Category Archives: ஆன்மீகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் நடக்கும் சேவைகள் என்னென்ன?… முழு விவரம்..!

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும் காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். அதன் பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் கௌசல்யா சுப்ரஜா, என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க, வெங்கடாசலபதி அருகில் போக ஸ்ரீனிவாச மூர்த்தி பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர்.

Continue reading →

சகல சௌபாக்கியமும் பெற்று குடும்பம் சந்தோஷமாக இருக்க விநாயகரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? விநாயகர் வழிபாட்டை பற்றி இதுவரை கேள்விப்படாத சில ஆன்மீக குறிப்புகள்.

எந்த வழிபாடு செய்வதாக இருந்தாலும், எந்த பூஜை புனஸ்காரங்கள் செய்வதாக இருந்தாலும் அது அத்தனையும் நமக்கு வெற்றியை கொடுக்க வேண்டும் என்றால் முதன் முதலில் நாம் வழிபாடு செய்ய வேண்டிய கடவுள் விக்ணங்களை தீர்க்கும் விநாயகர் தான். எளிமையாக நாம் எந்த முறையில் விநாயகரை வழிபாடு செய்தாலும் அவர் நமக்கு உடனடியாக வரங்களை வாரி கொடுத்து விடுவார். இப்படிப்பட்ட விநாயகர்

Continue reading →

துளசி வழிபாட்டை எப்போது செய்வதால் சிறந்த பலன்களை பெறமுடியும்…!!

ஒவ்வொருவர் வீட்டிலும் துளசிச் செடி இருப்பது அவசியம். பல மருத்துவ குணங்கள் நிரம்பிய துளசிச் செடி, மகாவிஷ்ணுவிற்கு பிடித்தமான ஒன்றாகும்.
துளசியில் இரண்டு வகை உண்டு. அதில் கொஞ்சம் கருப்பாக இருக்கும் துளசியை ‘கிருஷ்ண துளசி’ என்பார்கள். இதனை வீட்டில் இரட்டைச் செடியாக வளர்ப்பதே நல்லது. துளசியை வீட்டின் முன்பாகவோ, முற்றத்திலோதான் வளர்க்க வேண்டும்.

Continue reading →

அட்சய திருதியையில் 3 ராஜயோகங்கள்; இந்த நேரத்தில் ஷாப்பிங் செய்யுங்கள்

புத்தாண்டு பிறந்தவுடன் வரும் முக்கிய நல்ல நாட்களில் அட்சய திருதியையும் முக்கியமான ஒரு நாளாகும்.

அட்சய என்றால் அழியாதது. அட்சய திருதியை நாளில் செய்யும் செயல்கள் அழியாது அல்லது இந்த நாளில் செய்யும் செயல்கள் பல நன்மைகளைத் தரும் என்பது நம்பிக்கை. எனவே, இந்நாளில் புண்ணிய நதிகளில் நீராடுதல்,

Continue reading →

தேவி மகாலட்சுமி எங்கெல்லாம் வாசம் செய்கிறாள் தெரியுமா…?

குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

<!–more–>
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள். லட்சுமி, வழிபாட்டின்போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.

மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

முதன்மையானது இந்த காகங்கள்.!! சில சுவாரசிய தகவல்கள்

காகம் என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும், மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

Continue reading →

தைப்பூசம் : ஆண்டி கோலத்தில் பழநி தண்டாயுதபாணியை தரிசித்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா


தீராத நோய் தீரவும் மனக்குழப்பம் நீங்கவும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்.

வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.

பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். திருக்கல்யாணமும் தேரோட்டமும் அமர்களப்படும். இன்றைய தினம் திருக்கல்யாணமும் நாளைய தினம் தேரோட்டமும் நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தைப்பூசம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தண்டாயுதபாணியின் சிறப்புகளைப் பற்றியும் எந்த கோலத்தில் முருகனை தரிசித்தால் என்ன பலன் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.

Continue reading →

துன்பங்கள் போக்கும் துளசி மாலை! அவை அளிக்கும் அதிசய பலன்கள் !

வைத்திருப்பதற்கும் வணங்கி அணிவதற்கும் துளசியை போன்றதொரு புனித தாவரத்தை நாம் காண முடியும். துளசியை போலவே, துளசி மாலையும் பெரும் முக்கியத்துவம் பெற்றது.

உங்கள் கழுத்திலோ அல்லது மணிகட்டிலோ நீங்கள் துளசி மாலையை அணிகிற போது அலாதியான ஒரு பாதுகாப்பு உணர்வு மேலெழும். இதை சற்று நவீன அறிவியலுடன் தொடர்பு படுத்தினால் துளசி மாலையை தொடர்ந்து அணிவதால், இன்றைய காலத்தின் மன அழுத்தங்களிலிருந்து விடுபட முடிகிறது என்கின்றனர்.

Continue reading →

நவராத்திரி பத்து நாட்களும் பத்து வகையான பிரசாதங்கள் படைப்பது ஏன்…?

நவராத்திரி பத்து நாட்களும், கொலு வைத்து, அக்கம் பக்கத்தார் அனைவரையும் அழைத்து உபசரித்து, வெற்றிலைப் பாக்கு, பரிசுப் பொருட்கள் கொடுப்பது வழக்கம்.

<!–more–>

நவராத்திரி என்றாலே, நம் நினைவுக்கு வருவது சுண்டல்தான். நவராத்திரியில், அம்பாளுக்கு விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது.

தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து, அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ “மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள். இதனால் பூமி “சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது.

நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.

சிலர், நவராத்திரி மாதத்தில் பருவநிலை சற்று மாறுவதால், உடல் நிலையும் மந்தமாக இருக்கும். அதை சீராக்கவே புரோட்டீன் மற்றும் சத்து நிறைந்த முழு தானியங்களை உபயோகித்து சுண்டல் செய்து அனைவருக்கும் வழங்குவதாகக் கூறுவர்.

நவராத்திரியின் பொழுது, நவகிரகங்களை சாந்தப்படுத்த, நவதானியங்களை உபயோகித்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கிரகத்துக்குரிய தானியங்களில் உணவு சமைத்து (கோதுமை, அரிசி, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கொண்டைக்கடலை, மொச்சைக்கொட்டை, எள்ளு, கொள்ளு, உளுத்தம் பருப்பு) படைத்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவர்

‘முருகன் எனும் மாமருந்து!’

மே 25 – வைகாசி விசாகம்

முருகன்

முழு நிலவோடு பொலியும் வைகாசி விசாகம் ஆறுமுகனின் அவதார நன்னாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. `விசாகம் ஸர்வ பூதானாம் ஸ்வாமினம் கிருத்திகா சுதம்’ என்று வடமொழியும் `இன்சொல் விசாகா க்ருபாகர’ என்று தென்மொழியும் கந்தனைப் போற்றிப் புகழ்கின்றன.
கந்தனின் கதையும் அவன் குறித்த வழிபாடுகளும் நம் வாழ்வுக்கு வரமாகும்; அவனைப் பாடும் துதிப்பாடல்களோ நம் உள்ளப் பிணியையும் உடற்பிணியையும் போக்கும் மாமருந்தாகும். `ஆறு தாங்கிய ஜோதியான முருகன் ஆறெழுத்து மந்திர மூர்த்தி, ஆறுதலைக் கொடுக்கும் ஆறுமுகன் – அறுபடை வீரன்’ என்பது காஞ்சி மகாபெரியவரின் அருள்வாக்கு.
ஆம், குமரக்கடவுளின் சிறப்புகள் பலவும் ஆறாகவே திகழ்வது மிகவும் சிறப்பு. நாமும் அவற்றை அறிந்து மகிழ்வோம்.

Continue reading →