ஆபத்து!! உடனே கூகுள் குரோம் அப்டேட் பண்ணுங்க… மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ‘இந்திய கணினி அவசர உதவிக் குழு (CERT-In)’ கூகுள் குரோம் பிரவுசர் (Google Chrome Browser) யூஸர்களுக்கு மீண்டும் ஒரு பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.


நோடல் ஏஜென்சி வெளியிட்டுள்ள தகவலின் படி, கணினிகளுக்கான கூகுள் குரோம் உலவியில் சில பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே கூகுள் குரோம் உலவி யூஸர்கள் உடனடியாக அதனை அப்டேட் செய்யும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை கூகுள் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.

கூகுள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “திருத்தப்பட்ட கூகுள் குரோம் உலவியை அப்டேட் செய்யாத யூஸர்களுக்கு பிழை விவரங்கள் மற்றும் இணைப்புகளுக்கான அணுகல் தடை செய்யப்படலாம். ஒருவேளை மூன்றாம் தரப்பு லைப்ரேரியில் பக் இருக்கலாம். ஆனால் இன்னும் அது சரி செய்யப்படவில்லை. இருப்பினும் அதனை நாங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வோம்” என தெரிவித்துள்ளது.

கூகுள் குரோம் உலவியில் என்ன பிரச்சனை?

மென்பொருளில் ஏற்பட்டிருக்கும் புதிய பிழை கூகுள் குரோம் வெர்ஷன் 101.0.4951.41 மற்றும் அதற்கு முன் வெளியாகி இருந்த அப்டேட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்திய கணினி அவசர உதவிக் குழு தெரிவித்து உள்ளது. இந்த பிழை காரணமாக ஹேக்கர்கள் ஆர்பிடரி குறியீடுகளை பயன்படுத்தி யூசர்களின் மிக முக்கிய தகவல்களை அபகரிக்க முடியும். ஹேக்கர் பாதுகாப்பு தடைகளை எதிர்கொண்டு, பஃபர் ஓவர்ஃபுளோ செய்ய முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குறைபாடுகளால் டெஸ்க்டாப் யூஸர்களுக்கு மட்டுமே முதன்மையான அச்சுறுத்தல் இருப்பது தெரியவந்துள்ளது. கூகுள் குரோம் இந்த குறைபாட்டை ஒப்புக் கொண்டு 30 பாதிப்புகளை பட்டியலிட்டுள்ளது. ஏழு குறைபாடுகள் ‘உயர்’ அச்சுறுத்தல்கள் கொண்டவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

CERT-In கூற்றுபடி, இந்த உயர் நிலை பாதிப்புகளை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் மற்றும் ரிமோட் ஆக்சஸ் முறையில் தன்னிச்சையாக குறியீட்டை இயக்கவும், அதையொட்டி முக்கியமான தகவல்களை அணுகவும் முடியும். மேலும் இந்த குறைபாட்டால் ஹேக்கர்கள் பாதுகாப்பு அம்சங்களை தகர்த்து யூஸர்களின் தனிப்பட்ட தகவல்களை திருட முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே தான் கூகுள் குரோம் பிரவுசரை அப்டேட் செய்யும் படி மத்திய அரசு அதன் யூஸர்களை எச்சரித்துள்ளது.

கூகுள் குரோம் பிரவுசரை அப்டேட் செய்வது எப்படி?

கூகுள் குரோம் பிரவுசரை மேனுவலாக அப்டேட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டேப்களை பின் தொடரவும்.

* கூகுள் குரோமை ஓபன் செய்யவும்.

* இடைமுகத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று-புள்ளி மெனுவைக் கிளிக் செய்யவும்.

* அந்த மெனுவில் Help செல்லவும். அதில் கூகுள் குரோம் (Google Chrome) என்பதை கிளிக் செய்யயும்.

* உங்கள் கணினியில் தற்போதைய கூகுள் குரோம் (Google Chrome) பதிப்பு இயங்குவதைக் காணலாம்.

* பாதுகாப்புக் குறைபாட்டிலிருந்து உங்கள் கணினியைப் பாதுகாக்க அப்டேட் ஆப்ஷனை க்ளிக் செய்து புதுப்பித்து கொள்ளவும்.