கருவளையம் மறைய… நீங்களும் அழகு ராணி தான்…

கருவளையம் மறைய… நீங்களும் அழகு ராணி தான்…

ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை என பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் கருவளையத்திற்கு நிச்சயம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க இதோ சில டிப்ஸ்…

*தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.

*வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும். வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.

*பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.

*தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.

*வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

*பால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.

* ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி தடவி கொண்டு சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கருவளையம் மறைந்து விடும்.

*போதிய அளவு தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 6 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.

6 responses

  1. THANK ””””””’SSSSSSSSSSS

  2. hi nahomi & prabha take care

  3. superb tips. Pls give some tips to become beauty & below my lips are dark.

  4. superb tips. Pls give some tips to become beauty & below my lips are dark. how to clear it. pls give tips for that.