கொழுஞ்சியின் குண நலன்கள்


கொழுஞ்சியின் முழுத்தாவரமும் மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன. இது, மனிதர்களுக்கு உண்டாகும் மிதமான பேதி மற்றும் – பூச்சினை அகற்ற உதவுகிறது. கொழுஞ்சியின் விதைகளின் – சாறு, வயிற்றில் பூச்சிகள் உண்டாவதைத் தடுக்கும். குறிப்பாக குழந்தைகளின் தோல் வியாதிகளுக்குப் புறப்பூச்சாகப் பயன்படும். கொழுஞ்சியின் வேர் செரிமானம், தீராத வயிற்றுப்போக்கு இவற்றைக் குணப்படுத்தும். பட்டை மிளகுடன் பொடித்து வயிற்று வலிக்கு மருந்தாவம் பயன்படுத்தலாம்.