குறைந்த முதலீடு அதிகபட்ச திறன் என் – கம்ப்யூட்டிங்

பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் திறன் முழுவதையும் ஒருவர் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க், ப்ராசசர் ஸ்பீட் மற்றும் சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரு சேர ஒருவர் பயன்படுத்துவது இல்லை. ஒரு கம்ப்யூட்டரில் உள்ள இவற்றை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதி தரப்பட்டால் முதலீட்டு செலவு மிச்சமாவதுடன், கம்ப்யூட்டரின் திறன் அதிக பட்சம் பயன்படுத்தப்படலாம். இதனைத் தான் புதிய முறையில் என் கம்ப்யூட்டிங் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

இந்நிறுவனம் தந்துள்ள சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் சாதனங்களைப் பயன்படுத்தினால் ஒரு கம்ப்யூட்டரை ஒரே நேரத்தில் 7 முதல் 30 பேர் வரை பயன்படுத்தலாம். இதற்கு ஆகும் செலவு கூடுதல் பயனாளர் ஒருவருக்கு ரூ.5,000க்குள் தான் இருக்கும். ஒவ்வொரு கூடுதல் பயனாளரும் ஒரு கீ போர்டு, மவுஸ், மானிட்டர் மற்றும் அக்செஸ் சாதனம் மூலம் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுவார். சி.பி.யு. மற்றும் டிரைவ் போன்ற எந்த இயங்கும் சாதனப் பிரிவு எதுவும் இல்லாததால் எந்த நிலையிலும் இவற்றை எளிதாகப் பயன்படுத்தலாம்.
இதனால் பெர்சனல் கம்ப்யூட்டருக்கு ஆகும் செலவும் 50% வரை குறைகிறது. எலக்ட்ரிக்கல் செலவு 80% குறைகிறது. நிறுவனம் ஒன்றின் டேட்டா பாதுகாப்பாக வைக்க முடிகிறது. பராமரிப்பும் எளிதாகிறது.

இது எப்படி சாத்தியமாகிறது? இணைக்கப்பட்டுள்ள கூடுதல் பயனாளர் சிறிய நூல் அளவிலான அக்செஸ் சாதனம் வழியாக, கம்ப்யூட்டர் அட்மினிஸ்ட் ரேட்டரின் துணையுடன் முதன்மைக் கம்ப்யூட்டருக்குள் நுழைந்து அதில் உள்ள சிஸ்டம் வழியாக, சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்கி பைல்க�ளைக் கையாள முடியும். இது போல ஒரு கம்ப்யூட்டர் இணைப்பில் அதிகபட்சம் 30 பேர் இயங்க முடியும்.

இந்தியாவில் என்–கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் சேனல் பார்டனர்களாக விப்ரோ, எச்.சி.எல்., டெல் மற்றும் எச்.பி. நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. ஆந்திர மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கம்ப்யூட்டருக்கென மேற்கொள்ளப்படும் முதலீட்டுச் செலவு குறைந்துள்ளது.
பன்னாட்டளவில் ஏறத்தாழ 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்தி வருவதாக இந்நிறுவனத்தின் பத்திரிக்கைக் குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் தகவல்கள் தேவைப்படுவோர் http://ncom puting.com /overview என்ற முகவரி யில் உள்ள தளத்தைக் காணலாம்.