 க்விக் ரெசிப்பிகளைச் சொல்லித் தருகிறார் சமையல் கலைஞர் லஷ்மி சீனிவாசன்.

வைட்டமின் ஈ சப்பாத்தி!

Continue reading →

ஆரோக்கியம் காக்க… அறுசுவையும் அதிகரிக்க!

கிச்சன் பேஸிக்ஸ் என்றால் என்ன?
முழுமையான இந்தியச் சமையல் செய்வதற்கு சில அடிப்படைப் பொருள்கள் தேவை. உதாரணமாக இட்லி, தோசை மாவைப் பயன்படுத்தி ஏராளமான புதிய உணவுகளைத் தயாரிக்கலாம். சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லி மிளகாய்ப் பொடி போன்ற சில பொடி வகைகளைப் பயன்படுத்தி மேலும் பல ரெசிப்பிகளை உருவாக்கலாம்.

Continue reading →

காய்கறி பழங்கள் மிக்ஸ்டு சாலட்

தேவையானவை: முட்டைகோஸ்-100 கிராம், வெள்ளரிக்காய் – 2, குடமிளகாய் – 1, தக்காளி – 3, ஸ்ட்ராபெர்ரி – 5, ஆப்பிள் – 1, திராட்சை – 100 கிராம்

செய்முறை: ஸ்ட்ராபெர்ரி, தக்காளியை நான்கு துண்டுகளாகவும், வெள்ளரிக்காய், குடமிளகாய், ஆப்பிளை பெரிய துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளவும்.   முட்டைகோஸை சற்று பெரிதாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றுடன் திராட்சையைச் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கிச் சாப்பிடலாம். தேவை எனில், சுவைக்காக எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் சிறிது சேர்த்தும் சாப்பிடலாம்.

Continue reading →

ஆரோக்கியம் தரும் அகத்திக்கீரை

Tanittu akattikkirai body heat to body cooling. Reduce bile. Necessary for our body increases the digestive power. Not protect eye diseases.

அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை  அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

அகத்திக்கீரை சொதி

என்னென்ன தேவை?

அகத்தி கீரை- 1 கட்டு
பெரிய வெங்காயம்- 1
தக்காளி-2
பச்சை மிளகாய்-4
பால் – 1கப்
உப்பு- 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி- 1டீஸ்பூன்
கறிவேப்பிலை- தேவையான அளவு


எப்படி செய்வது?

கீரையை நன்கு பிரித்து சுத்தம் செய்து கழுகி கொள்ளவும். அகத்திக்கீரையை காம்பிலிருந்து சீராக உருவிக்கொள்ளவும். பின் உருவிய கீரையை  தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக மண் தூசி இல்லாமல் அலசிக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக  நறுக்கி கொள்ள  வேண்டும். தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர்  தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீர் லேசாக சூடானதும் அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு கொதிக்க விடவும்.

அதில் மறக்காமல் உப்பு சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை அள்ளி போடுங்கள் மேலும் சிறிது நேரம்  கொதிக்கட்டும். கீரை சுலபமாக வெந்ததும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு பாலை ஊற்றுங்கள். பால் கொதி வந்ததும் கறிவேப்பிலையை உருவிப்போட்டு  இறக்கிவிடலாம். அகத்திக்கீரை சொதி தயார். இந்த சொதியை சாதத்துடன் மட்டுமல்லாமல் ஆப்பம், இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

கோடை காலத்திற்கேற்ற மூவர்ண லஸ்ஸி

கிரீம் ஆப்பிள்        &    1
கெட்டித் தயிர்        &    2 கோப்பை
பன்னீர் திராட்சை    &    50 கிராம்
சர்க்கரை        &    3 ஸ்பூன்
உப்பு            &    2 சிட்டிகை
தண்ணீர்        &    1 கோப்பை
சர்க்கரை சேர்த்து ஒர கரண்டி நீர்விட்டு திராட்சைப் பழங்களை வேக விடவும். வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும். ஆறியதும் வடிகட்யில் வடிக்கட்டி விதைகளை நீக்கவும்.
ஆப்பிளை நன்கு கழுவி விதைகளை நீக்கி, துண்டுகளாக்கி ஆப்பிளை மிக்ஸியில் போட்டு, ஜூஸை எடுக்கவும். திராட்சைப் பழங்களையும் அதன் பாகுடன் சிறிது நீர்விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
பிறகு திராட்சைப் பழக்கலவை, ஆப்பிள் ஜூஸ், தயிருடன் மிக்ஸியில் போட்டு எல்லாம் நன்கு கலக்கும் வரை விட்டுவிட்டுக் கலக்கவும்.
பிறகு உப்பு, ஐஸ் கட்டிகள் சேர்த்து தேவைப்பட்டால் நீர் ஊற்றி நுரை போல வரும்போது டம்ளர்களில் ஊற்றிப் பரிமாறலாம். சத்தான சுவையான மூவர்ண லஸ்ஸி தயார்.