சுருட்டும் கீ போர்டு

சுருட்டும் கீ போர்டு

2.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த மல்ட்டிமீடியா வயர்லெஸ் ரோல் அப் யு.எஸ்.பி. கீ போர்டில் தண்ணீர் பட்டால் ஒன்றும் கெட்டுப் போகாது. இதனை உடைக்கவும் முடியாது. தண்ணீர், அமிலம், தூசு மற்றும் அல்கலைன் ஆகியவற்றால் கெட்டுப் போகாத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய கட்டடம் ஒன்றின் பிளான் பேப்பர் எடுத்துச் செல்வது போல கைகளில் சுருட்டி எடுத்துச் செல்லும் வகையில் கீ போர்டு ஒன்று வடிவமைக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இது விரைவில் இந்தியாவிலும் கிடைக்கும். இது ஒரு வயர்லெஸ் கீ போர்டு. யு.எஸ்.பி.போர்ட்டிலும் இணைத்து செயல்படுத்தலாம்.

இதன் தனிச் சிறப்பு இதனை எளிதாகச் சுருட்டி எடுத்துச் செல்லும் தன்மைதான். 2.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த மல்ட்டிமீடியா வயர்லெஸ் ரோல் அப் யு.எஸ்.பி. கீ போர்டில் தண்ணீர் பட்டால் ஒன்றும் கெட்டுப் போகாது. இதனை உடைக்கவும் முடியாது. தண்ணீர், அமிலம், தூசு மற்றும் அல்கலைன் ஆகியவற்றால் கெட்டுப் போகாத வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.  இதில் வழக்கமான குவெர்ட்டி வரிசையுடன் மொத்தம் 121 கீகள் உள்ளன. இதில் தூசு பட்டால் மேஜையின் மேல்புறத்தைச் சுத்தப்படுத்துவது போல நீர் விட்டு சுத்தப்படுத்தலாம். இதில் மிக உயர்ந்த தன்மையுடைய சிலிகான் பயன்படுத்தப்படுகிறது. சிலிகான் கீகள் இருப்பதனால் இதில் டைப் செய்கையில் சத்தமே எழாது. (இனிமேல் “என்னங்க, தூங்கும்போது டொக்கு டொக்குனு” என்ற கம்ப்ளைண்ட் வராது) சத்தம் வராதது மட்டுமின்றி வேகமாக இயங்குவதால் டைப் செய்வது மிக எளிதாகிறது. 285 கிராம் எடையில் 43.5 து 14.5 செமீ என்ற அளவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,500க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சிறிது நாளில் இந்த கீ போர்டைக் கொஞ்சம் துவைச்சுப் போடுப்பா ! என்று கூடச் சொல்லலம் போலிருக்கிறது.