குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -மீனம்
மீனம்
உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து, தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றியடைய வைத்த குரு பகவான், 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்களின் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைகிறார். 10-ம் இடமென்றால் பதவியைப் பறித்து விடுவாரே என்றெல்லாம் பதற்றப்படாதீர்கள். நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்கவேண்டி வரும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -கும்பம்
.
கும்பம்
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால் வாழ்வு வளம்பெறும். லாபஸ்தான குரு பகவான் குடும்பத்திலிருந்த பிரச்னைகளுக்கெல்லாம் நல்ல தீர்வுகளைத் தருவார்.
குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -மகரம்
மகரம்
உங்களின் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகள், திடீர் யோகம் மற்றும் பணவரவு தந்துகொண்டிருந்த குரு பகவான், 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 12-ம் வீடான விரயஸ்தானத்தில் மறைவதால் வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -தனுசு
.
தனுசு
உங்களின் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக ஆட்சிபெற்று அமர்வதால் பொறுப்புகளும் வேலைச்சுமையும் அதிகரிக்கும். அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்கள் ஆதரிப்பார்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்
விருச்சிகம்
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்களின் ராசியை விட்டு விலகி, தன் சொந்த வீடான 2-ம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பஸ்தானத்தில் குரு பகவான் அமர்வதால் இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -துலாம்
துலாம்
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் போராடி முடிக்க வேண்டி வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமானவரை நம்ப வேண்டாம்.
குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -கன்னி
கன்னி
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களின் பலம், பலவீனத்தைத் தெரிந்துகொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது நல்லது.
குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -சிம்மம்
.
சிம்மம்
போற்றுதல், தூற்றுதல் இரண்டையும் ஒன்றாகவே எண்ணும் நீங்கள், யாருக்காகவும் உங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாதவர். முன்வைத்த காலைப் பின்வைக்காத நீங்கள், திடீர் முடிவுகளை எடுத்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்வீர்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -கடகம்
.
கடகம்
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 6-ம் வீட்டில் மறைகிறார். சகட குரு சங்கடங்கள் தருவாரோ என்று கலங்க வேண்டாம். குரு பகவான் ஆட்சிபெற்று அமர்வதால் நல்லதே நடக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -மிதுனம்
மிதுனம் :
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களின் ராசியை நேருக்குநேராகப் பார்க்கவிருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.