மேப்பூச்சு அல்ல மேட்டர் அதிகம்-விண்டோஸ் 7

மேப்பூச்சு அல்ல மேட்டர் அதிகம்-விண்டோஸ் 7

விஸ்டாவிற்கு மேக் அப் போட்டு விண்டோஸ் 7 வருகிறது என்று விண்டோஸ் 7 சோதனைத் தொகுப்பை இறக்கிப் பயன்படுத்தியவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இது உண்மைக்குப் புறம்பானதாகும். பல பயன்பாட்டு அம்சங்கள் இதில் மேம்படுத்தப்பட்டுத் தரப்பட்டுள்ளன. அவை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. முழுமையான தொகுப்பு வருகையில் இன்னும் சில கூடுதல் மேம்பாடுகள் கிடைக்கலாம்.

1.Problem Steps Recorder: விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நாம் பிறரை நாடுவோம்; நம் நண்பர்கள் நம்மிடம் உதவி கேட்பார்கள். இனி யாரும் மற்றவரை எதிர்பார்க்க வேண்டியதில்லை. இனி விண்டோஸ் 7 தொகுப்பில் ஏதேனும் ஒரு புரோகிராம் பிரச்சினை செய்தது என்றால் மற்றவரின் உதவியை நாடாமல் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி PSR என டைப் செய்து என்டர் அழுத்திய பின் மீண்டும் Start Record என்பதில் அழுத்த வேண்டும். அதன்பின் நாம் அந்த புரோகிராமில் அழுத்தும் கீகள் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் அனைத்தும் பதியப்படும். செயல்பாட்டில் மாறும் திரைகள் பதியப்படும். இவை அனைத்தும் ஸிப் செய்யப்பட்ட பைலாக நமக்குக் கிடைக்கும். பிரச்சினை ஏற்பட்டால் இதனைத் திறந்து பார்த்து எந்த நிலையில் பிரச்சினை ஏற்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். இதனையே விபரம் தெரிந்த உங்கள் நண்பர்களுக்கு இமெயிலில் அனுப்பி உதவி கேட்கலாம்.

2. Burn images: மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பல ஆண்டுகளாக இருந்ததை விண்டோஸ் இறுதியாகத் தானும் தந்துள்ளது. சிடி மற்றும் டிவிடிக்களில் ஐ.எஸ்.ஓ. இமேஜ் பதியும் திறனே அது. இதனைப் பதிவதும் எளிது. இந்த இமேஜில் டபுள் கிளிக் செய்து பதிய வேண்டிய டிரைவைத் தேர்ந்தெடுத்து அதில் காலியான சிடியைப் போட்டு Burn பட்டனில் கிளிக் செய்தால் இமேஜ் பதியப்படும்.

3.Trouble shoot problems: விண்டோஸ் 7 பதிப்பின் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டால் உடனே அதனைச் சரி செய்திட ரெகவரி டிஸ்க்கெல்லாம் தேடி எடுத்து பூட் செய்திட வேண்டியதில்லை. Control Panel அழுத்திப் பின் Find and fix problems (or ‘Troubleshooting’)ஐத் தேர்ந்தெடுத்தால் உங்கள் பிரச்சினை சரி செய்யப்படும்.

4. Take control: நம் கம்ப்யூட்டர் முழுமையாக நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நாம் இல்லாத போது குழந்தைகள் கன்னா பின்னாவென பல சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்வதனை அனுமதிக்கக் கூடாது. இதற்கான வசதியை விண்டோஸ் 7 தருகிறது. விண்டோஸ் 7 உடன் வரும் AppLocker என்ற புரோகிராம் மூலம் இதனை மேற்கொள்ளலாம். நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் நாம் அனுமதிக்கும் புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வி கேட்க வேண்டாம். சிஸ்டம் விண்டோவில் Computer Configuration > Windows Settings > Security Settings > Application Control Policies > AppLocker என வரிசையாகச் சென்று இந்த புரோகிராமினை இயக்கிப் பார்த்தால் கட்டுப்பாடு அமைப்பது எவ்வளவு எளிது என்பது தெரியவரும்.

5.Calculate more:விண்டோஸ் 7 உடன் தரப்படும் கால்குலேட்டர் தோற்றத்தில் விண்டோஸ் விஸ்டாவில் உள்ளது போல மிகச் சாதாரணமாகத்தான் தெரிகிறது. இதில் உள்ள மெனுவில் சென்றால் Statistics மற்றும் Programmer  வியூக்களைப் பெற்று எவ்வாறு பல பயனுள்ள வழிகளில் இயக்கலாம் என்பதனை அறியலாம். இது புரியவில்லை என்றால் Options  மெனுவில் இயங்கிப் பார்க்கலாம். இதில் யூனிட் எனப்படும் அலகு மாற்றங்கள், தேதிகளைக் கொண்டு கணக்கிடுவது, ஸ்ப்ரெட் ஷீட் போன்ற அமைப்பில் கணக்கிடுவது, கடன் வட்டி விகிதம் போன்ற பல கணக்கு வழக்குகளைக் கையாளலாம்.

6. Switch to a projector: விண்டோஸ் 7 இயங்கும் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டரை இணைத்திருந்தால் ஒன்றை புரஜக்டராக மாற்றிக் காணலாம். Win+P அழுத்தலாம்; அல்லது Display Switch.exe என்ற புரோகிராமினை இயக்கலாம்.

7. Preview Fonts: விண்டோஸ் சிஸ்டம் போல்டரில் உள்ள பாண்ட்ஸ் போல்டரை இயக்கினால் நாம் எக்ஸ்பியிலும் விஸ்டாவிலும் எழுத்துக்களின் பெயர்களை மட்டுமே பார்க்க முடிகிறது. மேலும் அவை ட்ரூ டைப்பா அல்லது ஓப்பன் டைப்பா எனவும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் 7 தொகுப்பில் அந்த பாண்ட் எப்படித் தோற்றமளிக்கும் என்பதனையும் காணலாம். ஒரே குடும்பத்தில் உள்ள அனைத்து பாண்ட்களும் இதுவரை தனித்தனி பைலாகத்தான் காட்டப்பட்டு வந்தன. விண்டோஸ் 7 தொகுப்பில் அவை அனைத்தும் ஒரே குழுவாகக் காட்டப்படுகின்றன. எடுத்துக் காட்டாக Times New Roman, Times New Roman Bold, Times New Roman Bold Italic என்ற பாண்ட்கள் அனைத்தும் Times New Roman என்ற குடும்பத்தைச் சேர்ந்ததாக இருப்பதால் அவை Times New Roman என்ற ஒரு குழுவில் ஒரே என்ட்ரியாகக் காட்டப்படும்.

வழக்கமான எழுத்து வகைகளுடன் விண்டோஸ் 7, Gabriola  என்ற ஒரு பாண்டைக் கொடுத்துள்ளது. இது ஒரு ஓப்பன் டைப் பாண்ட். மிகவும் ஸ்டைலாக எழுத வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.

8. Automatic PC clean up: நமக்குத் தெரியாமலோ நமக்குத் தெரிந்தோ நம் நண்பர்கள் நம் கம்ப்யூட்டரில் தேவையற்ற மாற்றங்களை மேற்கொள்வார்கள். செட்டிங்ஸை மாற்றுவார்கள்; நம்பிக்கை அற்ற புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வார்கள்; முக்கியமான நம் பைல்களை அழிப்பார்கள். இன்னும் என்னென்னவோ மாற்றங்களை மேற்கொள்வார்கள். நாம் என்ன செய்வது? ஒன்றும் செய்திட வேண்டாம். நம் விண்டோஸ் 7 இதிலிருந்து நம் கம்ப்யூட்டரைக் காப்பாற்றுகிறது. இதில் உள்ள PC Safeguard  என்ற புரோகிராம் இதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. நம் நண்பர், அவர் எவ்வளவு பெரிய கம்ப்யூட்டர் வித்தை தெரிந்தவராய் இருந்தாலும், கம்ப்யூட்டர் பயன்பாடு முடித்து லாக் ஆப் செய்திடுகையில் PC Safeguard அவர் ஏற்படுத்திய அனைத்து மாற்றங்களையும் கேன்சல் செய்து பழைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வந்துவிடும். ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரில் எழுதப்பட்ட Windows steady state  என்ற மைக்ரோசாப்ட் புரோகிராம் இதனைத்தான் செய்கிறது. இது முன்பு இலவச ஆட் ஆன் புரோகிராமாக இருந்தது. தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதனைச் சோதித்துப் பார்க்க Control Panel >User Accounts and Family Safety > User Accounts>Manage another account > Create a new account  என்று சென்று ஒரு புதிய அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கவும். பின் அந்த அக்கவுண்ட்டில் PC Safeguard இன்ஸ்டால் செய்திடவும். பின் இயக்கி Apply கிளிக் செய்திடவும். இந்த புதிய அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து மேலே குறிப்பிட்ட மாற்றங்களை மேற்கொள்ளவும். ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். பின் ரீஸ்டார்ட் செய்து பார்த்தால் நீங்கள் இன்ஸ்டால் செய்த புரோகிராம் இருக்காது.

9. Understanding System Restore: முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் சிஸ்டம் ரெஸ்டோர் இயக்குவது சற்று விந்தையானது. எந்த அப்ளிகேஷன் புரோகிராமின் டிரைவர்களை அது நீக்கித் தரும் என்பது உறுதியாக நமக்குத் தெரியாது. விண்டோஸ் 7 இதிலிருந்து சற்று மாறுபட்டது. மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து Properties > System Protection > System Restore > Next செல்லவும். எந்த ரெஸ்டோர் பாய்ண்ட்டிற்குச் செல்ல விரும்புகிறோமோ அந்த பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இதில் ‘Scan for affected programs’ என்ற புதிய பட்டன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்தால் விண்டோஸ் 7 எந்த புரோகிராம்கள் நீக்கப்பட உள்ளன; எந்த டிரைவர்கள் அழிக்கப்பட உள்ளன என்று காட்டும்.

10.Desktop Slideshow: விண்டோஸ் 7 அதிகமான எண்ணிக்கையில் வால் பேப்பர்களைக் கொண்டுள்ளது. இருந்து என்ன பிரயோசனம்? ஒன்றுதானே ஒரு நேரத்தில் கொள்ள முடியும் என்று அங்கலாய்க்கிறீர்களா? இப்போதைய டிஜிட்டல் போட்டோ பிரேம் போன்று உங்களுக்குப் பிடித்த வால் பேப்பர் அனைத்தையும் டெஸ்க் டாப்பில் தோன்றுமாறு செய்திடலாம். டெஸ்க் டாப்பில் காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து Personalise > Desktop Background  என்று செல்லவும். பின் கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு நமக்குப் பிடித்த வால் பேப்பர் படங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பின் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை தேர்ந்தெடுத்த வால் பேப்பர்கள் மாற்றப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்து செட் செய்திடவும். தினந்தோறும் ஒன்று தோன்றும்படியும் செட் செய்திடலாம்; அல்லது பத்து விநாடிகளுக்கு ஒரு முறையும் மாறும்படி செட் செய்திடலாம். தேர்ந்தெடுத்த வால் பேப்பர்கள் ஒரே மாதிரி மாறிக் கொண்டிருந்தாலும் நமக்கு சலிப்பு தட்டலாம். எனவே மாறி மாறி எந்த வரிசையிலும் இல்லாமல் தோன்ற வேண்டும் என்றால் Shuffle என்பதில் கிளிக் செய்து ஓகே செய்துவிட்டால் போதும்.

11. Custom power switch: விண்டோஸ் 7, ஸ்டார்ட் மெனுவில் ‘Shut down’என்னும் பட்டனைக் கொண்டுள்ளது. நீங்கள் அடிக்கடி கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்பவராக இருந்தால் இந்த பட்டனை அவ்வாறாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

12. Auto arrange your desktop: டெஸ்க் டாப்பில் பல ஐகான்கள் சிதறிக் கிடக்கிறதா? விஸ்டாவில் உள்ளதைப் போல View > Auto arrange கிளிக் செய்தால் ஐகான்கள் வகைப்படுத்தப்பட்டு வரிசைப் படுத்தப்படும். ஆனால் விண்டோஸ் 7ல் இன்னொரு வழி தரப்படுகிறது. எப்5 கீயை அழுத்தி சிறிது நேரம் பிடித்துக் கொண்டால் டெஸ்க் டாப்பில் உள்ள ஐகான்கள் தாமாக வரிசைப்படுத்தப்படுகின்றன.

13. Stiky Notes:  விண்டோஸ் 7–ல் ஸ்டிக்கி நோட்ஸ் அப்ளிகேஷன் வித்தியாசமாகச் செயல்படுகிறது. StikyNote.exe என்ற பைலை இயக்கியவுடன் கீ போர்டு மூலம் டெக்ஸ்ட்டை டைப் செய்திடலாம். டெக்ஸ்ட்டில் ரைட் கிளிக் செய்து அதன் வண்ணத்தை மாற்றலாம். நோட் டைட்டில் பார் மீது + அடையாளம் கிளிக் செய்தால் இன்னொரு நோட் இணைக்கலாம். முடிவில் Alt +4  கிளிக் செய்தால் அந்த நோட் தானாக சேவ் செய்யப்படும்.

14 More Videos: விண்டோஸ் மீடியா பிளேயர், ஆடியோ மற்றும் வீடியோக்ககளை இயக்க சக்தி வாய்ந்த ஒரு புரோகிராம் ஆகும். ஆனாலும் இந்த புரோகிராம் சில பார்மட் பைல்களை இயக்க மறுப்பதனை நாம் அடிக்கடி பார்க்கிறோம். விண்டோஸ் 7 உடன் வரும் விண்டோஸ் மீடியா பிளேயர் ஏற்கனவே இயக்க மறுத்த பல பார்மட் பைல்களை இயக்குகிறது.

15. New WordPad formats: வேர்ட் பேடில் என்ன டைப் செய்தாலும் அது Rich Text Format, RTFல் தான் சேவ் செய்யப்படும். இப்போது தரப்பட்டிருக்கும் விண்டோஸ் 7 வேர்ட் பேடில் டாகுமெண்ட் பார்மட்டிலும் சேவ் செய்திட முடியும்.

16. An Alt + Tab alternative: நம் கம்ப்யூட்டரில் ஐந்து விண்டோக்களைத் திறந்து ஒவ்வொன் றிலும் ஒரு பைலை எடிட் செய்து கொண்டிருக்கிறோம். இவற்றில் ஏதேனும் ஒரு பைலை இயக்கிப் பார்க்க ஆல்ட் + டேப் அழுத்தி பைல்களின் ஐகான்களைக் கிளிக் செய்து வந்தோம். விண்டோஸ் 7 பேக்கேஜில் கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறு விண்டோஸ் ஐகான் மீது கிளிக் செய்தால் போதும்.

17. Parallel defrags:  விண்டோஸ் 7 தொகுப்பில் டிபிராக் செய்வது விந்தையாகவும் வேடிகையாகவும் உள்ளது. டிபிராக் கட்டளையுடன் /r ஸ்விட்ச் சேர்த்துக் கொடுத்தால் ஒரே நேரத்தில் பல டிரைவில் டிபிராக் செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது. வழக்கமான டிபிராக் ஆப்ஷன்களுடன் மேலும் சில வசதிகளுடன் டிபிராக் தேவை என்றால் /h ஸ்விட்ச் கொடுக்க வேண்டும். /u ஸ்விட்ச் கொடுத்தால் டிபிராக் மேற்கொள்ளப்படும் நேரத்தில் என்ன நிகழ்கிறது என்று ரிபோர்ட் நமக்குக் கிடைக்கிறது. எனவே defrag/c/h/u/r  எனக் கட்டளை கொடுத்து டிபிராக் நடைபெறுவதை அழகாக வேடிக்கை பார்க்கலாம். இன்னும் என்ன என்ன வசதிகளை இதில் பெறலாம் என்பதற்கு defrag/? எனக் கட்டளை கொடுத்தால் பெறலாம்.

18. Right click everything:  நம் மானிட்டர் ஸ்கிரீன் ரெசல்யூசன் மாற்ற அதன் மெனுவெல்லாம் சென்று டிஸ்பிளே செட்டிங்ஸ் பெற்று மாற்ற வேண்டியதில்லை; டெஸ்க் டாப்பில் ரைட் கிளிக் செய்தால் எழுந்து வரும் மெனுவில் ரெசல்யூசன் மாற்ற ஆப்ஷன்ஸ் கிடைக்கும். அதிலேயே புதிய மாற்றங்களை அமல்படுத்தலாம். டாஸ்க்பாரில் விண்டோஸ் பின் செய்திடும் புரோகிராம் ஐகான்களை அவை தேவை இல்லை என்றால் அவற்றின் மீது ரைட் கிளிக் செய்து ‘Unpin this program from the taskbar’ என்பதில் கிளிக் செய்தால் போதும். அந்த புரோகிராம் டாஸ்க் பாரில் இருந்து நீக்கப்படும்.

19. Protect your data: யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்கள் டேட்டாவினைப் பதிந்து கொண்டு செல்ல மிகவும் வசதியான சாதனங்கள் ஆகும். ஆனால் மிகவும் ரகசியமான அடுத்தவர் பார்க்க முடியாத டேட்டாவைப் பதிந்த பின்னர் அவை தொலைந்து போனால் அதனால் ஏற்படும் இழப்பு பெரியதாயிற்றே. இதற்கு விண்டோஸ் 7 ஒரு தீர்வினைத் தந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் BitLocker தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி முதலில் டேட்டாவை என்கிரிப்ட் செய்திடலாம். இதற்கு பாஸ்வேர்டும் வழங்கிவிட்டால் அந்த பாஸ்வேர்டைப் பயன்படுத்தி மட்டுமே டேட்டாவினைப் படிக்க முடியும். இதற்கு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் ரைட் கிளிக் செய்து BitLocker–ஐ இயக்க வேண்டும். அதன் பின் அது தரும் வழி காட்டுதல் படி சென்று டேட்டாவை என்கிரிப்ட் செய்து பாதுகாக்கலாம்.

20. Find bottlenecks: விண்டோஸ் 7 இயக்குகையில் சிஸ்டம் மிக மெதுவாக இயங்குவதாகத் தெரிந்தால் அதற்கான காரணத்தை எப்படி தெரிந்து கொள்வது? ஸ்டார்ட் கிளிக் செய்து RESMON என டைப் செய்தால் ரிசோர்ஸ் மானிட்டர் என்ற புரோகிராம் இயக்கப்படும். இதில் CPU, Memory, Disk மற்றும் Network tabs என்றவற்றின் இயங்கு தன்மை குறித்த தகவல்கள் காட்டப்படும். ஏதேனும் ஒரு புரோகிராம் பிரச்சினை கொடுத்து இயங்காமல் முடங்கிப் போவதாகத் தெரிந்தால் பட்டியலில் அதன் பெயரில் ரைட் கிளிக் செய்து Analyze Process என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் முடங்கிப் போன புரோகிராமினை ஆய்வு செய்து எதனால் பிரச்சினை என்று காட்டும்.

21. New Shortcuts:  விண்டோஸ் 7 பல புதிய ஷார்ட் கட் கீ தொகுப்புகளை வழங்கியுள்ளது.

அவற்றில் சில:

Alt+P:எக்ஸ்புளோரர் பிரிவியூ பேனைக் காட்டும்; மறைத்து வைக்கும்.

Windows Logo + G:  மற்ற விண்டோக்களின் முன்னால் சாதனங்களைக் காட்டும்.

Windows Logo ++ (plus key): தேவையான இடத்தில் ஸூம் செய்திடும்

Windows Logo + (minus key): தேவையான இடத்தில் ஸூம் ஆனதைக் குறைத்திடும்.

Windows Logo + Up : தற்போதைய விண் டோவினை மேக்ஸிமைஸ் செய்திடும்.

Windows Logo+Down:  தற்போதைய விண் டோவினை மினிமைஸ் செய்திடும்.

Windows Logo + Left: ஸ்கிரீனின் இடது பக்கத்தில் ஆப்ஜெக்டைத் தள்ளி வைத்திடும்.

Windows Logo + Right: ஸ்கிரீனின் வலது பக்கத்தில் ஆப்ஜெக்டைத் தள்ளி வைத்திடும்.

Windows Logo + H ome:  கர்சர் இருக்கும் விண்டோ தவிர மற்றவற்றை மினிமைஸ் அல்லது மேக்ஸிமைஸ் செய்திடும்.

22.Faster program launches: புரோகிராம் ஒன்றைத் திறந்து பைல் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இனி இன்னொரு முறை அதே புரோகிராமினை இயக்கி வேறு ஒரு பைலைத் திறக்க திட்டமிடுகிறீர்கள். இதற்கு மீண்டும் ஒரு முறை ஸ்டார்ட் மற்றும் ஆல் புரோகிராம்ஸ் செல்லத் தேவையில்லை. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு அந்த புரோகிராமின் ஐகான்மீது கிளிக் செய்தால் போதும். அல்லது நடுவே உள்ள மவுஸ் பட்டன் மூலம் கிளிக் செய் திடலாம்.