உங்கள் மூளையின் அட்லஸ்

உங்கள் மூளையின் அட்லஸ்

மூளை, மூளையிலிருந்து மட்டுமே நம் சுகம், இன்பம், சிரிப்பு, திட்டம், சிரிப்பு, சோகம் என அனைத்தும் வெளியாகின்றன என ஹிப்போகிரேட்டஸ் என்னும் அறிஞர் கூறுவார்.

இத்தகைய அற்புதமான சக்தி கொண்ட மூளையைப்பற்றி நாம் அறிந்திருக்கிறோமா? இல்லையே. நாம் நம் கம்ப்யூட்டரின் சிபியுவில் உள்ளதைப் பற்றி அறிந்த அளவு கூட நம் மூளையைப் பற்றி அறிந்ததில்லை. ஏன்? பயமா? இல்லை. அதனை ஒரு பொருட்டாக நாம் கருதுவதே இல்லையா? அல்லது மூளை தான் நம் வாழ்க்கை யின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி காரணமாய் உள்ளது என்று தெரியாதா?

ஏதோ ஒன்று நாம் நம் மூளையின் வெவ்வேறு செயல்பாடுகள் குறித்து அறியாமல் இருக்கி றோம். இனிமேல் அறிய வேண்டும் என்றால் என்ன செய்யலாம்? இருக்கவே இருக்கிறது இன்டர்நெட். ஒரு சாதாரண மனிதனும் மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அறியும் வகையில் ஓர் இணைய தளம் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இதன் முகவரி http://www.brainexplorer.org இந்த தளத்தில் நாம் எதனை எல்லாம் அறிய விரும்புவோம் என்று தீர்க்கதரிசனமாக ஆய்வு செய்து கிடைத்த தகவல்களின் படி பல பிரிவுகளை அமைத்துள்ளனர்.

முதல் பிரிவு Brain Atlas இதில் மூளையின் கட்டமைப்பு நமக்குக் காட்டப்படுகிறது. முன் மூளை, பின் மூளை, நடுமூளை, தண்டுவடம் எனப் பல பிரிவுகள் இருப்பது இதில் தெரிய வருகிறது. ஒவ்வொரு பிரிவும் எந்த உடல் பகுதியுடன் சம்பந்தப்பட்டது, எந்த வேலையை ஆணையிடுகின்றன, எந்த செயல்பாட்டினைக் கட்டுப்படுத்துகின்றன என்று செயல்படுத்திக் காட்டப்படுகிறது. இந்தப் பிரிவு முழுவதும் நமக்கு மிகவும் ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் தரப்படுகின்றன.

அடுத்த பிரிவு Focus on Brain Disorders. இதில் நம் உணர்வு பூர்வமான நோய்களும் மூளை நோய்களும் விளக்கப்படுகின்றன. மூளையின் எந்த பகுதி எதனால் பாதிக்கப்படுகிறது என்பது சிறப்பாக விளக்கத்துடன் காட்டப்படுகிறது.

எதிலும் அளவுக்கதிகமாக ஆர்வம் கொண்டிருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள், மனக் குழப்பம், வலிப்பு, ஒற்றைத் தலைவலி, அடுக்கடுக்கான தலைவலி, பயத்தால் நிதானமிழத்தல், பார்க்கின்ஸன் வியாதி, தூக்க வியாதி, பக்க வாத நோய் எனப் பல வகையான மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கான காரணங்கள், அவற்றை முன்கூட்டியே தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என எக்கச்சக்க தகவல்கள் காணப்படுகின்றன.

இந்த பிரிவினை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். மூளை சம்பந்தப்பட்ட சொற்களையும் அதற்கான விளக்கங்களையும் Glossary பிரிவு தருகிறது.

அடுத்ததான பிரிவு மூளை கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலம் குறித்த தகவல்களைத் தருகிறது. பலவகையான நோய்களின் அடிப்படை குறித்து விளக்கம் தந்து அவை எதனால் ஏற்படுகின்றன என்றும் வழி காட்டுகிறது.

மூளை எப்படி எல்லாம் இருக்கிறது என்று பார்க்க விருப்பமா? Gallery என்ற இதன் பிரிவிற்குச் செல்லுங்கள். இங்கு மூளையின் படங்கள் பல்வேறு வகையான தோற்றங்களில் தரப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு இது மிகவும் உதவும் பிரிவாகும். இந்த தளத்தின் சிறப்பு இதன் ஸ்டைல் ஆகும். அனைவருக்கும் புரியும் வகையில் மிகவும் குழப்பமான விஷயங்களை வெளிக் கொண்டு வருவதை இந்த தளம் மிகச் சிறப்பாகச் செய்கிறது. அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய இணைய தளம் இது.

ஒரு மறுமொழி

  1. […] உங்கள் மூளையின் அட்லஸ் […]