Daily Archives: மார்ச் 4th, 2012

எக்ஸெல்-சில அவசிய ஷார்ட்கட் கீகள்

எந்த அப்ளிகேஷன் புரோகிராமிலும், அனைவருக்கும் அனைத்தும் முக்கிய மானவை என்று கருத முடியாது. உங்களுக்கு முக்கியமானது மற்றவர்களுக்குச் சாதாரண மாக இருக்கலாம். அதே போல மாற்றியும் சொல்லலாம். இருப்பினும் இங்கு அதிகம் பயனுள்ள சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. அச்சடித்து உங்கள் மேஜைக்கு அருகே ஒட்டி வைத்துப் பயன்படுத்தலாம்.
Control + “C”: Copy
Control + “X”: Cut
Control + “V”: Paste
F2:அப்போதைய செல்லை எடிட் செய்திட. (எளிதாக எடிட் செய்திடும் வகையில் செல் ரெபரன்சஸ் அனைத்தும் வண்ணத்தில் அமைக்கலாம்)
F5: Go to
F11:உடனடி சார்ட் கிடைக்க
Shift + F3: பேஸ்ட் செயல்பாட்டிற்கான விஸார்ட் கிடைக்கும்.
Control + F3: பெயரை டிபைன் செய்திடலாம்.
Control + “+”: அப்போதைய தேர்வுக்கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டு வரிசையினை இடைச் செருகும்.
Control + “”: அப்போதைய தேர்வுக்கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டு வரிசையினை நீக்கும்.
Shift + Space: முழு படுக்கை வரிசையும் அப்போதைய ஏரியாவிற்காக தேர்ந்தெடுக்கப்படும். இது என்ன என்று கொடுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.
Control + Space: முழு நெட்டு வரிசையும் அப்போதைய ஏரியாவிற்காக தேர்ந்தெடுக்கப் படும். இது என்ன என்று கொடுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.
Control + “!” (அல்லது Control + Shift + “1”): எண்ணை இரண்டு தசம ஸ்தானத்தில் பார்மட் செய்திடும்.
Control + “$” (அல்லது Control + Shift + “4”): கரன்சியாக பார்மட்செய்திடும்.
Control + “%” (அல்லது Control + Shift + “5”): சதவீதத்தில் பார்மட் செய்திடும்.
Control + “/” (அல்லது Control + Shift + “7”): சயின்டிபிக் ஆக பார்மட் செய்யப்படும்.
Control + “&” (அல்லது Control + Shift + “6”):அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனைச் சுற்றி சிறிய பார்டர் அமைக்கப்படும்.

அழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்!

உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கான பணிகளை மட்டும் செய்வதில்லை. அவை மேனி எழிலை பாதுகாக்கவும், செய்கின்றன. நாம் சமையலறையில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக திகழ்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் உணவு சமைக்கவும் மட்டுமல்ல இது மிகச்சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இது பிரசவகால தழும்புக்களை போக்கவும், பித்தவெடிப்புகளை நீங்கும் மிகச்சிறந்த மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது.

உப்பு, சர்க்கரை

உப்பும் சர்க்கரையும் உணவு சமைப்பதில் இன்றியமையாத பொருளாக உள்ளது. அதேசமயம் இது முகத்திலும், கை, கால்களிலும் இறந்த செல்களை நீக்கப் பயன்படும் பொருளாக பயன்படுகிறது.

ப்ளீச் பவுடர்

முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் “திட்டுகள்” தோன்றும். கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்களும் விழும்! இந்த கருப்பு முகத்தை பளிச்சென ஆக்கித் காட்டுகிற “ப்ளீச்” பவுடர் பாசிப் பருப்பு மாவு. இதனுடன் கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவினால் முகத்தின் கருமை காணமல் போகும்.

பேஷியல் பழக்கூழ்

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,1 உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

அழகு ஆப்பிள்

ஆப்பிள் பழம் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

ஆப்பிள் ஷாம்பு

ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.

மின்னும் முகம்

நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும்.

வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்

மட்டன் நீலகிரி குருமா

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ருசியால் கட்டிப்போடும் சைடு டிஷ்களில் குருமாவும் ஒன்று. இந்த வாரம் நாம் நீலகிரி பாணியில் மட்டன் குருமா செய்யக் கற்றுக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 200 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம் (நறுக்கியது)
பட்டை – 2 கிராம்
லவங்கம் – 2 கிராம்,
ஏலக்காய் – 2 கிராம்
பச்சை மிளகாய் – 10 கிராம்
சோம்பு – 5 கிராம்
பூண்டு – 25 கிராம்,
இஞ்சி – 25 கிராம்
மிளகாய்த்தூள் – 10 கிராம்
தனியா – 15 கிராம்
தேங்காய் – 1/2 மூடி
கொத்தமல்லி – ஒரு கட்டு
எண்ணெய் – 50 மில்லி
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

* இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை விழுதாக்கவும்.

* தேங்காய், பச்சைமிளகாய், கொத்தமல்லி இவற்றை தனியே அரைக்கவும்,

* மட்டனை சுத்தம் செய்து நறுக்கி, தயிரில் ஊற வைக்கவும்.

* கடாயில் எண்ணெயைக் காய வைத்து, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு போட்டுத் தாளிக்கவும்.

* வெங்காய விழுதை வதக்கவும். தக்காளியை வதக்கி ஏனைய மசாலா பொருட்களை சேர்க்கவும். நன்கு `பிரை` செய்யவும்.

* மட்டனை சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காய் கலவை விழுதைச் சேர்க்கவும். போதுமான உப்பு சேர்த்து குறைந்த தீயில் வேக வைக்கவும்.

* மட்டனை இறக்குவதற்கு முன் மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, கறி மசாலா தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கிளறவும்.

* நறுக்கிய கொத்தமல்லி இலையைத் தூவி அலங்கரிக்கவும்.

* சாதம், தோசைக்குத் தொட்டுக்கொள்ள இந்த குருமா சுவையாக இருக்கும். இதே முறைப்படி மட்டனுக்குப் பதிலாக சிக்கன், மீன், நண்டு இவற்றை பயன்படுத்தியும் குருமா செய்யலாம்.

செப் தாமு