எத்தனை பேவரிட் தளங்கள்

எத்தனை பேவரிட் தளங்கள்

எத்தனை இணைய தளங்களை நீங்கள் உங்கள் பேவரிட் தளங்களாகச் சேமித்து வைத்திருக்கிறீர்கள். பத்து? இருபத்தைந்து? நூறு? அதற்கும் மேலேயா! எந்த இணைய தளம் நமக்குப் பிடித்திருந்தாலும் அல்லது இன்னொரு முறை அதற்குச் செல்ல வேண்டும் என எண்ணினாலும் உடனே அதனை பேவரிட் தளமாக மாற்றி அமைத்திடலாம். இவை வேண்டும் என்றால் அட்ரஸ் எல்லாம் அடிக்காமல் பேவரிட் லிஸ்ட் திறந்து ஒரு கிளிக் செய்தால் போதும்

உடனே அந்த தளம் இறக்கப்பட்டு திறக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக உங்கள் பேவரிட் தளம் அனைத்தும் அதன் ஐகான்களுடன் ஒரு இணைய தளத்தில் இருந்தால் பேவரிட் லிஸ்ட் எல்லாம் திறக்காமல் அப்படியே வேண்டும் தளத்தின் ஐகான் அல்லது குறும்படத்தில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாமே. இவற்றையே வகை வாரியாகப் பிரித்து ஒரு தளத்தில் அமைத்தால் நூற்றுக் கணக்கான தளங்களை ஒரே திரையில் பெற்று திறக்கலாமே. அப்படி ஓர் இணைய தளமே உள்ளது. இன்டர்நெட் மக்கள் அடிக்கடி நாடும் தளங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் முகக் காட்சிகளுடன் ஒரே பக்கத்தில் தருகிறது

http://www.allmyfaves.com/ என்ற முகவரியில் உள்ள தளம். இந்த தளத்தின் பெயர் All My Faves. இதில் நாம் திறக்க விரும்பும் பெரும் பான்மையான தளங்களில் நிறுவன முகப்புச் சின்னங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் கிளிக் செய்தால் உடனே அவை கிடைக்கின்றன. Weekly Faves, Email, Sports, Weather, Shopping, Music, Health, Jobs, Games, Kids and Travel என்று பல வகைகளில் வேறு இவை பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலிலும் கிளிக் செய்து நாம் தளங்களைப் பெறலாம். Google, Gmail, Yahoo! Mail, Sports Illustrated, WalMart, Chase, Skype, UPS, Career Builder, Disney, Hertz, Orbitz, Blockbuster, Verizon ஆகியவையும் இந்த பட்டியலில் அடக்கம். பட்டியல் இன்னும் பல வகைகளில் நீண்டு கொண்டே போகிறது. இதனைப் பார்த்தால் நிச்சயம் நீங்கள் இதனை உங்கள் ஹோம் பேஜாக மாற்றி வைத்துக் கொள்வீர்கள் என்பது உறுதி.

ஒரு மறுமொழி

  1. Very very intresting . Thanks for the information.