எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே…

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே…

குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர், குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகளை வழங்கி வருகிறார் டாக்டர் வெங்கடரமணி. அமெரிக்காவில் இதற்கென தனி படிப்பை மேற்கொண்டு தாயகம் திரும்பியுள்ள வெங்கடரமணி குழந்தை வளர்ப்பு குறித்து விவரிக்கிறார்…

கருவில் இருக்கும் குழந்தை ஆறு மாதத்தை தாண்டும்போது கேட்கும் திறனை பெற்று விடுகிறது. கருவுற்றிருக்கும் தாய் பயன்படுத்தும் வார்த்தைகள், இசை உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் எழும் சத்தங்களும் கருவில் இருக்கும் குழந்தையின் மனதில் பதியத் துவங்கி விடுகிறது. இந்த காலகட்டத்திலேயே குழந்தைகளுக்கு வார்த்தைகளை கற்றுத் தர வேண்டும்.
குழந்தைக்கு தாய்தான் முதல் ஆசிரியை. குழந்தை கருவில் இருக்கிறதே, அதற்கு என்ன தெரியப் போகிறது என்று நினைக்காமல், குழந்தை தன் எதிரில் இருப்பது போல் நினைத்து வார்த்தைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பிறக்கும் போது

குழந்தை பிறக்கும் போது அதன் மூளை வளர்ச்சி 25 சதவீதம் மட்டுமே இருக்கும். இரண்டு ஆண்டுகளில் மூளை வளர்ச்சி ஒரு கிலோவாக அதிகரிக்கும். மூன்றாவது வயதில் ஒரு கிலோ 200 கிராம் என்ற எடையும், ஆறு அல்லது ஏழு வயதில் ஒரு கிலோ 300 கிராம் எடையும் இருக்கும். பிறக்கும்போது குழந்தையின் கேட்டல், தொடுதல், சுவை, பார்வை உள்ளிட்ட ஐம்புலன்களும் இயங்கத் துவங்கி விடுகின்றன. ஒரு லட்சத்து 25 ஆயிரம் டிரில்லியன், 500 பில்லியன் தகவல்களை நமது மூளையில் சேமித்து வைக்க முடியும். 100 பில்லியன் நியூரான்கள் மூளையில் சிதறிக் கிடக்கின்றன. இவ்வாறு சிதறிக் கிடக்கும் நியூரான்களை இணையும் போது குழந்தையின் மூளைத்திறனும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும்.

கார் வாங்கும் போது

ஒரு கார் வாங்கும் போது அதற்கு ஷெட் போடுவதற்கு இடம் ஒதுக்குவது போல் குழந்தையை வளர்ப்பதற்கு தேவையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமை. துவக்கத்தில் குழந்தையின் மொழி என்பது “ஒளிப்படம்’ தான். எனவேதான், தாயின் முகத்தை எளிதில் அடையாளம் கண்டு குழந்தை சிரிக்கிறது. இதன் காரணமாகவே, “டிவி’ யில் வரும் காட்சிகள் குழந்தைகளை ஈர்த்து வருகின்றன. அந்த காட்சிகள், ஒலி போன்றவை குழந் தையின் மூளையில் முழுமையாக பதிந்து விடுகின்றன. குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகள் வரை “டிவி’ பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

“டிவி’யில் பார்ப்பது… ஒருவரை அரிவாளால் வெட்டும் காட்சியை ஒரு வயது குழந்தை “டிவி’யில் பார்க்கிறது என்றால், அந்த காட்சி அப்படியே மூளையில் பதிந்து விடுகிறது. அந்த குழந்தை வளர்ந்த பின் கோபப்பட்ட நிலையில் இருக்கும் போது அரிவாள் அவனது கண்ணுக்கு தெரியுமானால் உடனே முன் “டிவி’யில் பார்த்த காட்சி அவன் முன் தோன்றும். அரிவாளை எடுத்து வெட்டலாம் என்ற எண்ணம் வலுப்பெற ஒரு வயதில் அந்த குழந்தை பார்த்த காட்சியே ஆதாரமாக அமைந்து விடுகிறது. இன்றைய நமது “டிவி’ தொடர்களைப் பார்க்கும் குழந்தைகள் எந்த அளவு விஷத்தை தங்கள் மூளையில் பதித்துக் கொள்கின்றன என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். நம் குழந்தை நம்மை விட புத்திசாலி என்ற எண்ணம் பெற்றோருக்கு இருக்க வேண்டும். குழந்தையிடம் பேசும்போது தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும். நாம் எப்படி வார்த்தைகளை உச்சரிக்கிறோமோ அதைக் கேட்டு குழந்தை திரும்ப சொல்லும்.

தாய்மொழியில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் குழந்தைகளுக்கு வார்த்தைகளை கற்றுத் தரலாம். நாம் சொல்வதை கேட்டு புரிந்து திரும்ப அந்த வார்த்தையை குழந்தை உச்சரிக்கும்.குழந்தைகளின் வார்த்தை தான் அவற்றின் படிக்கும் திறனை அதிகரிக்கும்.

எல்லா குழந்தையும் புத்திசாலி ஆ”கலாம்’

குழந்தையிடம் வார்த்தைகளுடன் கூடிய படங்களை காட்டி உச்சரியுங்கள். உதாரணமாக, வாழைப்பழத்தின் படத்தையும், அதற்கு கீழ், அதைக் குறிக்கும் வார்த்தையும் இடம்பெற்ற படத்தைக் காட்டி குழந்தைக்கு சொல் லித் தருவீர்களானால், வாழைப்பழம் என்றால் எது என்றும், அதை எப்படி உச்சரிப்பது என்றும், அதை எப்படி எழுதுவது என்றும் குழந்தை எளிதாக தெரிந்துகொள்ளும். இதுபோன்ற தொடர் பயிற்சிகள் அளிக்கும்போது வாழைப்பழத்தை காட்டினால், அதன் பெயரை உச்சரிப்பதோடு, வார்த்தையால் எழுதிக் காட் டுவது வரை குழந்தையின் செயல்பாடு இருக்கும். இது போன்ற பயிற்சியை தொடர்வதன் மூலம் இயல்பாக படிக்கும் ஆற்றல் மூளையில் வளர்ந்துவிடும். படித்தல் என்பதை ஒரு கடமையாக, வேலையாகச் செய்ய வேண்டிய சூழல் இந்தப் பயிற்சி பெற்ற குழந்தைக்கு இருக்காது. குழந்தையின் கர்ப்ப காலம் தொடங்கி மூன்று வயதுக்குள் நாம் அளிக்கும் இதுபோன்ற பயிற்சிகள் மூளை வளர்ச்சிக்கு, புத்திசாலித்தனத் திற்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்த அடித்தளம் உள்ள எல் லாக் குழந்தையும் புத்திசாலி ஆ”கலாம்!