Daily Archives: பிப்ரவரி 11th, 2012

30 வயது பெண்களும், 40 வயது ஆண்களும் அழகு– ஆய்வு முடிவு

பதின் பருவத்தில் தான் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பது கவிஞர்களின் சொல்லாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் முப்பது வயதைக் கடந்த நடுத்தர வயதில்தான் பெண்கள் அழகாக இருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

மனிதர்கள் எந்த வயதில் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என அநேகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘ஆண்டிகள்தான்’ அழகு!

மனிதர்களின் அழகு பற்றி 1000 ம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆண்களிடம் கேட்ட கேள்விகளுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக ஏராளமான இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் ( ஏன் எல்லோரும் இப்படி ‘ஆன்டி ஹீரோ’வாக மாறினாங்களோ தெரியலை)

ஆண்கள் 40 வயதில் அழகு

இதேபோல் பெண்களிடம் கேட்கப்பட்டதில் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்தான் மிக அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிவதாக கூறியுள்ளனர் (அப்படியா! ) ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது.

அழகிற்கு காரணம் என்ன?

இளம் வயதில் குடும்ப சூழ்நிலையால் தன்னைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் பல பெண்கள் திருமணம் முடிந்து குழந்தை பெற்றுக்கொண்டு ஒரளவு லைஃபில் செட்டில் ஆன திருப்தியில் தங்களை அழகு படுத்திக்கொள்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை கவரும் உடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர். அதனாலேயே பிறரது கண்களுக்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிகின்றனர்.

ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும் விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் இதனாலேயே அவர்களின் உடல் அமைப்பு கவர்ச்சிகரமானதாக மாறிவிடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

எப்படி இருந்தா என்ன, ஆண்களும் அழகுதான், பெண்களும் அழகுதான் – எந்த வயதாக இருந்தாலும் என்பதை உணர்ந்தால் எப்போதும் எல்லோரும் அழகுதான்..

புரோகிராம்களை முறையாக மூடிட

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.
சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், அனைத்து புரோகிராம் களையும் மூடிவிடவும் என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம் களையும், ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும். இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில், சில புரோகிராம்களை மூட முடியாமல் முடங்கிப் போய், தொடக்கத்தில் குறிப் பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டிய திருக்கும். இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச புரோகிராம் ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த புரோகிராம் ஒரு வேலையை நமக்காக, எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது. அது, இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடுவதுதான். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்து விட்டால், பின் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் மூடிவிடலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கினால், கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது. “x” பட்டனை அழுத்தினால், புரோகிராம்கள் மூடப்படுகின்றன. மண்டை ஓட்டுடன் எலும்புகளைக் கொண்டுள்ள அபாய சின்னம் கொண்ட பட்டனை அழுத்தினால், அனைத்து புரோகிராம்களும் “கொல்லப்(kill)படுகின்றன’. இரண்டிற்கும் என்ன வேறுபாடு? என நீங்கள் கேட்கலாம். ஒரு புரோகிராமினை மூடுகையில், முறையாக அது மூடப்படும்.
ஆனால் அது முறை யாக மூடப்படாவிட்டால், அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது. இந்த End it All புரோகிராமினை www.docsdownloads.com/enditall1.htm என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அனைத்து விண்டோஸ் பதிப்புகளிலும் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கலாம்.

வே2 எஸ்.எம்.எஸ். விரிவாக்கம்

இலவசமாக இரு நண்பர்களுக்கிடையே எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்ப உதவிடும் தளமான “வே 2 எஸ்.எம்.எஸ்.’ (Way2Sms.com) அண்மையில் இதே போல இயங்கும் “160 பை 2 டாட் காம் (160by2.com)’ என்ற நிறுவனத்தை வாங்கியுள்ளது. Way2online என்ற நிறுவனம் இதனை இயக்கி வருகிறது. இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் இதன்வாடிக்கையாளர் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சமாக உயர இருக்கிறது. அத்துடன் இந்திய இன்டர்நெட் பயனாளர்களில் 35% பேர் இந்த தளத்தில்பதிந்தவர்களாக இருப்பார்கள்.தற்போது இந்நிறுவனத்திடம் 2.3 கோடி பேர்கள் பதிந்த வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதுவரை இந்த இரு தளங்களும் மாதந்தோறும் பத்து லட்சம் என்ற அளவில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று வந்தன. இதன் மூலம் இனி வே 2 எஸ்.எம்.எஸ். நிறுவனம், இந்தியாவின் முன்னணி இன்டர்நெட் நிறுவனமாக இடம் பெறும்.
வே 2 எஸ்.எம்.எஸ். 2006 ஆம் ஆண்டில் வன பாலா என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் டெக்ஸ்ட் மெசேஜிங், சேட், இமெயில் மற்றும் சோஷியல் மீடியா செய்திகளை இலவசமாகப் பரிமாறிக் கொள்ளலாம். இந்தியாவில் இயங்கும் சி.டி.எம்.ஏ மற்றும் ஜி.எஸ்.எம். வகை மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்திகளை இந்த தளம் மூலம் அனுப்பலாம். செய்தி ஒன்றில் 160 கேரக்டர்கள் மட்டுமே இருக்க முடியும்.
அத்துடன் ஜிசேட், யாஹூ, பேஸ்புக் தளங்களில் மேற்கொள்வது போல ஒருவருக்கொருவர் டெக்ஸ்ட் வழி சேட் செய்திடமுடியும். உலகில் அதிகம் பயன்படுத்தும் இணைய தள வரிசையில், இது சென்ற மாதம் 509 ஆவது இடத்தையும், இந்தியாவில் 34 ஆவது இடத்தையும் பெற்றிருந்தது.
இந்த தளத்திற்கு ஏறத்தாழ 30 நாடுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஏழு லட்சம் புதிய பயனாளர்கள் பதிந்து கொண்டு வருகின்றனர். சென்ற ஆண்டில் கூகுள் தேடல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட தளங்களில் முதல் பத்து இடத்தில் வே 2 எஸ்.எம்.எஸ். இடம் பெற்றிருந்தது.
160by2.com நிறுவனம் 2003ல் இதே போல் தொடங்கப்பட்டது. ஹைதராபாத்தில் தலைமை அலுவலகம் இருந்தாலும், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் இதற்கு கிளை அலுவலகங்கள் இயங்குகின்றன.