Daily Archives: பிப்ரவரி 18th, 2010

விக்கிபீடியாவின் இந்திய பதிப்பு

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் என்சைக்ளோபீடியா, இந்தியாவிற்கென தனி பதிப்பு ஒன்றை வெளியிட உள்ளது. இந்தியா மற்றும் சீனாவின் இன்டர்நெட் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருவதனால், இந்த பதிப்பு தன் உலகளாவிய நிலையை உயர்த்த உதவியாயிருக்கும் என விக்கிபீடியா எண்ணுகிறது.
விக்கிபீடியா ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சீனா, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கென தனி பதிப்பு இருப்பது போல, இந்தியாவிற்கும் தனி பதிப்பு ஒன்றை Wikipedia.in என்ற முகவரியுடன் அமைக்க இருக்கிறது.
தற்போது இந்தியாவில் விக்கிபீடியாவின் பரவல் அவ்வளவாக இல்லை. இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் ஆங்கிலம் பேச மற்றும் படிக்கத் தெரிந்தவர்கள் இருந்தாலும், இந்தியா குறித்த தகவல்கள் அவ்வளவாக இல்லை என்பதால் இந்நிலை உள்ளது. மேலும் விக்கிபீடியா, இந்திய மொழிகளான தமிழ் (20,979), இந்தி(53,246), மணிப்புரி(24,738), குஜராத்தி(12,627), உருது(12,547), சமஸ்கிருதம் (3,914), பீஹாரி(2,481), பாலி(2,316), பிஜி ஹிந்தி,மராத்தி (26,582) காஷ்மீரி(375), ஒரியா (553) அஸ்ஸாமீஸ்(263), கன்னடம் (7,850), தெலுங்கு(44,345), மேற்கு பஞ்சாபி (2,927), பஞ்சாபி (1,507), சிந்தி (349)மற்றும் வங்காள (21,023) மொழிகளில் பக்கங்களைக் கொண்டிருந்தாலும், இந்த மொழிகளில் கட்டுரைகள் குறைவாகவே உள்ளன. இந்தியாவில் தகவல் அறிவதில் மொழி ஒரு தடையே இல்லை; இருப்பினும் விக்கிபீடியா குறித்த அறிந்தேற்பு மக்களிடம் அவ்வளவாக இல்லை என்பதே இன்றைய நிலையாக உள்ளது.
உலகில் அதிகம் காணப்படும் இணையதளங்களில், விக்கிபீடியா ஆறாவது இடத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒன்பதாவது இடத்தையே கொண்டுள்ளது. எட்டு கோடி பேர் இணைய இந்திய மக்கள் தொகை என்று கண்டறியப்பட்ட இடத்தில், விக்கிபீடியாவினை அணுகுபவர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது வருத்தத்திற்குரியது. இந்நிலையை மாற்ற இந்திய விக்கிபீடியா பிரிவு ஒன்றினை அமைத்து இயங்க விக்கிபீடியா பவுண்டேஷன் முடிவெடுத்துள்ளது.

மீண்டு வந்த கிரேக்க தேவதை

அகழ்வாராய்ச்சியாளர்கள் சமீபத்தில் எகிப்தில் புதைந்துகிடந்த ஒரு கிரேக்க கோவிலை கண்டுபிடித்தார்கள். அலெக்சாண்ட்ரியா நகருக்கு அருகே கோம் எல் டிக்கா பகுதியில் இந்தக் கோவில் கண்டு கிடைத்த பல்வேறு சிலைகளில் படத்தில் காணப்படும் இந்த தேவதை சிலையும் ஒன்று. இது சுண்ணாம்புக் கல் சிலையாகும்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. உலகில் எல்லாமே தெய்வம் என்ற நம்பிக்கையுடைய கிரேக்க முதாதையர்கள் வழிபட்ட சிலையாகும். அங்குள்ள கலாச்சார அமைச்சகம், இது பேஸ்டட் எனும் பூனை பெண் தெய்வமாக இருக் கலாம் என்று கூறி உள்ளது.

2 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின்பும் எழில் குலையாத, வண்ணம் கலையாத இந்தச் சிலை தற்போது பார்த்தாலும் அழகாகத்தானே இருக்கிறது.

ஹாட்நோட்ஸ்-என்னும் புரோகிராம்

கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர் கூறுவார். அப்போதுதான் பேனா, பென்சில் மற்றும் பேப்பரைத் தேடுவோம். எதிர் முனையில் இருப்பவர், என்னய்யா இதெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்வதில்லையா என்று அங்கலாய்ப்பார். ஏன், கையில் இருக்கும் கம்ப்யூட்டரில் தகவலைக் குறித்துக் கொள்ள முடியாதா?
முடியும். நோட்ஸ், ஸ்டிக்கி நோட்ஸ், அர்ஜன்ட் நோட்ஸ் என இதனைக் குறிப்பிடுவோம். இது போல நோட்ஸ் குறிப்புகளை, டெஸ்க்டாப்பில் எழுதி வைக்கும் வசதியைத் தர பல புரோகிராம்க<ள் இருந்தாலும், அண்மையில் நான் பார்த்த ஹாட்நோட்ஸ் (Hott Notes from http://www.hottnotes.com) என்னும் புரோகிராம், இவ்வகையில் சிறப்பானதாக இருந்தது.
மெசேஜ், லிஸ்ட், ஸ்கிரிப்பிள் என மூன்று வகைகளில், மூன்று தனி தனிக் கட்டங்களில் நாம் அவசரத் தகவல்களை எழுதி வைக்கலாம். இந்த கட்டங்கள் ஒளி ஊடுறுவும் தன்மை உடையதாய், டெஸ்க் டாப்பில் உள்ளதை மறைக்காதவகையில் இருக்கும். சிறிய அளவில் இதில் படங்களைக் கூட வரைந்து வைக்கலாம். அல்லது படத்தை ஒட்டியும் வைக்கலாம். வேஸ்ட் பாஸ்கட் என்னும் வசதியில், அதிகம் பயன்படாத குறிப்புகளை எழுதி வைக்கலாம். தேவைப்பட்டால், ரீசைக்கிள் பின்னிலிருந்து எடுத்துக் கொள்வதைப் போல எடுத்துக் கொள்ளலாம். முக்கியமான தகவல்களை பேக்கப் பைலாக வைத்துக் கொள்ளவும் இதனைப் பயன்படுத்தலாம்.
நினைவில் வைத்துக் கொண்டு, வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை, இதில் ஒரு நினைவூட்டல் போர்டு மாதிரி எழுதி வைத்துக் கொள்ளலாம்.
இது எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் போர்ட்டபிள் வெர்ஷனாகவும் கிடைக்கிறது. இதனை பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.