அலுவலகத்தில் பணியாற்றும் நீங்கள் ஜோவியல் பேர்வழியா?

அலுவலகத்தில் பணியாற்றும் நீங்கள் ஜோவியல் பேர்வழியா?

ஹாய் பிரண்ட்ஸ், சில நாட்களுக்கு முன் வெளியூர் செல்ல பேருந் தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். எனது இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளம் வயது பெண்கள் இரண்டு பேர் எதைப் பற்றியோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்படி என்ன தான் பேசுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் ஆவலில், அவர் கள் பேசுவதைக் கவனிக்க காதுகளை கூர்மைப்படுத்தினேன். அதில் ஒரு பெண் “எங்க ஆபீஸ்ல ஜோக் அடிக்கிறேன் அப்படிங்கிற பேர்ல, அவன் படுத்துறப் பாடு தாங்கல…’ என்று யாரோ ஒருவரை அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.

தொடர்ந்து கவனித்ததில் அவர் திட்டியது, தன்னுடன் பணிபுரியும் ஆண் நபர் என்பதையும், அவரால் பாலியல் ரீதியான தொந்தரவை இப்பெண் சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் அறியமுடிந்தது. அவர் மட்டுமல்ல உங்களுள் சிலரும் கூட இப்படி சில அனுபவங்களைப் பெற்றிருக்கலாம்; சிலர் சமாளித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இதற்காக எல்லாம் வேலை யை விட்டுவிட்டு வீட்டிலிருக்கும் நிலையில் இன் றைய பெண் களும் இல்லை. பொருளாதார சூழ்நிலையும் இல்லை. சரி இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிப் பது எப்படி?

* ஆபாசமாக பேசுவது, பாட்டு பாடுவது, அருவருக்கத்தக்க அல்லது விரும்பத்தகாத புத்தகம் அல்லது படங்களை கொடுப்பது போன்றவையும் பாலியல் தொந்தரவுகளே. எனவே, இதுகுறித்து கவனமாக இருங்கள். உங்களிடம் இப்படி யாராவது நடந்து கொள்வதாக தெரிந்தால், அவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் விலகி இருங்கள்.

* சக ஆண் ஊழியர்கள் <உங்கள்< உடைகள், உடல், அழகு பற்றிப் பேசினால், முதல் பேச்சிலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். அதை நீங்கள் ஏற்கும் பட்சத்தில், ஒருவேளை, பேச்சு மேலும் மேலும் தொடர்ந் து, ஒரு நாள் <உங்களுக்கு சங்கடத்தை ஏற் படுத்தலாம். அல்லது அவற்றை நீங்கள் ஏற்கும் போது, சம்பந்தப் பட்ட நபரே அதற்கு நீண்ட நாக்கு, மூக்கு முளைத்து பூதமாக்கிவிடலாம். எனவே, இவற்றை ஜஸ்ட் லைக் தட் என்று எடுத்துக் கொள் ளாமல் சற்று உஷாராக இருங்கள்.

* சில பெண்கள் தாங்களாகவே, சில சங்கடங்களை உருவாக்கிக் கொள்வர். <உதாரணமாக, ஜோவியல் பேர்வழி என்று கூறிக் கொண்டு வரையறை இன்றி, பல விஷயங்களைப் பற்றி சக ஆண் ஊழியர்களிடம் பேசும் போது, அவர்களும் அதற் கேற்றவாறு தங்கள் எல்லை களை விரித் துக் கொள்ளலாம். அப்படி நீங்கள் பேசிவிட்டு அவர்களைக் குறை கூறுவதில் நியாயமில்லை. எனவே, நீங்கள் சக ஆண் அலுவலர்களிடம் பேசும் போது,அதற்கான வரையறையை சரியாக வகுத்துக் கொள்ளுங்கள்.

* ஆண்களை எதிரியாக பாவித்தால், சக ஆண் பணியாளர் சாதரணமாக பேசினாலோ அல்லது நகைச்சுவையாக பேசினாலோ கூட அது தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளத் தான் தோன் றும். எனவே, ஆண் களை எதிரியாகவோ அல்லது ஆண்கள் அனைவருமே தவறானவர்கள் என்ற எண்ணம் கொண்டவராகவோ நீங்கள் இருந்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

* இப்படியெல்லாம் நீங் கள் கவனமாக இருந்தும் பிரச்னை உங்களை தொடர்ந்தால், சம்பந்தப் பட்ட நபரிடம், அவரது செய்கை <உங்களுக்குப் பிடிக்கவில்லை என் பதை தெரியப்படுத்த தயங்காதீர்கள். அப்படியும் பிரச் னை தொடந் தால், உங்கள் உயரதிகாரியிடம் புகார் அளிக்க தயங்காதீர்கள்.