Category Archives: உபயோகமான தகவல்கள்

உங்க வீட்டு தோசை கல்லை சுத்தம் செய்ய கஷ்டப்படுகிறீர்களா .? உங்களுக்கான அட்டகாசமான டிப்ஸ் இதோ .!!

இரும்பு தோசை கல்லை பயன்படுத்துபவர்களுக்கு அந்த தோசை கல்லை சுத்தம் செய்வது ஒரு பெரிய வேலையாக இருக்கும்.

தொடர்ந்து தோசை சுட்டு கொண்டு இருக்கும் தோசைகல்லில் சுற்றிலும் பார்த்தால் அந்த

Continue reading →

2 வாரங்களில் உடல் எடை குறைக்க புதிய டயட் சார்ட்

தற்போதைய வாழ்க்கை சூழலில் உடல் எடை குறைப்பு என்பது ஒரு சவாலாக மாறிவிட்டது. ஆனால் உடல் எடையை குறைக்க நீங்கள் கடைபிடிக்கும் டயட், கொழுப்பைக் குறைப்பதுடன், தேவையான எடையையும் குறைக்கிறது, அதனால் உடலில் பலவீனம் ஏற்படுகிறது.

Continue reading →

போலீஸ் புகார் முதல் நீதிமன்ற தண்டனை வரை…. நடைமுறைகள் என்னென்ன தெரியுமா?…. கட்டாயம் படித்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகனும் அடிப்படை சட்டங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்கள் இது போன்ற சட்டங்களை தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது. அவ்வகையில் போலீசில் புகார் அளிப்பது முதல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவது வரை எந்தெந்த சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Continue reading →

75ஆவது இந்திய சுதந்திர தினம்: தேசிய கொடியை இடுப்புக்கு கீழ் அணிவது குற்றம் – விதிகள் சொல்வது என்ன?

சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, இந்திய அரசு அறிவித்த ‘வீடுதோறும் மூவர்ணம்’ என்ற திட்டத்துக்குப் பிறகு இன்னும் வேகமாக தேசிய கொடி குறித்த பதிவுகள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன

Continue reading →

பிஸினஸ் தொடங்குகிறீர்களா?…. உங்களுக்கு என்ன திறமைகள் தேவை… தெளிவான விளக்கங்கள்…!

business தொடங்குவதற்கு எந்த மாதிரியான திறமைகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

ஒரு Entrepreneur-க்கான முதல் முக்கியமான திறமை Sales and Marketing தான். நாம் அதிக உழைப்பை போட்டு ஒரு பொருளை தயாரிக்கலாம். ஆனால், அதனை Market செய்யவில்லை எனில், அந்த பொருள் யாரிடமும் சென்றடையாது. எனவே, Sales and Marketing திறமை மிகவும் அவசியமானது.

Continue reading →

குறைந்த முதலீட்டில் சிறு தொழில் தொடங்க சூப்பரான 7 ஐடியா!

கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பலர் இப்போது வீட்டிலிருந்தே வேலை செய்யப் பழகிவிட்டனர். இப்போது தொற்று குறைந்து வருவதால் பல நிறுவனங்கள் அலுவலகம் வருமாறு ஊழியர்களை அழைத்து வருகின்றனர்.

Continue reading →

ஒருவரின் ஆதார் அட்டையில் விவரங்களை.. எத்தனை முறை மாற்றம் செய்யலாம்?.. இதோ முழு விவரம்..!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பதே மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அவ்வாறு முக்கியமான ஆதார் அட்டையில் நாம் அவ்வப்போது சில மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்.

நம்முடைய ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் டெமோகிராபிக் தகவல் மற்றும் பயோமெட்ரிக் தகவல் என்று இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலில் உள்ள

Continue reading →

ரூ. 100 முதல் சேமிப்பை தொடங்கலாம்.. மிடில் கிளாஸ் மக்கள் இந்த சேமிப்பு திட்டத்தை மிஸ் செய்யாதீர்கள்!

பொது வருங்கால வைப்புநிதி அதாவது Public Provident Fund (PPF) என்பது எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கான பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான வழிகளில் ஒன்றாக இருக்கிறது.

<!–more–>
PPF ஒரு நிலையான வருமான முதலீட்டு கருவி (fixed-income investment instrument) என்று நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது. அதாவது வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, மேலும் இது 15 வருட லாக்-இன் (Lock-in) பீரியட்டுடன் வருகிறது. மெச்சூரிட்டி பீரியடிற்கு பிறகு, திரட்டப்பட்ட வட்டியுடன் வருமானம் PPF அக்கவுண்ட் ஹோல்டருக்கு செலுத்தப்படுகிறது. எந்தவொரு முதலீட்டு போர்ட்ஃபோலியோவும் லாபம் தார் கூடிய அதே சமயம் மற்றும் தற்காப்பு கருவிகளின் கலவையாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் PPF போர்ட்ஃபோலியோ ஒப்பிடமுடியாத நிலைத்தன்மையை வழங்கும் அதே நேரத்தில் பாதுகாப்பிற்கும் சரியாக பொருந்துகிறது. 1968-ல் நிதியமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனத்தால் ஓய்வூதியத்திற்கான பணத்தை சேமிக்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் PPF திட்டம் தொடங்கப்பட்டது. PPF அக்கவுண்ட் பல நன்மைகளுடன் வருகிறது.

சிறிய தொகையுடன் முதலீட்டை தொடங்கலாம்..

ஒரு நிதியாண்டில் PPF அக்கவுண்ட்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1.5 லட்சம் ஆகும். ஆனால் ரூ.100 என்ற சிறிய தொகையுடன் கூட நீங்கள் PPF அக்கவுண்ட்டை ஓபன் செய்யலாம். அதன் பிறகு குறைந்தபட்சம் நீங்கள் ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.500 செலுத்தினால் கூட போதும். இப்போது உங்களால் பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாவிட்டால் குறைவான நிதியை வைத்து முதலீடு செய்யலாம்.

உத்தரவாதம் மற்றும் உறுதியான வருவாய்..

அரசின் ஆதரவின் கீழ் இந்த முதலீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் இதில் செய்யப்படும் முதலீடு மற்றும் சேமிப்புகள் முற்றிலும் ஆபத்து இல்லாதவை. PPF மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கு இரு முறை இந்திய அரசால் மதிப்பாய்வு செய்யப்பட்டு திருத்தப்படுகிறது. எனவே ஒவ்வொரு காலாண்டிற்கும் அறிவிக்கப்படும் வட்டி விகிதத்திற்கு ஏற்ப வருமானம் உத்தரவாதம் ஆகும். FD-க்களை விட சிறந்த வருவாயை PPF வழங்குகிறது.

நீண்ட காலத்திற்கு கவர்ச்சிகர வருமானம்..

PPF ஒரு ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதாவது PPF-ல் வட்டி விகிதப் போக்கு மேல்நோக்கி இருக்கும் போது உங்கள் முதலீடு பலனளிக்கும். PPF-ல் வழங்கப்படும் வட்டி விகிதத்தை அரசின் மற்ற ஊக்குவிக்கப்பட்ட வைப்பு திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் PPF தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதை காண முடியும். PPF-ஐ விட EPF அதிக வட்டி வழங்கினாலும் சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும். அதே போல SCSS மற்றும் SSA ஆகிய திட்டங்கள் மூத்த குடிமக்கள் மற்றும் பெண் குழந்தையின் பெற்றோர்/பாதுகாவலர்களுக்கு மட்டுமே முதலீட்டை அனுமதிக்கின்றன.

வரிச் சலுகைகள்..

மிக சில முதலீட்டு திட்டங்கள் மட்டுமே 3 மடங்கு வரிச் சலுகைகள் மற்றும் EEE (Exempt-Exempt-Exempt) ஸ்டேட்டஸை வழங்கும் வகையில் உள்ளன. இதில் PPF திட்டமும் ஒன்றாகும். EEE என்பது முதலீடு செய்யப்பட்ட தொகை, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகை மூன்றுக்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது ஆகும். ஆக மொத்தம் PPF-ல் முதலீடு செய்து அதிலிருந்து நீங்கள் பெறும் வருமானத்திற்கு வரியே செலுத்த வேண்டாம். எனவே அதிக வட்டி விகிதம் மற்றும் மூன்று மடங்கு வரிச் சலுகைகள் PPF முதலீட்டாளர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களை தருவதாக அமைகிறது.

நிதி இலக்குகளை அடைய உதவும் Lock-in அம்சம்..

லாக்-இன் பீரியட் என்றால் முதலீட்டாளர் முதலீட்டுத் தேதியிலிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்தை முடிப்பதற்கு முன் முதலீடுகளில் கை வைக்க முடியாததை குறிக்கிறது. PPF-ல் 15 ஆண்டுகள் லாக்-இன் பீரியட் இருக்கிறது. எனவே PPF திட்டமிடப்பட்ட நிதி இலக்குகளை அடைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் ஒரு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன், பகுதியளவு திரும்பப் பெறுதல் மூலம் பணம் எடுக்கும் ஆப்ஷன்களை பெறலாம்.

நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை..

PPF முதலீட்டை உங்கள் நிதி இலக்குகளுடன் சீரமைத்தால், வரி சலுகைகளைப் பெறும்போது, அதை சிறப்பாகப் பயன்படுத்தலாம். ஒரு சிலர் வரி சலுகைகளுக்காக மட்டுமே PPF-ல் முதலீடு செய்து தவறு செய்கிறார்கள். ஆனால் PPF என்பது உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும். உங்கள் நிதி இலக்குகளை அடைய தேவையான பிற முக்கிய அம்சங்களுடன் நீங்கள் PPF அலொகேஷன் அடிப்படையில் ரிட்டர்ன் எதிர்பார்ப்புகளை முடிவு செய்யலாம்.

புதிய பிரைவசி பாலிசியை மாற்றிய கூகுள்.சர்ச் முடிவில் இருந்து தனிப்பட்ட டேட்டாவை அகற்ற முடியும்

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அதன் தனியுரிமைக் கொள்கையில் திருத்தம் செய்துள்ளது, இது இப்போது பயனர்கள் தங்கள் தனிப்பட்ட டேட்டாவை சர்ச் முடிவுகளிலிருந்து நீக்குவதற்கான விருப்பத்தை வழங்கும்.

Continue reading →

வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தை பாதுகாக்க.. இதை தவறாம ஃபாலோ பண்ணுங்க..!!!!

நாட்டில் கடந்த சில நாட்களாக சைபர் குற்றங்கள் அதிக அளவு அதிகரித்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பாஸ்வேர்ட்டில் எச்சரிக்கை:

Continue reading →