தற்காலிக இமெயில் முகவரிகள்

தற்காலிக இமெயில் முகவரிகள்
நமக்கு தொல்லை தரும் வகையில் தொடர்பே இல்லாமல் பல இமெயில்கள் வருகின்றன. அதற்காக நாம் விரும்பும் புரோகிராம்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், பொருள்களை ஆன்லைனில் வாங்கிட விரும்புகையில், பயணங்களுக்கான டிக்கட்களை புக் செய்திட எண்ணுகையில் இமெயில் முகவரிகளைத் தராமல் இருக்க முடியாது.

அடிக்கடி இன்டர்நெட் சைட்டுகளில் உங்கள் இமெயில் முகவரிகளைத் தருகிறீர்களா? பொருட்கள் வாங்குகையில், ஏதேனும் புரோகிராம்களை டவுண்லோட் செய்து இறக்குகையில் அந்த செயல்பாட்டை முடித்துவைக்க நிச்சயமாய் உங்கள் இமெயில் முகவரி கேட்கப்படும். பின் அந்த முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டு அதனைப் பெற்று நீங்கள் கிளிக் செய்தாலே அப்போது மேற்கொண்ட செயல்பாடு முற்றுப் பெறும். எனவேதான் நாம் நம் இமெயில் முகவரிகளைத் தர வேண்டியுள்ளது. இதனால் நம்முடைய இமெயில் முகவரிகள் பல தளங்களில் பதியப்படுகிறது. ஒரு சிலர் இது போல இமெயில் முகவரிகளைப் பெற்று வர்த்தக ரீதியாகச் செயல்பட்டு ஸ்பேம் மெயில் அனுப்பும் நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றனர்.

இதனால் நமக்கு தொல்லை தரும் வகையில் தொடர்பே இல்லாமல் பல இமெயில்கள் வருகின்றன. அதற்காக நாம் விரும்பும் புரோகிராம்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், பொருள்களை ஆன்லைனில் வாங்கிட விரும்புகையில், பயணங்களுக்கான டிக்கட்களை புக் செய்திட எண்ணுகையில் இமெயில் முகவரிகளைத் தராமல் இருக்க முடியாது. இந்த சிக்கலுக்கு என்னதான் தீர்வு? தற்காலிகமாக இமெயில் முகவரிகளை அமைத்துக் கொள்வதுதான். இதற்கென்றே சில தளங்கள் உள்ளன. இந்த தளங்களை கூகுள் சர்ச் இஞ்சின் மூலம் தேடிக் கண்டுபிடித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் தேடிய போது சில தள முகவரிகள் கிடைத்தன. அவை:   Mytrashmail, ExplodeMail, Mailinator, Temporaryinbox  மற்றும்  Maileater  இவற்றில் ஒரு தளத்திற்குச் சென்றால் அவை தற்காலிக இமெயில் முகவரியைத்தரும். சிறிது காலம் பயன்படுத்திய பின்னர் விட்டுவிடலாம். அல்லது இந்த தளத்தில் இமெயில் முகவரியை உருவாக்கி அதற்கு வரும் மெயில்களை உங்கள் நிரந்தர இமெயில் முகவரிகளுக்கு பார்வேர்ட் செய்திடும் பணியையும் இந்த தளங்கள் மேற்கொள்கின்றன. இதனால் ஸ்பேம் போன்ற கூட்ட மெயில்களிலிருந்து நாம் தப்பிக்கலாம்.