Daily Archives: ஒக்ரோபர் 29th, 2019

எப்போதும் போனே கதியென இருக்கீங்களா..? உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…

கூகுள் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள போன் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. செல்ஃபி கூட எடுக்க முடியாது. அப்படி என்ன இந்த கூகுள் போனில் சிறப்பு?

Continue reading →

SMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..!’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை

ஆப்பிளின் iMessage சேவைக்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பில் பல வருடங்களாகத் தயாராகி வந்த மெசேஜிங் முறை RCS. டெலிகாம்

Continue reading →

குருப்பெயர்ச்சி பலன்கள்!

கே.பி.வித்யாதரன்

துல்லிய பலன்கள்… எளிய பரிகாரங்களுடன்..

குருப்பெயர்ச்சி பலன்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்

குரு பகவானே போற்றி… போற்றி!

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை (விடிந்தால் செவ்வாய்க் கிழமை), 28 / 29.10.19 அன்று (அதிகாலை 3:40 மணி) குருபகவான் விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு சென்று அமர்கிறார்.

‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பது ஜோதிட மொழி. அப்படிப்பட்ட குருவருளை நமக்கு அள்ளித்தரும் ஸ்தோத்திரங்கள் சில உண்டு. இந்த ஸ்லோகங்களை தினமும் சொல்லி வர குருவின் அருள்பார்வை நம்மை விட்டு அகலாது. குறிப்பாக, திங்கள், வியாழன் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர நாள்களில், இந்த ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டு வந்தால், அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்; சகல சுபிட்சங்களும் உண்டாகும்.

குரு பகவான்

குரு பகவான்

பிரஹஸ்பதி தியானம்

ஸ்வர்ணாஸ்வ ரதமாரூடம் பீதத்வஜ ஸுஸோபிதம்

மேரோ: பிரதக்ஷிணம் ஸம்யகாசரந்தம் ஸுஸோபனம்

அபீஷ்டவரதம் தேவம் ஸர்வக்ஞம் ஸுரபூஜிதம்

ஸர்வகாமார்த்த ஸித்யர்த்தம் ப்ரணமாமி குரும் ஸதா

கருத்து : குருபகவான் பொன்நிறமான குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்து பயணிப்பவர். மேருமலையை தினமும் வலம் வருபவர். நாம் கேட்கும் வரங்களை அருள்பவர். தேவர்களால் பூஜிக்கப்படுபவர். இத்தகைய பெருமைகளை உடைய உம்மைப் பிரார்த்திக்கிறேன். சகலப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவீராக.

<!–more–>

குரு பகவான்

குரு பகவான்

வியாழபகவானைப் போற்றும் துதிப்பாடல்களில் ஒன்று இது. தினமும் வீட்டில் விளக்கேற்றிவைத்து, இந்தப் பாடலை 21 முறை சொல்லி வழிபட்டால், துன்பங்கள் எல்லாம் தீரும் என்பது ஐதிகம்.

குணமிகு வியாழ குருபகவானே

மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்

பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா

கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்

கருவான காலம் முதலாகக் காக்கும்

கதியானாய் தேவர் குருவே

ஓம் பிரஹஸ்பதியே போற்றி போற்றி!

– சைலபதி

குரு பகவான்
மேஷம்

மேஷம்

மேஷம்

ங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைந்திருந்து எதையும் எட்டாக்கனியாக்கியதுடன், மன அழுத்தத் தையும் தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி வீடான 9-ம் வீட்டில் நுழைவதால், வாழ்வில் புதிய வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் இப்போது கூடி வரும். அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வ மாகவும் செயல்படுவீர்கள்.

குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக் கும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

குரு பகவானின் பார்வை… குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், சோகமாக இருந்த உங்களின் முகம் இனி மலர்ச்சி அடையும். அழகும் இளமையும் கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டை குரு பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் செலவுகள் அதிகமாகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் அலைச்சலைக் குறைத்து உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம் கை கொடுக்கும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் தன சப்தமாதிபதியான சுக்கிரனுக்குரிய பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. ஆனால், பரணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் பூர்வபுண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால், அரசு வகையில் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். கார்த்திகை 1-ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 10-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் புதிய தெம்பு பிறக்கும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஷேர், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்குப் பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். பெண்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும்.

மாணவ மாணவியர் நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடங்குவார்கள். மொழித்திறனை வளர்த்துக்கொள்வார்கள். போட்டிகளில் பரிசு பெறுவார்கள். கலைத்துறையினருக்கு இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களுடைய படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

பரிகாரம்: சஷ்டி தினங்களில் சிறுவாபுரி முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள்; சந்தோஷம் பெருகும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம்

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சிபெற்று அமர்வதால் அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவார். பயணங்களும் தவிர்க்க முடியாத செலவுகளும் இருந்துகொண்டேயிருந்தாலும் வருமானம் குறையாது. உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும் பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக்கொள்வது நல்லது.

ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். வேலைச்சுமையால் தூக்கம் குறையும்.

குரு பகவானின் பார்வை: குரு பகவான் 2-ம் வீட்டைப்பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். குரு உங்களின் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்.

புண்ணியதலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். சிலர் உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் ராசிநாதனும் சஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் ஓரளவு பணம் வரும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.

மகரத்தில் குரு பகவான்: 28.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 9-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

வியாபாரத்தில் பழையதவறுகள் நிகழ்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலியுங்கள். கடையை இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல் மற்றும் ரசாயன வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களின் தவற்றைச் சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது.

பெண்கள் சிறிய சந்தர்ப்பங்களைக்கூடப் பயன்படுத்தி முன்னேறுவார்கள். திருமண விஷயத்தைப் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. மாணவ மாணவியர் கடைசிநேரத்தில் படிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

கலைத்துறையினர் போராடி சின்னச்சின்ன வாய்ப்புகளைப் பெறவேண்டி வரும். மூத்த கலைஞர்களை அரவணைத்துச் செல்வது நல்லது.

பரிகாரம்: பிரதோஷ நாளில், சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் திருப்புலீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்; வளம் பெருகும்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம்

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களின் ராசியை நேருக்குநேராகப் பார்க்கவிருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து புது வீடு கட்டி குடிபுகுவார்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

குரு பகவானின் பார்வை: குரு பகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மார்க்கெட் மூலமாகப் பணம் வரும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் விரயாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், பேச்சில் கனிவு பிறக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். திடீர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். சிலர் வீடு மாறுவார்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவார்கள்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதமான தனுசு ராசியில் செல்வதால் நெருக்கடிகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது துணிந்துசெய்யலாம். சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு லாபம் ஈட்டுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, பதிப்பகம், கட்டட உதிரிப் பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் புதிய உற்சாகம் பிறக்கும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும்.அதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவார்கள்.

பெண்கள் கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்வார்கள். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.

மாணவ மாணவியருக்கு அவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். விளையாட்டில் பரிசு பெறுவார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்பு இப்போது கூடிவரும். வருமானம் உயரும். பிரபல கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.

பரிகாரம்: ஏகாதசி தினங்களில், திருமலை வையாவூர் பிரசன்னவேங்கடேசரை வணங்கி வாருங்கள்; சகல சுபிட்சமும் கைகூடும்.

கடகம்

கடகம்

கடகம்

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 6-ம் வீட்டில் மறைகிறார். சகட குரு சங்கடங்கள் தருவாரோ என்று கலங்க வேண்டாம். குரு பகவான் ஆட்சிபெற்று அமர்வதால் நல்லதே நடக்கும்.

வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். கணவன் மனைவி பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. சிலர் பூர்வீக சொத்தை விற்றுவிட்டு வசதியான பகுதியில் குடியேறுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். எனவே, மாற்றுவழியை யோசித்து வையுங்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

குரு பகவானின் பார்வை: குரு பகவான் குடும்பஸ்தானத்தைப் பார்ப்ப தால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புதிய முதலீடுகள் செய்து சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் சுகஸ்தானாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாரின் உடல்நிலை சீராகும். தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் தனாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. இங்கிதமாகப் பேசி முக்கிய காரியங்களை முடிப்பீர்கள்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப்போன அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். நட்புவட்டம் விரிவடையும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். தொழில் போட்டிகள் அதிகமாகும். சிமென்ட், கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பதவி உயர்வு தாமதப்படும். புதிய உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.

பெண்கள் உயர்கல்வியில் சாதிப்பார்கள். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். பெற்றோருடன் இருந்துவந்த கருத்துமோதல் நீங்கும். மாணவ மாணவியர் யோகா, தியானம் செய்து நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுக்கு முழுநேரம் ஒதுக்கித் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினர் தங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கியைப் பெறுவார்கள். மூத்த கலைஞர் களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.

பரிகாரம்: கோபிச்செட்டிப்பாளையம் அருகில் பாரியூரில் அருளும் ஸ்ரீகொண்டத்து காளியை வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் பெருகும்.

சிம்மம்

சிம்மம்

சிம்மம்

போற்றுதல், தூற்றுதல் இரண்டையும் ஒன்றாகவே எண்ணும் நீங்கள், யாருக்காகவும் உங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாதவர். முன்வைத்த காலைப் பின்வைக்காத நீங்கள், திடீர் முடிவுகளை எடுத்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்வீர்கள்.

உங்களின் ராசிக்கு சுகஸ்தானமான 4-ம் வீட்டில் அமர்ந்து வீண் விரயத்தையும் ஏமாற்றங்களையும் தந்த குரு பகவான், 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் புதிய பாதையில் பயணிப்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல இடத்தில் பெண் அமைவார்.

குழந்தைபாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் உங்களின் பங்கு கைக்கு வரும். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவானின் பார்வை: உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் கௌரவம் கூடும். புதிய பதவிக்கு உங்களின் பெயர் பரிந்துரை செய்யப்படும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் மகம் நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவது நல்லது. எதிர்மறை எண்ணங்களுக்கு இடம்கொடுக்காதீர்கள். உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. பூரம், உத்திரம் 1-ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் ஜீவனாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். மகம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிநாதன் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் அமர்வதால் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6 – ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். பழைய கடனை அடைக்க புதிய வழி பிறக்கும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. இங்கிதமாகவும் இதமாகவும் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் புதிய தொழில் அல்லது புதிய கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக் கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். சிலர் சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். பெரிய பதவியில் அமர்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

பெண்கள் உயர்கல்வியில் வெற்றிபெறுவார்கள். தடைப்பட்ட திருமணம் நல்ல விதத்தில் முடியும். மாணவ மாணவியரின் நினைவாற்றல், அறிவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு.

கலைத்துறையினர் புகழடைவார்கள். சிலருக்கு விருது கிடைக்கும். உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். உங்களின் படைப்புத் திறன் அதிகரிக்கும்.

பரிகாரம்: கரூர் மாவட்டம், பாளையம் எனும் ஊரில் அருளும் கதிர்நரசிங்கப்பெருமாளை வழிபட்டு வாருங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி

கன்னி

கன்னி

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களின் பலம், பலவீனத்தைத் தெரிந்துகொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது நல்லது.

வீடு, மனை வாங்கும்போது சான்றிதழ்களைச் சரிபார்த்து வாங்குங்கள். உங்கள் சொத்தை விற்பதாக இருந்தால், ஒரே தவணையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக்கொண்டேயிருக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

குரு பகவானின் பார்வை: குரு உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்களின் உத்தியோகஸ்தானத்தைப் பார்ப்பதால் சிலருக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் எதிலும் நாட்டமின்மை, ஏமாற்றங்கள், திடீர்ச் செலவுகள் வரலாம். முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள். மகான்கள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் தனம் மற்றும் பாக்யாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் விரயாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பீர்கள். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 5 வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகி யும் அமர்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம் கைகூடும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் ஏற்றஇறக்கங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அவ்வப்போது மாறிவரும் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்து லாபம் ஈட்டப் பாருங்கள். ரியல் எஸ்டேட், உணவு, துணி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உயரதிகாரிகளின் உத்தரவுகளை உடனே செயல்படுத்துங்கள்.கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும்.சம்பள உயர்வும் தாமதமாகக் கிடைக்கும்.

பெண்களுக்குத் திருமணம் கைகூடும். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். சிலருக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வியிலும் முன்னேற்றம் உண்டு. மாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தின் கல்விப் பிரிவில் சேர அதிகம் செலவு செய்யவேண்டி வரும்.

கலைத்துறையினரின் கற்பனைத்திறன் வளரும்.உங்களின் படைப்புகளுக்குக் காப்புரிமை செய்து கொள்வது நல்லது. மூத்த கலைஞர்களின் ஆதரவு முன்னேற்றம் தரும்.

பரிகாரம்: புதன் கிழமைகளில், காஞ்சி மாவட்டம் குன்றத்தூரில் அருளும் திருஊரகப்பெருமாளை வழிபட்டு வாருங்கள்; தொட்டதெல்லாம் துலங்கும்.

துலாம்

துலாம்

துலாம்

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் போராடி முடிக்க வேண்டி வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமானவரை நம்ப வேண்டாம்.

கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல், நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. அக்கம்பக்கம் வீட்டாருடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

சிலர் உங்களை நேரில் பார்க்கும்போது நல்லவர் களாகவும் பார்க்காதபோது உங்களைப் பற்றி வேறுமாதிரியாகவும் பேசுவார்கள். கவனமாகப் பழகுங்கள். உறவினர்கள், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். இடைவெளிவிட்டு பழகுவது நல்லது.

குரு பகவானின் பார்வை: குரு உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு. குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவுக்குக் குறைவிருக்காது. தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தீராத பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் ராசியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர்ப் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் லாபாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனத்தில் பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 4-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் தாயாரின் உடல்நலனில் கவனமாக இருங்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கை யாளர்கள் வருவார்கள். கட்டட உதிரிப் பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோகெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைபட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத் தில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

பெண்களுக்குத் தடைப்பட்ட உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல இடத்தில் வரன் அமையும். போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று நல்ல வேலையில் அமர்வார்கள். மாணவ மாணவியர் விரும்பிய நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவார்கள். ஆசிரியரிடம் தயங்காமல் உங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளியுங்கள்.

கலைத்துறையினருக்குப் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். யதார்த்தமான உங்களின் படைப்புகளுக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.

பரிகாரம்: செங்கல்பட்டு அருகிலுள்ள திருவடிசூலம் பைரவரை வழிபட்டு வாருங்கள்; எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம்

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்களின் ராசியை விட்டு விலகி, தன் சொந்த வீடான 2-ம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பஸ்தானத்தில் குரு பகவான் அமர்வதால் இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்கு வார்கள். உடல்நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குரு பகவானின் பார்வை: குரு உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். வாழ்வின் முன்னேற்றத்துக்குக் காரணமான ஒருவரைச் சந்திப்பீர்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் விரயாதிபதியும் சப்தமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர்ப் பயணங்கள், செலவினங்கள் உண்டு. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் உங்களின் மதிப்பு மரியாதை கூடும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 3-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் சின்னச்சின்ன கவலைகள் வந்து போகும். இளையசகோதர வகையில் மனத்தாங்கல் வரலாம். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்வீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டு. சிலர் மொத்த வியாபாரத்துக்கு மாறுவார்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

மணமாகாத பெண்களுக்கு திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புதிய வேலையில் அமர்வார்கள்.

மாணவ மாணவியருக்கு நினைவாற்றல் கூடும். படிப்பில் இருந்த அலட்சியப்போக்கு மாறும். கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். சக மாணவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வார்கள்.

கலைத்துறையினருக்குப் போட்டிகள் குறையும். தடைப்பட்டிருந்த படைப்புகள் வெளியாகும். மக்கள் மத்தியில் பிரபலமடைவார்கள். வருமானம் உயரும்.

பரிகாரம்: கிருத்திகை தினங்களில், திருச் செந்தூர் முருகனை வழிபட்டு வாருங்கள்; சகல வளங்களும் பொங்கிப்பெருகும்.

தனுசு

தனுசு

தனுசு

ங்களின் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக ஆட்சிபெற்று அமர்வதால் பொறுப்புகளும் வேலைச்சுமையும் அதிகரிக்கும். அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்கள் ஆதரிப்பார்கள்.

ஜன்ம குருவாக இருப்பதால் அவ்வப்போது முன்கோபம் வரும். உங்களின் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். திடீரென்று அறிமுகமானவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம்.

குரு பகவானின் பார்வை: குரு, உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் தீரும். சிலர் தங்களின் பங்கை விற்று புதிய இடம் வாங்குவார்கள். தியானம், பொதுச்சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப்போன திருமணம் கைகூடும். போட்டிகளில் வெற்றிபெறுவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்தவை தாமதமானாலும் எதிர்பாராத சில வேலைகள் விரைந்து முடியும். 1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் சஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் உங்களின் செயலில் வேகம் கூடும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு.

மகரத்தில் குரு பகவான்: 28.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் திடீர் யோகம், பணவரவு, மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவியும் கிட்டும்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் இறங்காதீர்கள். புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். புதிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். கூட்டுத்தொழில் வேண்டாம்.

உத்தியோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக்கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். குறைகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளுங்கள். முறைப்படி தேர்வெழுதி வெற்றிபெற்றும் பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வைப் பெற போராட வேண்டியிருக்கும்.

பெண்கள் யதார்த்தமாகவும் விளையாட்டாகவும் எதையோ சொல்லப் போய் அதைச் சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

மாணவ மாணவியர் டி.வி, சினிமாவையெல்லாம் விட்டுவிட்டுப் படிப்பில் முழுகவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும் வாய்ப்புள்ளதால் ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பழகுங்கள்.

கலைத்துறையினர் விமர்சனங்களை ஏற்று, திருத்திக்கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும்.

பரிகாரம்: உத்திரமேரூர் அருகில், திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் அருளும் குரு பகவானை வழிபட்டு வாருங்கள்; வெற்றி கிட்டும்.

மகரம்

மகரம்

மகரம்

ங்களின் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகள், திடீர் யோகம் மற்றும் பணவரவு தந்துகொண்டிருந்த குரு பகவான், 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 12-ம் வீடான விரயஸ்தானத்தில் மறைவதால் வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும்.

புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசு அனுமதி கிடைத்து சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவார்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவன் மனைவிக்குள் வரும் சிறு பிரச்னைகளைப் பெரிதாக்க வேண்டாம்.

பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டாதீர்கள். மகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து முடிப்பது நல்லது. சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக யாரிடமும் வாக்குறுதி தர வேண்டாம்.

குரு பகவானின் பார்வை: குரு உங்களின் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நிலை சீராகும். நல்ல வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்குக் குடிபெயர்வீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் மூல நட்சத்திரத்தில் செல்வதால் ஒருபக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் உண்டு. பணவரவு குறையாது. புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துச் சிக்கல் ஒரு முடிவுக்கு வரும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் வருமானம் உயரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் அஷ்டமாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால், பயணத்தில் கவனமாக இருங்கள்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் பணிச்சுமை இருந்துகொண்டே இருக்கும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளில் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துபோட்டுப் பார்க்கவேண்டி வரும். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்; பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.

பெண்கள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பார்கள். உயர் கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள்.

மாணவ, மாணவியர் விளையாட்டுத்தனத்தைக் குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினர் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழனறு ஆலங்குடி குருபகவானை வழிபட்டு வாருங்கள்; தடைகள் நீங்கும்.

கும்பம்

கும்பம்

கும்பம்

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால் வாழ்வு வளம்பெறும். லாபஸ்தான குரு பகவான் குடும்பத்திலிருந்த பிரச்னைகளுக்கெல்லாம் நல்ல தீர்வுகளைத் தருவார்.

கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றிபெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடனாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும்.

புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். தாமதமாகிக் கொண்டிருந்த அரசாங்க விஷயங்களெல்லாம் நல்லவிதத்தில் முடிவடையும். உறவினர்கள் வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகும்.

குரு பகவானின் பார்வை: உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தன்னிச்சையாக, தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளையசகோதர வகையில் அனுகூலம் உண்டு.

குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும். குரு ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உற்சாகமடைவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். மனைவிவழியில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால், தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் சுகஸ்தானாதிபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர் யோகம், அதிரடி முன்னேற்றம் உண்டாகும். 6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 12-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் திடீர்ப் பயணங்கள் உண்டு.

வியாபாரத்தில் வரவு உயரும். சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொண்டு குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குச்சந்தை, இரும்பு, கட்டட உதிரிப் பாகங்களால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். அலுவலக சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சக ஊழியர்களிடையே உங்களின் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.

இளம் பெண்களுக்குக் கல்யாணம் கைகூடும். வரும். தடைபட்ட கல்வியைத் தொடர்வீர்கள். புதிய இடத்தில் உத்தியோகம் அமையும்.

மாணவ மாணவியர் ஏனோதானோ என்று படிக்காமல் இனி ஆர்வத்துடன் படிப்பார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். மதிப்பெண் உயரும்.

கலைத்துறையினர் இனி துளிர்த்தெழுந்து வீறுநடை போடுவார்கள். பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும். பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம்: காஞ்சி மாவட்டம், கீழ்படப்பையில் அருளும் ஸ்ரீவீரட்டேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்; மகிழ்ச்சி தங்கும்.

மீனம்

மீனம்

மீனம்

ங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து, தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றியடைய வைத்த குரு பகவான், 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்களின் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைகிறார். 10-ம் இடமென்றால் பதவியைப் பறித்து விடுவாரே என்றெல்லாம் பதற்றப்படாதீர்கள். நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்கவேண்டி வரும்.

உங்கள் திறமையையும் உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயத்தையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

குரு பகவானின் பார்வை: குரு உங்களின் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். சொத்து சேரும். குரு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள்.

கணவன் மனைவி ஒருவருக் கொருவர் மனம்விட்டுப் பேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நவீனரக வாகனம், செல்போன் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குரு, 6-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப்போன காரியங்களெல்லாம் நல்லவிதமாக முடியும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் மூல நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் பலவீனங்களைப் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக்கொள்வீர்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை சேவகாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர்ப் பயணங்களால் திணறுவீர்கள்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.அரசு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 11-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் விலகிச்சென்ற உறவினர்கள் வலியவந்து பேசத் தொடங்குவார்கள். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

வியாபாரத்தைக் கடன் வாங்கி விரிவுபடுத்திக்கொண்டிருக்க வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். கமிஷன், ரியல் எஸ்டேட், பெட்ரோ, கெமிக்கல், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைத்தும் பயன் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

இளம்பெண்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டிய முக்கியமான காலகட்டம். எதிர்காலம் பற்றி யோசித்து முடிவெடுங்கள்.

மாணவ மாணவியர் அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட பிரிவில் சேர போராடவேண்டியிருக்கும். கலைத் துறையினர் சிறிய வாய்ப்புகளாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துங்கள். புதிய நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

பரிகாரம்: காஞ்சி மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலிலுள்ள ஸ்ரீசிதம்பரம் சுவாமியை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்; முயற்சிகள் பலிதமாகும்.

டம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக! சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.

பன்னீர் இல்லாத அதிமுகவை உருவாக்கி, முதல்வர் பதவியில் அமரத்துடித்த சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலா இல்லாத அதிமுகவை உருவாக்கி, அதை தமது கட்டுப்பாட்டுக்குள்

Continue reading →